Friday, October 4, 2013

பல வியாதிகளைப் போக்ககும் சக்தி கொண்ட அரைக்கீரை

பெயருக்குத்தான் இது அரைக்கீரையை தவிர இக்கீரை எல்லா சத்துக்களும் கொண்ட முழுக்கீரை ஆகும். எல்லா மக்களுக்கும் ஏற்ற கீரை இது.


Amaranthus aristis
தென்னிந்தியாவில் தோட்டக்கால்களில் பயிரிடப்படும் அருமையான கீரை.எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் சுவையான- உன்னதமான கீரை இது. பல வியாதிகளைப் போக்கக்கூடிய சக்தி கொண்டது எந்த வியாதி கொண்டவர்களும் தாராளமாக தைரியமாக இக்கீரையை சாப்பிடலாம்.
அரைக்கீரையை தினம் தினம் சாப்பிட்டு வந்தால் தேகத்தில் வெப்பம் ஏறும் என்பார் சிலர். இக்கீரை வெப்பத்தை சமன்படுத்தும் குணம் கொண்டது. அரைக்கீரை விதையை அரைத்து மாவாக்கி உண்பார்கள். இந்த மாவு, பல வியாதிகளைப் போக்கும் சக்தி கொண்டது அரைக்கீரையைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலம் கண்களுக்கு குளிர்ச்சி தரும் இயல்பு கொண்டது.


அரைக்கீரையின் மருத்துவப் பயன்கள்

1. வாயு நீங்க:

இக்கீரையுடன் வெள்ளைப் பூண்டு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் இவைகளைச் சேர்த்துக் கடைந்து சாதத்துடன் சேர்த்து, தினசரி உண்போர்க்கு வாயுத் தொந்தரவுகள் நீங்கிவிடும்.

2. உடல்வலி போக:

சிலர், சிறிதளவில் வேலை செய்தாலும் உடம்பெல்லாம் வலி எடுக்கிறது என்பார்கள்.  இவர்களுக்கு உதவுகிறது அரைக்கீரை, மிளகு, பூண்டு, பெருங்காயம், சுக்கு இவைகளை அரைக்கீரையோடு சேர்த்து பொரியல் செய்து தொடர்ந்து பத்து நாட்கள் சாப்பிட்டுவந்தால் உடல்வலி போகும்.

3. சளி, இருமல் குணமாக:

கீரையுடன் அதிக அளவில் வெள்ளைப் பூண்டை சேர்த்துக் கடைந்து, தினசரி சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் மட்டுப்படும்.

4. வாய் ருசிக்கு:

சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் அவர்களுக்கு ருசியே தெரியாது. எதைச் சாப்பிட்டாலும் ஒரே மாதிரியாக மண்ணைத் தின்றதைப் போலவே இருக்கும். இப்படிப்பட்டவர்கள் அரைக்கீரையோடு, புளியையும் சேர்த்துக் கடைந்து ஒரு வாரத்திற்கு மதிய வேளையில் சாப்பிட்டுவந்தால் நாளடைவில் ருசி தெரியவரும்.

5. பசி எடுக்க:

பலருக்கு பசியே எடுக்காது. மூன்றுவேளைகள் சாப்பிடவேண்டும். என்ற கட்டாயத்திற்காக ஏதோ சாப்பிடுவார்கள்.
இ;ப்படிப்பட்டவர்கள் அரைக்கீரையோடு சீரகத்தைச் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டுவந்தால் நாளடைவில் பசியெடுக்கும். கடைந்த கீரையை சாப்பிட்டிற்கு முன் சாப்பிடுவது நல்லது.

6. பிரசவித்த பெண்களுக்குப் பலம்பெற:

பிரசவித்த பெண்கள் பலமிழந்து காணப்படுவது இயற்கை, நெய் விட்டு, கீரையை வதக்கியோ, கடைந்தோ சாப்பிட்டுவந்தால் தேகத்தில் பலம் ஏறும். குழந்தைக்குத் தேவையான பாலும் சுரக்கும்.

7. வளரும் குழந்தைகளுக்கு:

வளரும் குழந்தைகள் சுறுசுறுப்புடன் இருக்கவும். புத்திசாலித்தனத்துடன் பயிலவும். உடல் பலத்துடன் வளரவும், அரைக்கீரை அருமருந்தாகப் பயன்படுகிறது
இக்கீரையை வாரத்திற்கு மூன்று நாட்கள் எனத் தொடர்ந்து கொடுத்துவந்தால், குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

8. மலச்சிக்கல் தீர:

அரைக்கீரையை சிறிய வெங்காயத்துடன் வதக்கி தினசரி சாப்பிட்டுவந்தால் மலச்சிக்கல் வரவே வராது.

9. ஆண்மையை இழந்தவர்களுக்கு:

எதிலும் அளவு வேண்டும் என்பார்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். இன்றைய நவ நாகரிக யுகத்தில் திருமணமாகாத இளைஞர்களம், சரி, திருமணமானவர்களும் சரி, அளவுக்கு மீறிய உடல் தொடர்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதனால் ஏகப்பட்ட சக்தியினை இழக்கும் ஆபத்திற்கு ஆளாகின்றனர்.
இப்படிப்பட்பவர்களுக்கு சஞ்சீவினியாகக் கை கொடுக்கிறமு அரைக்கீரை, இழந்த சக்தியைர.மீட்டுத் தரும் ஆற்றல் கொண்டது இக்கீரை
அரைக்கீரையை நெய்யில் வதக்கி தொடர்ந்து நாற்பது நாட்கள் மதிய வேளையில் (உப்பு, புளி, காலம் சற்று தவிர்த்து ) சாப்பிட்டு வந்தால் தேகபுஷ்டி ஏற்படும். நரம்புத் தளர்ச்சி நீங்கி நரம்புகள் புத்துணர்ச்சி பெறும். தாம்பத்தியத்தில் சோர்வு ஏற்படாது
அரைக்கீரையில் வைட்டமின் 'ஏ"வும் "சி"யும் உள்ளன. அரைக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்கள் அடிக்கடி மருத்துவரிடம் செல்லவேண்டிய அவசியம் ஏற்படாது.

இக்கீரையை உண்பதால் தீரும் நோய்களாவன:

1. மலச்சிக்கல் தீரும்
2. குளிர்காய்ச்சல் நீங்கும்
3. ஜலதோஷம் போகும்
4. நரம்புத் தளர்ச்சி நீங்கும்
5. ஆண்மைக்குறைவு நீங்கும்
6. உடல்வலி தீரும்
7. உடல் பலவீனம் போகும்
8. வாத சம்பந்தப்பட்ட நோய்கள் போகும்
9. பிடரிவலி, நரம்புவலி ஆகியன நீங்கும்
10. பிரசவித்த பெண்கள் இழந்த பலத்தை மீட்டுத்தரும்
11. காய்ச்சல் நீங்கும்.

அரைக்கீரையைப் பற்றி -அதன் பெருமையைப் பற்றி அகத்தியர் பாடிய பழம்பாடல் ஒன்று:

காய்ச்சற் குளிர்சந்நி காயநோய் பலபிணிக்கும்
வாய்ச்ச கறிந்தானாய் வழங்குமே - கூச்சமில்லா
தெல்லா வற்கும் நல்லவித மியமுமா மென்றே
சொல்லு மரைக் கீரைச்சுவை.

இதன் பொருள் வருமாறு:

1. காய்ச்சல்ஈ குளிர்காய்ச்சல், ஜன்னி, காசம், வாத பித்தநோய் மற்றும் பல நோய்களை இந்த அரைக்கீரை தீர்க்கும்.
2. இக்கீரையை கூடுமானவரை பகலில் மட்டும் சாப்பிடுங்கள், இரவில் வேண்டாம்.
3. மூல நோயாளிகள் தவிர்ப்பது நல்லது
4. அரைக்கீரை விதையை சிறிதளவு எடுத்துக்கொண்டு, இதை நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி சூடு பொறுக்கும் பதத்தில் எடு;த்து வடிகட்டி தலைக்குத் தடவிவந்தால். முடி கருமையாகவும், செழிப்பாகவும் வளரும். நரையும் போகும்.
5. நோயின்றி வாழ தினமும் அரைக்கீரையை பயன்படுத்துங்கள்.

No comments:

Post a Comment