Thursday, August 14, 2014

குளிர்சாதன பெட்டியில் துர்நாற்றம் விலக எலுமிச்சை

வீட்டிலுள்ள குளிர்சாதன பெட்டியில் நாம் பல்வேறு பொருட்களை வைப்பது வழக்கம். பெரும்பாலும் உள்ளே வைக்கப்பட்ட பொருட்கள் கிருமிகளால் தாக்கப்படுவதால் துர்நாற்றம் வீசத் தொடங்குகிறது. 

அந்நிலையில் பஞ்சினை சிறிய பந்துபோல் சுருட்டி அதை எலுமிச்சை சாற்றில் நனைத்து அல்லது ஸ்பாஞ்சை எலுமிச்சை சாற்றில் நனைத்து குளிர்சாதனப் பெட்டிக்குள் சில மணி நேரங்கள் வைத்திருக்க துர்நாற்றம் விலகும். 

தலைமுடி வறண்டு போகாமல் இருக்க துளசி

  • கூந்தல் வறண்டுபோய் வேதனை அளிக்கிறதா? 50 கிராம் துளசி இலை, 10 கிராம் மிளகு இவற்றை கால் கிலோ நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வாரம் 2 முறை தலைக்குத் தேய்த்து, சீயக்காய் (அ) பயத்தமாவு போட்டு அலசுங்கள், கூந்தல் மிருதுவாகும். 


பொடுகும் வராது. புருவம், கண் இமைகளில் முடி இல்லாதவர்கள், இந்த எண்ணெயை அந்த இடங்களில் தடவினால், புசுபுசு வென முடி வளரும். பனிக்காலத்தில் ரொம்பவும் முடி கொட்டுமே.. என்ன செய்யலாம் என்கிறீர்களா?