Wednesday, July 9, 2014

முள்ளந்தண்டு எலும்பின் பாதிப்புகளை சரி செய்ய பூர்வத்தாசனம்

நாம் உண்ணும் உணவு, செயல்களும், சுற்றுப்புற சூழல்களும், தொழில் சார்ந்த வேலைகளும் நம் உடல் மற்றும் மனம் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
பூர்வத்தாசனம்


இவற்றால் ஏற்படும் நோய்களிலிருந்து விடுபட ஆயிரக்கணக்கில் நாம் பணத்தை செலவு செய்து வருகிறோம். பல்வேறு மருத்துவ முறைகளையும் பின்பற்றி வருகிறோம். இவற்றிற்கு சித்தர் பெருமக்கள் கண்டுபிடித்து அளித்த எளிய முறைகளே யோகாசனப் பயிற்சிகள் ஆகும். 

நாம் இந்த பூர்வத்தாசனம் பற்றிய செய்முறைகளையும் அதனால் உண்டாகும் நன்மைகளையுப் பற்றியும் அறிவோம்.

வியர்வை நாற்றம் விலக எளிய வழிகள்

நாற்றத்தை குறைக்க சில வழிகள் வாசனை நிறைந்த சோப்பு, சென்ட், பவுடர் போன்ற உடலின் வெளிப்புற சக்திகளால் மட்டும் இந்த துர்வாடையை நிரந்தரமாக தீர்க்க இயலாது. உடலின் உட்புறத்தையும் சுத்தமாய் வைத்திருக்க வேண்டும். மனதில் ஏற்படும் கொந்தளிப்பு, கோபம், எரிச்சல் போன்ற நிலைகளாலும் பித்தத்தின் சீற்றத்தை ஏற்படுத்த முடியும். அதனாலும் துர்வாடை வியர்வையில் வரக்கூடும்.




 உடல் மற்றும் மன அமைதியைத் தந்து பித்தத்தையம் ரத்தத்தின் சுத்தத்தையும் ஏற்படுத்தும் உணவு வகைகளான கரும்புச்சாறு, நெய், வெண்ணெய், சர்க்கரை கலந்து கடைந்த மோர், இனிக்கும் தயிர், புளிக்காத இனிக்கும் பழங்கள், பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரை, மணத்தக்காளி, வல்லாரை, சிறுகீரை, பூசணிக்காய், பரங்கிக்காய், வெள்ளரிப்பிஞ்ச, பழைய பச்சரிசி, கோதுமை, பச்சைப்பயறு போன்றவை சாப்பிட வேண்டும்.காரம், புளிப்பு,உப்பைக் குறைக்கவும். பானையில் வெட்டிவேர் போட்டு ஊறிய தண்ணீரை குடிப்பது நல்லது. 

எலும்புகளை பலப்படுத்த வாதாயநாசனம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்னும் முதுமொழிக்கு ஏற்ப, நாம் ஒவ்வொருவரும் நல்ல உடல் மற்றும் மனநிலையை பெற்று சீரும் சிறப்புடனும் வாழ வழைகின்றோம் இதன் மூலம் மகிழ்வான வாழ்வினை பெறுகிறோம்.


வாதாயநாசனம் பெயர் காரணம்:

வாதாயனம் என்றால் குதிரை என்று பொருள் இந்த ஆசனம் குதிரையின் முகத்தைப்போல் இருப்பதால் இதற்கு வாதாயனாசனம் என்று பெயர்.
வாதாயநாசனம்

வாதாயநாசனம் - செய்முறை:

  • முதலில் தரையில் உட்கார்ந்து வலது கால் பாதத்தை இடது தொடை மீது வைக்கவும். அதாவது அடிவயிற்றை வலது குதிகால் தொட்டு கொண்டிருக்க வேண்டும்.

  • அடுத்து உள்ளங்கைகளை உடலுக்கு பக்கவாட்டில் தரையில் ஊன்றி மேலே எழவும்

  • அப்படி செய்யும்போது வலது கால் மூட்டுப் பகுதியால் தரையில் முட்டிக் கொடுக்க வேண்டியிருக்கும். மேலும் இடது காலும் சற்று முன்பக்கமாக வளைந்திருக்கும்.

முகத்தில் வழியும் எண்ணெய்ப் பசை நீங்க...


  எண்ணெய்ப் பசை சருமத்தினர், அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதில் கடலைமாவு அல்லது பாசிப்பயிறு மாவு பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது கட்டுப்படும்.

  வெயிலில் சென்று வீடு திரும்பியதும், சிறிது தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறையும்.

  மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவலாம்.

நோய்களுக்கு அருமருந்து வசம்பு


  • Add caption
    இது ஆற்றங்கரை போன்ற நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இயற்கையிலேயே வளரும் ஒரு வகைப் பூண்டு இலைகள் ஒரு மீட்டர் நீளம் கூட இருக்கும். இதன் வேர் மஞ்சள் கிழங்கைப் போல் இருக்கும். நெருக்கமான கணுக்கள் உடைய வேர்தான் மருத்துவக் குணங்கள் நிரம்பியது. வசம்பு என்று வேரைத்தான் குறிப்பிடுவார்கள். அனைத்து நாட்டுமருந்து கடைகளிலும் கிடைக்கும். இது குழந்தைகளின் உடல் நலம் காப்பதில் சிறந்தது. அதனால் தான் இதைப் பிள்ளை வளர்த்தி என்று சொல்லுவார்கள். வசம்பின் மருத்துவக் குணங்களால் பட்டியலைப் பார்ப்போம்.