Monday, November 4, 2013

அஞ்சறைப் பெட்டி -கடுகு

நம் முன்னோர்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களையே உணவாக சாப்பிட்டு வந்தார்கள். ஒவ்வொரு வீட்டின் சமையல் அறையிலும் அஞ்சறைப் பெட்டி என்னும் அற்புத மருந்து பெட்டகம் இருக்கிறது. அதில் உள்ள உணவுப் பொருட்கள் அனைத்தும் மருத்துவ குணம் மிக்கவை. அவற்றின் மருத்துவ குணங்களை அறிந்து உபயோகித்தால் நாம் நூறாண் டு நோய்நொடியின்றி வாழலாம்.


கடுகில் இரண் டு வகை உண்டு. அவை கருங்கடுகு மற்றும் வெண்கடுகு.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது‚… என்ற பழமொழிக்கேற்ப எண்ணற்ற சத்துக்களையும், மருத்துவ குணங்ளையும் சின்னஞ்சிறிய கடுகு தன்னகத்தே கொண்டுள்ளது. ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே நாம் கடுகை பயன்படுத்தி வந்துள்ளோம்.

காய்கறிகளின் மருத்துவம்: புண்களை ஆற்றும் பூசணிக்காய்

கிராமப்புறங்களில் மார்கழி மாதம் முழுவதும் அனைவரின் வீட்டு கோலங்களின் மீது தவறாமல இடம் பெறுவது இந்த பூசணிக் பூ. இதை வைத்து திரைப்பட கவிஞர்கள் பல பாடல்களை இயற்றியுள்ளனர். இதிலிருந்தே பூசணிக்காயின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளில் முக்கியமானதும், நமது உடலுக்கு பல வகைகளில் பயன்படக் கூடியதுமான பூசணிக்காய் பற்றி காணலாம்.