Saturday, October 5, 2013

உடலுக்கு நலம் தரும் சிறு தானியங்கள்:


உணவே மருந்து என்று நம்முன்னோர்கள் கூறினார்கள். அன்றைக்கு அவர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவுதான் இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக விளங்குகிறது. இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் மாறிவரும் உணவுப் பழக்கம்தான். இன்றைக்கு பாஸ்ட் ஃபுட் கலாச்சாரமாகிவிட்டது. இதுவே நோய்களுக்கு ஆதாரமாகவும் மாறிவிட்டது. இதிலிருந்து நம் உடலை பாதுகாக்க மீண்டும் முற்காலத்திய உணவு முறைக்கு மாறவேண்டும் என்கின்றனர்
உணவியல் நிபுணர்கள்.

 தானியங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றன. அரிசி, கோதுமை, பார்லி, வரகு, கம்பு, சோளம், சாமை போன்ற தானியங்களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், கொழுப்பு சத்து குறையும். உடல் பருமன் ஏற்படாது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

தங்க 'புஷ்பம்" செம்பருத்தி பூவின் மருத்துவக் குணம்

தங்க 'புஷ்பம்" செம்பருத்தி

இயற்கையின் அரிய படைப்புகளில் இந்த பூக்கள் தான் எத்தனை அழகு நறுமணம் கொண்ட இவை கண்களுக்கு விருந்தாக மட்டுமல்ல மருந்தாகவும் பயன்படுகின்றன.
Botanical Name : Hibiscus Rosa - Sinensis

வீட்டின் முன்பும், தோட்டங்களிலும், பூங்காக்களிலும் அழகு சேர்க்கும் செம்பருத்திப் பூவின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்துக் கொள்வோம்.
செம்பருத்திப் பூவை சீனாவும் இந்தியாவும் தங்கள் நாட்டு  என வருணிக்கின்றன. ஆசியாவே இதன் பிறப்பிடம். மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்திதான். இந்தப் பூக்களின் நிறத்தையும், அடுக்கையும் வைத்து பலவகைகளாக பிரித்துள்ளனர்.

நோயின்றி ஆரோக்கியமா வாழ உலர்ந்த திராட்சை

உலர்ந்த திராட்சை:


திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு.
Dry Grapes

இந்த பழங்களை உலரவைத்து எடுக்கப்படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள். ஆரம்ப காலத்தில் அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்ததால் இதற்கு கிசுமுசுப் பழம் என பெயரிட்டனர்.

பொதுவாக இந்தப் பழத்தை கேக், பாயசம், பிஸ்கட் என்று பலகார வகைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் வைட்டமின் ‘பி’ மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

அருமருந்தான அருகம்புல்

ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி என்றும் நீடூழி வாழ்க”
இன்றும் கூட சில திருமண நிகழ்ச்சிகளில் மண மக்களை வாழ்த்துவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
Cynodon dactylon


அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால்கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் அருகம்புல்லை உதாரணமாகச் சொல்லி வாழ்த்துவதைப் பார்க்கும்போதே அதன் மகத்துவம் நமக்குத் தெரியவரும்.

அருகம்புல்லை பிள்ளையார் புல் என்று அழைப்பார்கள். வீடுகளில் அருகை சாணம் அல்லது மஞ்சளில் நட்டு வைத்து வணங்குவார்கள்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும் பேரீச்சம் பழம்

இயற்கையின் கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம்.  பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.  அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.

இது மிகவும் சத்துள்ள பழமாகும்.  குழந்தைகள் முதல் பெரியவர்கள்  வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம்.  இது ஆப்பிரிக்கா, அரபு நாடுகளில் மட்டுமே அதிகம் விளைகின்றது.
வெப்பம் அதிகமுள்ள பாலைவனப் பகுதிகள் இதன் வளர்ச்சிக்கு ஏற்றதாகும்.  இதற்கேற்ற தட்ப வெப்ப நிலை நம் நாட்டில் இல்லாததால் இங்கு விளைவதில்லை.  இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து  இறக்குமதி செய்யப்படுகிறது.

பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும்.

கணுக்கால் வலியா ! கவலை வேண்டாம்!

தோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, கை, கால் மூட்டு வலியைப் போன்று கால் பாதங்களில் அதாவது கணுக்காலில் வலி ஏற்படுகின்றது.  இந்த கணுக்கால் வலி ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கும்.  கணுக்கால் வலியானது 35 வயது முதல் ஆரம்பிக்கத் தொடங்கும்.  உடற்கூறுகளின் தன்மையைப் பொறுத்து இதன் பாதிப்பு இருக்கும்.
மனித உடலில் உள்ள வாதம், பித்தம்,கபம் என்ற மூன்று தோஷங்களின் பாதிப்பினாலே கணுக்கால் வலி உண்டாகின்றது.

கணுக்கால் அதாவது கால் பாதத்தை நன்கு ஊன்ற முடியாமல் குதிகாலில் பொறுக்கமுடியாத வலி உண்டாகும்.  காலை அழுத்தி, ஊன்ற முடியாது.  மேலும் சிறு கட்டி போல் (எலும்புபோல்) காணப்படும்.

காலை எழுந்தவுடன் கால் ஊன்றி நடக்க முடியாது. வெயில் வர வர கொஞ்சம் கொஞ்சமாக வலி குறையும்.

பின் மாலை நேரத்திலும் வலி இருக்கும். மாடிப் படிகளில் ஏறி இறங்க முடியாது.  கால் பாதத்தில் ஒருவிதமான எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும்.  காலை அழுத்தி ஊன்றி நடக்காததால் நரம்புகளில் சுளுக்கு ஏற்பட்டு தொடையிடுக்கில் நெறி கட்டிக் கொள்ளும்.  இதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் நாளடைவில் நடக்க இயலாமல் போய்விடும்.

கணுக்கால் வலி ஏற்பட காரணங்கள்

வாதம், பித்தம், கபம் போன்ற முக்குற்றங்களில் பித்தநீர் அதிகமாகி வாதநீருடன் சேரும்போது தலையில் நீராகக் கோர்த்து தலை வலியை ஏற்படுத்துகின்றது.  இப்படி தலையில் கோர்க்கும் நீர் கழுத்து வழியாக இறங்கி காலின் அடிப்பகுதியில் கணுக்காலில் தங்கிவிடுகின்றது.

இதுபோல் கப தோஷம் (சூலை) பித்த நீருடன் கபம் சேர்ந்து நீராக மாறி. உடலின் தன்மைக்கேற்ப பாதம், கணுக்கால் பகுதியில் நீர் கோர்த்து கட்டி போல் இறுகி வலியை உருவாக்குகின்றது.
பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஒழுங்கற்ற உதிரப்போக்கு, நாள்கடந்த மாதவிலக்கு, ஜலதோஷம் போன்றவற்றால் கணுக்காலில் வலி உண்டாகும்.

உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெங்காயம்


அக்காலத்தில் நம் முன்னோர்கள் வேலைக்கு செல்லும் முன் சாப்பிடும் ஒரே உணவு பழைய சாதமும், வெங்காயமும் இதற்கு இணையான, சத்தான உணவு ஏதுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதை சாப்பிட்டு நன்றாக வேலை செய்து வந்ததால் நாம் முன்னோர்கள் எந்த வித நோயும். அணுகாமல் நீண்ட காலம் ஆரோக்கியமதக வாழ்ந்தனர். ஆனால் இன்றோ, எந்த உணவு சுவையாக இருக்கிறது என்று தேடிப்பிடித்து சாப்பிடுகிறோமே தவிர, எது சத்தான உணவு, எதை சாப்பிட்டால் நம் உடலுக்கு நல்லது என்பதை பற்றி எல்லாம் நாம் கவலைப்படுவதே இல்லை.

அதனால் தான் எதிர்ப்பு சக்தியே இல்லாமல் சிறு வியாதிகளுக்கே நாம் மருத்துவரை அணுக வேண்டிய நிலையில் இருக்கிறோம். சத்தான காய்கறிகள் தான் நம் உடலை பாதுகாக்கும் மருத்துவர்கள். அந்த வகையில், சமையலுக்கு கூடுதல் சுவை சேர்க்கும் காய்கறிகளில் ஒன்றான வெங்காயத்தைப் பற்றியும், அதன் பயன்பாடுகளைப் பற்றியும் காண்போம்.