Saturday, October 5, 2013

உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெங்காயம்


அக்காலத்தில் நம் முன்னோர்கள் வேலைக்கு செல்லும் முன் சாப்பிடும் ஒரே உணவு பழைய சாதமும், வெங்காயமும் இதற்கு இணையான, சத்தான உணவு ஏதுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதை சாப்பிட்டு நன்றாக வேலை செய்து வந்ததால் நாம் முன்னோர்கள் எந்த வித நோயும். அணுகாமல் நீண்ட காலம் ஆரோக்கியமதக வாழ்ந்தனர். ஆனால் இன்றோ, எந்த உணவு சுவையாக இருக்கிறது என்று தேடிப்பிடித்து சாப்பிடுகிறோமே தவிர, எது சத்தான உணவு, எதை சாப்பிட்டால் நம் உடலுக்கு நல்லது என்பதை பற்றி எல்லாம் நாம் கவலைப்படுவதே இல்லை.

அதனால் தான் எதிர்ப்பு சக்தியே இல்லாமல் சிறு வியாதிகளுக்கே நாம் மருத்துவரை அணுக வேண்டிய நிலையில் இருக்கிறோம். சத்தான காய்கறிகள் தான் நம் உடலை பாதுகாக்கும் மருத்துவர்கள். அந்த வகையில், சமையலுக்கு கூடுதல் சுவை சேர்க்கும் காய்கறிகளில் ஒன்றான வெங்காயத்தைப் பற்றியும், அதன் பயன்பாடுகளைப் பற்றியும் காண்போம்.


வெங்காயம் என்பது வெங்கு+ காயம். வெங்கு என்றால் சீர்படுத்துதல், வீரியப்படுத்துதல், காயம் என்றால் உடல். அதாவது உடலை சீர்படுத்தி ஊக்கப்படுத்துவது என்பதே இதன் பொருள்.
இது சிறிய செடி வகையைச் சார்ந்தது மித வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. இதன் இலைகளை வெங்காயத்தாள் என அழைக்கிறோம். பூமிக்கு அடியில் மண்ணில் புதைந்து காணப்படும். குமிழ் தண்டு பகுதியே நாம் உண்ணும் வெங்காயமாகும். இதில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என இரண்டு வகைகள் உண்டு. இவற்றில் சின்ன வெங்காயமே சத்து மிகுந்ததானும்.

மருத்துவ குணமுடைய பகுதிகள்:

வெங்காயத்தாள், குமிழ் தண்டு பகுதிகளில் நோய் தீர்க்கும் சத்துப் பொருட்கள் அதிகம் காணப்படுகிறது.

பாடல்:


வெப்பமூ லங்கிரங்தி வீறுரத்த பித்தமுடன்

செப்புநா அக்கரந்தீ ராத்தாகம் - வெப்புக்
கடுப்பறுமந் தஞ்சந்தி காசம்வயிற் றுப்பல்
தடிப்பேறும் வெங்காயத்தால்! "          - அகத்தியர் குணபாடம்

வெங்காயம் உடல் வெப்பத்தை தணிக்கம். மூல நோயை குணப்படுத்தும். தோல் நோயான சிரங்கு நோயை முற்றிலும் நீக்கும். வாத, பித்த, கப தோஷத்தில் பித்த    தோஷத்தில் உண்டாகும்.

நோய்களை குணப்படுத்தும். தீராத தாகத்தை தணிக்கும். உஷ்ணத்தால் உண்டாகும் கழிச்சல் நோயை குணமாக்கும்.

வெங்காயத்தின் பொதுவான பயன்கள்:

இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் சிறிதளவு வெங்காய சாறுடன் நீர் சேர்த்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
வெங்காயத்தின் சுபாவம் குளிர்ச்சி. ஆகவே சிறுநீரைப் பெருக்கி வெளியேற்றும்.
நாலைந்து வெங்காயத்தை தோல் உரித்து அதனுடன் சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர பித்தம் குறையும். பித்த ஏப்பமும் மறையும்.
வெங்காயத்தை அவித்து, அதனுடன் சிறிது தேன் மற்றும் கற்கண்டை சேர்த்து சாப்பிட்டு வர உடல் பலம் பெறும்.
வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் சிறிது இலவம் பிசின், சிறிதளவு கற்கண்டுகளை தூள் செய்து பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வர அனைத்து வகையான மூல நோய்களிலிருந்தும் விடுதலை பெறலாம்.
உஷ்ணத்தால் வரும் ஆசனக் கடுப்பு நீங்க வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, வதக்கி சாப்பிட்டு வர ஆசனக் கடுப்பு நீங்கும்.
வெங்காயத்தை நறுக்கி, மிக்ஸியிலிட்டு சாறு பிழிந்து அதனுடன் மோர் கலந்து சாப்பிட்டு வர ஆசனக் கடுப்பு நீங்கும்.
வயிறு சம்மந்தமான உபாதைகளுக்கு (வயிற்று பொருமல், வலி) வெங்காயச் சாறு நல்ல பலனைத் தரும்.
உடல் வெப்ப நிலையை சமநிலையில் வைக்க வெங்காயத்தை, கீரைகளுடன் சேர்த்து வதக்கி பொரியல் செய்து சாப்பிட்டு வரலாம்.
வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் காலை, மாலை சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி நீங்கும்.
படை மற்றும் தேமல் உள்ள இடங்களில் வெங்காயட் மற்றும் பூண்டுப் பல் (1) சேர்த்து அரைத்து பூசி வர தேமல் மறையும். தோல் பழைய நிறத்தை அடையும்.
சீதபேதியால் அவதிப்படுபவர்கள் வெங்காயத்தை சாறு பிழிந்து அதனுடன்தேன் அல்லது கற்கண்டு சேர்த்து மூன்று வேளை சாப்பிட்டு வர சீதபேதி நிற்கும்.  
அஜீரணக் கோளாறுகளினால் அவதிப்படுபவர்கள் வெங்காயத்தை தாராளமாக பயன்படுத்தி வர சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துவதோடு செரியாமை கோளாறுகளையும் நீக்கும்.


வாய்புண் நீங்க:



உதடு மற்றும் நாக்கில் புண் வந்து அவதிப்படுபவர்கள் வெங்காயத்த வேகவைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட்டு வர, இதிலிருக்கும் கந்தகப் பொருட்கள், புண்களில் உள்ள கிருமிகளை அழித்து வாய் பகுதிகளை பாதுகாக்கும். புண்களும் விரைவில் குணமானும்.



இரத்த உறைவு நீங்க:



இருதயத்தில் உள்ள இரத்த நாளங்கள் சுருங்கி இரத்த உறைவு ஏற்படும்போது நெஞ்சு வலி தோன்றும். அப்போது வெங்காயத்தை சாப்பிட்டால் உடனே இரத்தம் உறைவது தடுக்கப்பட்டு, இருதயத்திற்கு தடையின்றி நாளம் வழியே இரத்தம் செல்லும். நெஞ்சு வலியும் உடனே நீங்கும்.



ஆண்மை பெறுக:



விந்தணு உற்பத்தி குறைவாக உள்ளவர்கள், உறவில் ஆர்வமில்லாதவர்கள், உரிக்கப்பட்ட வெள்ளை நிற வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் வெண்ணெய் சேர்த்து வதக்க வேண்டும். பின் அதனுடன் சம அளவு தேன் சேர்த்து நன்கு கலக்கி காற்று புகாத வண்ணம் பாட்டிலில் இறுக மூடி வைத்து கொண்டு தினமும் காலை மற்றும் இரவு வேளையில் உணவிற்கு முன் (வெறும் வயிற்றில்) ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர விந்தணு உற்பத்தி பெருகும்.



இரத்த சோகை நீங்க:



வெங்காயத்தை குழம்பிலிட்டோஈ மற்ற காய்கறி (அ) கீரைகளுடன் தாராளமாக சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வர, இதிலிருக்கும் இரும்புச் சத்து இரத்த சோகை நோயை நீக்கி, உடலில் இரத்தம் பெறுக செய்யும். மேலும், இரத்தத்திலுள்ள அசுத்தங்களை நீக்கி சுத்தப்படுத்துவதோடு தங்கு தடையின்றி உடலின் அனைத்து பகுதிகளுக்கும் இரத்தம் பாய உதவுகிறது.



நுரையீரல் தொற்று நீங்க:



புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு அதிகம் இருக்கும். இவர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்ஸ் (15 மி.லி) வெங்காயச் சாற்றை தினமும் மூன்று வேளை அருந்த நுரையீரல் பலம் பெறும். நுரையீரலில் உள்ள நோய் தொற்று நீங்கி, சுவாசம் தடையின்றி நடைபெறும்.



குளிர்கால ஜலதோஷம் நீங்க:



குளர்காலத்தில் ஏற்படும் ஜலதோஷம், இருமல், மார்பு சளி, சளிக்காய்ச்சல் ஆகியவைகளிலிருந்து நிவாரணம் பெற வெங்காயத்தை நறுக்கி மிக்ஸியிலிட்டு அரைத்து அதனுடன் சம அளவு தேன் சேர்த்து தினமும் நான்கு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர மேற்கண்ட அனைத்து உபாதைகளும் நீங்கும். மேலும் மூச்சுக் குழல் சம்மந்தமான அனைத்து நோய்களும் குணமாகும்.



பல் வலி நீங்க:



பல் வலியால் அவதிப்படுபவர்கள் ஒலு துண்டு வெங்காயத்தை வலியுள்ள இடத்தில் வைக்க பல் வலி குறையும். மேலும் பற்களில் கிருமி தொற்றுகளட (பாக்டீரியாக்கள்) தங்காமல் இருக்க, தினமும் ஒரு வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடுவதால் கிருமிகள் அழியும். பற்களும், ஈறுகளும் பாதிக்கப்படுவதும் தடுக்கப்படும்.



பருக்கள் மறைய:



முகத்தில் நிறைய பருக்கள் தோன்றி முக அழகை கெடுக்கும் இவர்கள் வெங்காயத்தை வதக்கி இளம் சூட்டுடன் ஒரு துணியில் வைத்து கட்டி பருக்கள் உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுத்து வர பருக்கள் மறைந்து முகம் வசீகரமாகும்.



காது வலி நீங்க:



காது வலி மற்றும் காதிரைச்சலால் அவதிப்படுபவர்கள், வெங்காயத்தை சாறு பிழிந்து அதில் ஒரு சுத்தமான துணியை நனைத்து அத்துணியை பிழிந்து சில துளிகளை காதில் விட காது வலி நீங்கும். மேலும் மயக்கமுற்றவர்களின் மூர்ச்சை தெளிவிக்க வெங்காயச் சாற்றை சில துளி மூக்கில் விட மயக்கம் தெளிந்து எழுவார்கள்.



கட்டிகள் உடைய:



வெங்காயத்தை அடுப்பிலிட்டு நன்கு சுட்டு அதனுடன் சிறிதளவு மஞ்சள், சிறிது நெய் சேர்த்து பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக் கட்ட, கட்டிகள் உடனே பழுத்து உடையும். புண்கள் விரைவில் ஆறும்.



பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் நீங்க:



பெண்களின் கருப்பை கட்டிகள்இ சூதக வலி, மாதவிடாய் கோளாறு, மாத விடாய் காலங்களில் வரும் வலி, மேலும் ஒரு சில பேருக்கு இரண்டு தொடைகளோடு இடுப்பு மற்றும் அடி வயிற்றில் தோன்றும் வலி, அந்நேரத்தில் வரும் தலைவலி ஆகியவற்றிற்கு நான்கு வெங்காயத்துடன் ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் சோம்பு வெற்றிலை இரண்டு, இங்சி ஒரு துண்டு இவை அனைத்தையும் சேர்த்து அரைத்து 40 மி.லி. முதல் 50- மி.லி வரை தண்ணீரில் கலந்து வடிகட்டி மாதவிடாய் காலங்களில் நான்கைந்து நாட்கள் குடிக்க வேண்டும். இவ்வாறு நான்கைந்து மாதங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும் மற்றும் கருப்பை நோயின்றி இருக்கும். மேலும் வலிகள் அனைத்தும் நீங்கும்.



இது பழங்காலங்களில் பெண்கள் பயன்படுத்தி வந்த வைத்தியமாகும். குறிப்பாக பழங்காலங்களில் குழந்தை பேறின்றி இருந்த பெண்கள் இதே மருத்துவ முறையை மேற்கொண்டு பயனடைந்தனர். இது காலம் கண்டறிந்த உண்மை.


No comments:

Post a Comment