Sunday, September 29, 2013

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு

சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் உணவு கட்டுபாட்டை மேற்கொள்வது அவசியம். எந்த உணவுகளை சாப்பிடவேண்டும் என்பதை தெரிந்து கொண்டு  சாப்பிட்டால் சிறுநீரககல் பிரச்சனையை சரிசெய்து விடலாம். எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்

காரட், பாகற்காய், இளநீர்: இதில் பொட்டாசியம், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன. இவை சிறுசீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக்  கரைத்து படிய விடாமல் தடுக்கும் சக்தியுடையது. கேரட்,பாகற்காய்களில் பொதுவாக சிறுநீரகக் கற்களின் படிகங்களை தடுக்கும் பலவித தாது  உப்புக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

பல் வலியைப் போக்கும் கண்டங்கத்திரி!

பல் வலியைப் போக்கும் கண்டங்கத்திரி!



கண்டங்கத்திரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய் என்கின்ற வேறு பெயர்கள் உண்டு. சித்த மருந்துகளில் புகழ் பெற்ற மருந்து 'தசமூலம்' என்பதாகும். இது பத்து மூலிகைகளின் வேர்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இந்த பத்து வகை மூலிகைகளில் கண்டங்கத்திரியும் ஒன்றாகும்.

மருத்துவ பயன்கள்:

கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாகக் காய்ச்சி வடித்துக்கொள்ள வேண்டும்.