Thursday, October 3, 2013

உளுந்து - மருத்துவப் பயன்கள்



நோயின் பாதிப்பு நீங்க:



கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும்.

இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.

உடலை வலுவாக்கும் மூங்கில் நெல் (Bamboo Rice)



மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும். இந்த பூவிலிருந்து வரும் காய்களை நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். முற்றி காய்ந்த பின் அவை
தானாகவே உதிர்கின்றன. பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்கள் இந்த நெல்லினை வேக வைத்து உண்பதால் அவர்களின் உடல் வலிமையாக உள்ளது. 40 வருடங்கள் முற்றிய மூங்கில்கள் பூத்து காய்த்த பின், அதோடு காய்ந்து விடும்.

சுண்ணாம்பு மருத்துவம்



சுண்ணாம்பில் இரண்டு வகை உண்டு. ஒன்று கல் சுண்ணாம்பு. மற்றொன்று கிளிஞ்சல் சுண்ணாம்பு. இவை இரண்டும் பயனுள்ளதே. விஷ ஜந்துக்கள் நம்மைக் கடித்து விட்டால் கடித்த இடத்தில் சுண்ணாம்பு, மஞ்சள், உப்பு இம்மூன்றையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து தடவினால் விஷம் நீங்கும்.

விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு



இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.

தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்



கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது.

மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும்.

கற்றாழை மருத்துவ நன்மைகள்





கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது.

 இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.

ஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி



காலத்துக்கு ஏத்த மாதிரி, இடத்துக்கு தகுந்த மாதிரி சில நோய் வந்து மனுஷன பாடாப்படுத்திரும்.
அதுலயும் சில நோய் இருக்குற இடம் தெரியாது. ஆனா… ஆளை உண்டு, இல்லைனு ஆக்கிடும்.

இந்த… கால் ஆணி இருக்கே, அது வந்துட்டா உயிர் போற மாதிரி வலி எடுக்கும். சிலர் என்ன வைத்தியம் செய்றதுனு தெரியாம பனைவெல்லத்தை கால்ஆணி உள்ள இடத்துல வச்சு தீக்குச்சியை பத்த வைப்பாங்க. இன்னுஞ்சிலர் பிளேட வச்சு ரத்தம்வர்ற அளவுக்கு ரவுண்ட் ரவுண்டா அறுத்து எடுப்பாங்க. எவ்வளவு கொடுமையானவைத்தியம் பாருங்க. கைவசம் எளிமையான வைத்தியமெல்லாம் இருக்கும் போது எதுக்காகஇந்த முரட்டு வைத்தியம்

பப்பாளி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்


அனைத்து பழங்களுக்கும் முதன்மை பழமாக விளங்கும் பழம் எது என்று தெரியுமா? அது பப்பாளி பழம் தான். மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில் பப்பாளி பழத்தில் தான் மிகுதியான உடல்நல நன்மைகள் அடங்கியுள்ளது. இதய குழாய்கள் முதல் பெருங்குடல் வரை பல நன்மை இருக்கிறது. இதில் உள்ள மற்ற நன்மைகள் - இது அனைத்து காலங்களிலும் மலிவாக கிடைக்கின்ற பழமாகும். வருடம் முழுவதும் அனைத்து இந்திய சந்தைகளிலும் கிடைக்கக்கூடிய பழம் இது. இன்னும் சொல்லப்போனால் பலரது வீட்டு தோட்டத்தில் பப்பாளி மரம் இருக்கும். சரி, அப்படி என்ன பப்பாளியில் முக்கியமாக அடங்கியுள்ளது? பப்பாளியில் உள்ள உடல் நல நன்மைகளைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாமா? பப்பாளி மட்டுமல்ல அதன் விதிகளும் கூட உதவி புரியும்.

கருப்பு ஏலக்காயின் பயன்கள்

Block Cardomum

கருப்பு ஏலக்காய் என்பது வீரியமிக்க வாசனையுடன் விளங்கும் ஒரு சிறிய செடியாகும். இதில் இரண்டு வகைகள் உள்ளது - 'கருப்பு ஏலக்காய்' மற்றும் 'பச்சை ஏலக்காய்'. இவை இரண்டில் கருப்பு அல்லது மலை ஏலக்காய் தான் புகழ் பெற்ற வாசனை பொருளாகும். அதனுடைய தனித்துவம் வாய்ந்த சுவை மற்றும் வாசனையால் இதனை சமையலுக்கு அனேக மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த செடியின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதிமுக்கிய எண்ணெய்களில் ஒன்றாகும்.

நரை முடியை கருமையாக்க உதவும் பொருட்கள்


ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கவழக்கங்களால், முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல், நரைமுடி, கூந்தல் உதிர்தல் போன்றவை ஏற்படுவதோடு, வழுக்கை தலைக்கும் ஆளாகின்றனர். ஆகவே இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தால், அதற்கு முடியை சரியாக பராமரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். பொதுவாக நரைமுடியை போக்குவது சற்று கடினமானதாக இருந்தாலும், முறையாக நம்பிக்கையுடன் முடியை சரியாக பராமரித்து வந்தால், நிச்சயம் முடியை கருமையாக்க முடியும். இங்கு அத்தகைய நரைமுடியை கருமையாக்க உதவும் சில பொருட்களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை தவறாமல் பின்பற்றி வாருங்கள். நிச்சயம் நரை முடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

மலடு நீக்கும் அதிமதுரம்


குழந்தை பேறின்மை என்பது இன்றைக்கு அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் மாறிவரும் உணவுப்பழக்கம், காலச்சூழ்நிலையும்தான். ஆணோ, பெண்ணோ மலடாக இருந்தால் அவர்களின் வாழ்க்கையே சூனியமாகிவிடுவதைப்போல உணர்கின்றனர். சந்ததியை உருவாக்க என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்திக்க தொடங்கிவிடுவார்கள். ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மூலிகைகளின் மூலம் மலடு நீக்கும் மருத்துவத்தை கண்டறிந்துள்ளனர் சித்தர்கள். அதிமதுரம் எனப்படும் அரிய மூலிகை எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து


திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன நெல்லிக்காய் (Emblica officinalis),கடுக்காய் (Terminalia chebula) மற்றும் தான்றிக்காய் (Terminalia belerica) ஆகும்.
  திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும்.

கருப்பை கோளாறுகளை நீக்கும் கடுகு

Mustard

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது’ அந்த அளவிற்கு எண்ணற்ற சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் சின்னஞ்சிறிய கடுகு தன்னகத்தே கொண்டுள்ளது. 5ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடுகின் பயன்பாடு இருந்துள்ளது. கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என பலவகை உண்டு. இது சிறு செடி வகையைச் சார்ந்தது. இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. வெண்கடுகை விட கருங்கடுகில் காரம் மிகுந்து காணப்படும். இதன் மேல்தோல் கறுப்பாக இருக்கும்.