Thursday, October 3, 2013

கருப்பு ஏலக்காயின் பயன்கள்

Block Cardomum

கருப்பு ஏலக்காய் என்பது வீரியமிக்க வாசனையுடன் விளங்கும் ஒரு சிறிய செடியாகும். இதில் இரண்டு வகைகள் உள்ளது - 'கருப்பு ஏலக்காய்' மற்றும் 'பச்சை ஏலக்காய்'. இவை இரண்டில் கருப்பு அல்லது மலை ஏலக்காய் தான் புகழ் பெற்ற வாசனை பொருளாகும். அதனுடைய தனித்துவம் வாய்ந்த சுவை மற்றும் வாசனையால் இதனை சமையலுக்கு அனேக மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த செடியின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதிமுக்கிய எண்ணெய்களில் ஒன்றாகும்.
முக்கியமாக இதனை வாசனை தெரப்பிக்கு பயன்படுத்துகின்றனர். உடல் நலத்தை பேணுவதிலிருந்து, பளபளப்பான முடியை பெறுவது வரைக்கும், இது பயன்படுகிறது. இது அத்தனை பயன்களை அளிக்கிறது. இப்போது நம் உடலுக்கு, சருமத்திற்கு மற்றும் தலை முடிக்கு ஏலக்காயால் கிடைக்கும் பலன்களைப் பார்க்கலாமா

1.இரையகம் குடல்பாதை ஆரோக்கியம்

கருப்பு ஏலக்காய் இரையகம் குடல்பாதை ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை புரிகிறது. இறையகம் மற்றும் குடல் பாதைகளில் தேவையான நீர்கள் சுரக்க கருப்பு ஏலக்காய் தூண்டிவிடும். மேலும் நீர் வெளியேறுதலுக்கும் இது தூண்டுகோலாக அமைவதால். வயிற்றில் உள்ள அமிலங்களை கட்டுப்பாட்டில் வைக்கும். அதனால் இரையாக அல்சர் மற்றும் செரிமான கோளாறுகள் எல்லாம் மெதுவாக சீராகும்.

2.இதயக் குருதிக்குழாய்களின் ஆரோக்கியம் 

இதய ஆரோக்கியத்திற்கும் பெரிய அளவில் உதவி புரிகிறது கருப்பு ஏலக்காய். இதயத் துடிப்பை கட்டுப்பாட்டில் வைப்பது இதன் முக்கிய குணமாகும். அதனால் இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் இருக்கும். கருப்பு ஏலக்காயை சீரான முறையில் உட்கொண்டால். இதயம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இது இரத்தம் உறைந்து போவதையும் தடுக்கும்.

3.சுவாச ஆரோக்கியம் 

சுவாச பிரச்சனைகள் உள்ளதா? அப்படியானால் கருப்பு ஏலக்காய் அதற்கு பெரிய நச்சு முறிவாக விளங்கும். ஆஸ்துமா, கக்குவான் இருமல், நுரையீரல் இறுக்கம், மூச்சுக் குழாய் அழற்சி, நுரையீரல் சிரை காசநோய் போன்ற சுவாச கோளாறுகளை, சிறிய அளவில் ஏலக்காயை கொண்டு குணப்படுத்தலாம். இது சுவாச குழாய்களை ஆசுவாசப்படுத்தி, நுரையீரல் வழியாக காற்று சுற்றோட்டத்தை சுலபப்படுத்தும்.

4.வாயின் ஆரோக்கியம் 

பற்களில் அழற்சி, ஈறுகளில் அழற்சி போன்ற பலவிதமான பல் பிரச்சனைகளை கருப்பு ஏலக்காயை கொண்டு குணப்படுத்தலாம். மேலும் இதில் பலமான வாசனை வருவதால், துர்நாற்றத்துடன் வெளிவரும் மூச்சையும் இது சரிசெய்யும்.

5.சிறுநீர் சம்பந்தப்பட்ட ஆரோக்கியம் 

கருப்பு ஏலக்காய் சிறந்த சிறுநீர்ப் பெருக்கியாக இருப்பதால், சிறுநீர் கழிப்பதிலும் ஆரோக்கியமாக விளங்கும்.

6.கார்சினோஜெனிக்கிற்கு எதிரான குணமுடையவை 

கருப்பு ஏலக்காயில் உள்ள இரண்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மார்பகம், குடல், முன்னிற்குஞ்சுரப்பி மற்றும் கருப்பை புற்றுநோயை தடுக்கும். இதிலுள்ள கார்சினோஜெனிக்கிற்கு எதிரான குணம் க்ளுடாதியோன் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் உற்பத்தியாவதை அதிகரிக்கும். இதனால் புற்றுநோய் சம்பந்தப்பட்ட அணுக்கள் வளருவது தடைபடும்.

7.நச்சு நீக்கம் 

உடலில் உள்ள நஞ்சை நீக்குவதில் கருப்பு ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. மேலும் இது இரத்தத்தில் உள்ள காப்ஃபைனை நீக்கும். அதனால் அல்கலாய்டு பாதிப்பில் இருந்து உங்களை காக்கும்.

8.உணர்வகற்றி குணம் 

கருப்பு ஏலக்காயிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயில் வீரியமிக்க உணர்வகற்றி குணம் அடங்கியுள்ளது. இது கடுமையான தலைவலியை நீக்கி, உடனடி நிவாரணம் அளிக்கும். இதிலிருந்து எடுக்கப்படும் அதிமுக்கிய எண்ணெய் மன அழுத்தம் மற்றும் சோர்வை போக்கவும் உதவும்.

9.ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் குணங்கள்

கருப்பு ஏலக்காய் 14 வகை நுண்கிருமிகளை அளிக்கும் ஆற்றல் கொண்டவை. அதனால் அதை உட்கொண்டால், பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளிடம் இருந்து, உங்களை காத்து உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்.

10.இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்

 கருப்பு ஏலக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளது. அதனால் இதனை தொடர்ந்து எடுத்துக் கொண்டால், உடம்பில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கி, சரும பரப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதனால் ஆரோக்கியம் மேம்படும். சரி உங்களுக்கு இளமையான அழகிய தோற்றம் வேண்டுமா? அப்படியெனில் கருப்பு ஏலக்காயை உட்கொள்ள ஆரம்பியுங்கள்.

11.வெண்மையான சருமம் 

வயதான தோற்றம் சீக்கிரம் வருவதை தடுப்பதையும் சேர்த்து, சருமம் வெண்மையாக மாறுவதற்கும் கருப்பு ஏலக்காய் உதவி புரிகிறது.

12.சரும அலர்ஜிக்கு நிவாரணி 

கருப்பு ஏலக்காயில் ஆன்டி-பாக்டீரியா குணம் நிறைந்துள்ளதால், சரும அலர்ஜிக்கு இயற்கை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

13.திடமான தலை முடி 

கருப்பு ஏலக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணம், தலை சருமத்திற்கு உணவாக அமையும். அதன் விளைவாக தலை முடி ஆரோக்கியமாகவும், திடமாகவும், பளபளப்பாகவும் மாறும்.

14.தலை சரும தொற்றுக்கு நிவாரணி 

இதன் ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-பாக்டீரியா குணங்களால், இதனை உட்கொண்டால் தலை சருமத்தில் எரிச்சலும் தொற்றுகளும் ஏற்படாது

15.வெப்பத் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு

இந்த ஏலக்காய் வெப்பத் தாக்கு மற்றும் சூரியவாதையிலிருந்து காக்கும் வல்லமையை கொண்டுள்ளது.

No comments:

Post a Comment