Monday, October 14, 2013

மூலிகை மருத்துவம் - இளமையுடன் பிரகாசிக்க இயற்கை தரும் இன்பமான தேன்

தேன் என்ற வார்த்தையைக் கேட்டாலே அனைவரின் நாவிலும் எச்சில் ஊறும். இயற்கையின் கொடைகளில் தேனும் ஒன்று. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நம் சித்தர்கள் தங்களின் தவப்பயனால் கண்டறிந்த சித்த மருத்துவத்தில் தேனை துணை மருந்தாக பயன்படுத்துகின்றனர்.  மருந்து என்றதும் நம் நினைவில் வருவது அதன் கசப்பு சுவையே. அச்சுவையே நாம் மருந்தை வெறுப்பதற்கு காரணமதக இருக்கிறது. இதற்கு முற்றிலும் எதிhமறையாக நம் அனைவராலும் விரும்பப்படும் இனிப்பான மருந்து (அமிர்தம்) தான் தேன்.

தேன் எத்தனை வருடங்கள் ஆனாலும் கெடாது தன்னுடன் சேர்ந்த பொருட்களையும் கெடாமல் பாதுகாக்கும்.

சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்தலாம். தேனில் குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற சர்க்கரை பொருட்கள் உள்ளன.

தேன் இயற்கை அளித்த கொடை அனைவரின் ட்டிலும் இருக்க வேண்டிய ஒரு அரு மருந்து.

தேன் அமிர்தமாக மட்டுமின்றி சிறந்த அனுபானமாகவும் (துணை மருந்தாகவும்) பயன்படுகிறது. ஒரு மருந்தின் பயன் முழுமையாக நமக்குக் கிடைக்க வேண்டுமெனில் அனுபவம் மிகவும் அவசியம்.

கீரை மருத்துவம் - நீண்ட காலம் வாழ மணத்தக்காளிக் கீரை

உடல் ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்த கீரைகளுள் இதுவும் ஒன்று.
குளிர்ச்சியை சுபாவமாகக்கொண்ட இக்கீரை வறண்ட பகுதிகளிலும் விளையக்கூடியது. வீட்டிலும் விளைவிக்கலாம். எல்லாக் காலங்களிலும் ஒரளவுக்கு கிடைக்கக்கூடியது.இக்கீரையின் காய் பச்சைமணியைப் போல இருக்கின்றபடியால் மணித்தக்காளி என்ற அழைப்பார்கள். மிளகுபோல இருப்பதால் மிளகு தக்காளி என்றும் சொல்வார்கள்.
Bot- Name- Solanum Nigrum

வறண்ட இடத்திலும் விளையும் இக்கீரை, நீருள்ள இடங்களிலும் ஏராளமாய் செழித்து வளரும். வெள்ளை நிறத்தில் பூக்கள் பூக்கும். இந்தக் கீரையின் ஒவ்வொரு பாகமும் மருத்துவப் பயன்கொண்டது. இலை, தண்டு, காய், கனி, வேர் அனைத்துமே உபயோகப்படக்கூடியது.

கசப்புத்தன்மை கொண்டது இக்கீரை. இதனால் பெரும்பாலோர் தொடுவதில்லை நீண்ட காலம் வாழ மிகவும் உதவும் கீரை என்பதை மறவாதீர்.
இக்கீரையின் அனைத்துப் பகுதிகளும் உண்பதற்கு ஏற்றவையே இதில் புரதம்,மாவுச்சத்து, தாது உப்புக்கள் நிறைந்துள்ளன. இக்கீரையைப் பருப்ப சேர்த்து கூட்டு. பொரியல், குழம்பு வைக்கலாம்.

கீரை மருத்துவம் - நாள் பட்ட நோய்களுக்கு நல்ல மருந்து புளியாரைக் கீரை

அரைக்கீரை வகையைச் சேர்ந்த புளிப்புச் சுவையை உடைய இந்தக் கீரையில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. நன்கு பசியைத்தூண்டி, உடல் எடையை அதிகரிக்கும் உடலில் புது ரத்தம் ஊறவைக்கும். நாள்பட்ட நோய்களுக்கு நல்ல மருந்து இது.
Bot-Name: Oxalis corniculata

பித்த மயக்கமனும் பேருலகின் மானிடர்க்கு
நித்தமருள் வாதகபம் நேருமோ - மெத்தனவே
மூலம் கிராணியறும் மூல வுதிரமறுங்
கோலப் புளியாரைக்கு.          - அகத்தியர் குணபாடம்

வாத கப நோய்கள் குணமாகும் பித்தம் தணியும் மூலத்தில் உண்டாகும் மயக்கம், ரத்த மூலம் இரண்டும் தீரும்

தலைவலி, தலைச்சுற்றல், காய்ச்சல், வாந்தி, மயக்கம், வாத நோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும். இந்தக் கீரையைத் தொடர்ந்து 48 நாள்கள் சாப்பிட்டால் அதிசயமான பலன்களைப் பெறலாம். குளிர்ச்சியான உடல் தன்மை கொண்டவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடக் கூடாது.