Sunday, July 27, 2014

உடல் எடையை குறைக்க மரீச்சாசனம்

செய்முறை :

முதலில் இரண்டு கால்களையும் முன் பக்கமாக நீட்டி நிமிர்ந்து உட்காரவும். பிறகு வலது காலை மேல்நோக்கி மடக்கி வைக்கவேண்டும். வலது கால் பாதம், இடது தொடையை உள்பக்கமாகத்தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும். வலது தொடைப்பகுதி தரைக்குச் செங்குத்தாக இருக்கவேண்டும். 

பிறகு வலது பக்கமாக குனிந்து வலது கையை வலது முழங்காலைச் சுற்றி வளைத்து உள்ளங்கையை முதுகுக்கு கொண்டு வரவும். இடது கையை பின்பக்கமாக கொண்டு சென்று வலது கை மணிக்கட்டைப் பிடிக்கவும். இந்நிலையில் மூச்சை ஆழ்ந்து உள்இழுத்துக் கொண்டே முதுகை நன்கு நிமிர்த்தி மேலே பார்க்கவேண்டும். 

பிரமர முத்திரை

பிரம்மன் உலகத்தை சிருஷ்டிக்கத் தேவையான சக்தியை வேண்டி தவம் செய்த போது இம்முத்திரையாலேயே தவம் செய்ததாகவும், இது வண்டு போன்ற தோற்றம் தரும் என்பதாலும் இதற்கு பிரமர முத்திரை என்ற பெயர் வழங்கப்படுகிறது.

செய்முறை :

ஆள்காட்டி விரலை மடக்கிக் கொண்டு, நடு விரல் நுனியைப் பெருவிரல் நுனியோடு அழுத்திப்பிடித்து, மற்ற இரு விரல்களையும் நேராக வைக்கவும். இவ்வாறு தினமும் 15 நிமிடம் செய்ய வேண்டும்.

அழகுக்கு துளசி பவுடர்

துளசி, சந்தனம், வெட்டிவேர்... இன்னும் பல மூலிகைகள் அடங்கியது என்று பல விளம்பரங்கள் சொல்லக் கேட்டிருப்போம். அழகுப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களே சுவீகரித்துக் கொள்ளும் அளவுக்கு அழகு பலன்கள் நிரம்பியது துளசி!


* பொதுவாக, குளிர்காலத்தில் பருக்கள் வராது. வந்தால் சீக்கிரத்தில் போகாது. இப்படி வரும் பருக்களை