Sunday, July 27, 2014

பிரமர முத்திரை

பிரம்மன் உலகத்தை சிருஷ்டிக்கத் தேவையான சக்தியை வேண்டி தவம் செய்த போது இம்முத்திரையாலேயே தவம் செய்ததாகவும், இது வண்டு போன்ற தோற்றம் தரும் என்பதாலும் இதற்கு பிரமர முத்திரை என்ற பெயர் வழங்கப்படுகிறது.

செய்முறை :

ஆள்காட்டி விரலை மடக்கிக் கொண்டு, நடு விரல் நுனியைப் பெருவிரல் நுனியோடு அழுத்திப்பிடித்து, மற்ற இரு விரல்களையும் நேராக வைக்கவும். இவ்வாறு தினமும் 15 நிமிடம் செய்ய வேண்டும்.


பயன்கள் :


  • மனிதனது உடலில் உள்ள ஒவ்வாமை, பயங்களைப் போக்கவல்ல அற்புத சக்தி கொண்டது இம்முத்திரை.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது ஒவ்வாமை ஏற்படுகிறது. 

  • தொற்றுகள் ஏற்படும்போது வழங்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளால் ஏற்படுகின்ற வயிற்றுக் கோளாறுகள், சளி, சைனஸ் போன்ற தொல்லைகளுக்கும் இது நிவாரணம் தரும்.  

  • நிம்மதியான உறக்கம், நல்ல செரிமாணம் தருவதற்கும் இம்முத்திரை பயன்படும். 

No comments:

Post a Comment