Saturday, July 19, 2014

செரிமான பிரச்சனையை தீர்க்கும் பெருங்காயம்


பெருங்காயத்திற்கு சில மருத்துவ குணங்கள் உண்டு. இது உணவுக்குழாய் வாயுநிலை தடுப்பானாகவும், உணர்ச்சியைக் கிளறிவிடும் தடுப்பானாகவும், நுண்ணுயிர் கொல்லியாகவும், மலமிளக்கியாகவும், சளி நீக்கியாகவும் மற்றும் தூக்க மருந்தாகவும் பயன்படுகிறது. பெருங்காயம் அன்றாடம் சமைக்கும் உணவில் சேர்க்கப்படுகிறது. 

கேரட் கூந்தல் உதிர்வதை தடுக்கும்


  • வெயிலால் தலைமுடி வறண்டு, வெடிப்பு விடும். கேரட்டின் இலை கூந்தலுக்கு அருமையான கண்டிஷனர். கேரட் இலைகளைத் துண்டுகளாக்கி, வேண்டிய அளவில் நல்லெண்ணெய் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயைத் தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து பயத்தமாவைப் போட்டு அலசுங்கள். இப்போது பாருங்கள் கூந்தல் வெடிப்பு நீங்கி, பரட்டைத் தலை பளிச்சென்று காட்சி தரும். 

நோயிகளை தீர்க்கும் வீட்டு உபயோகப் பொருட்கள்

1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்குவளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்


பருக்கள் 

பற்பசையைத் தடவுவதன் மூலம் பருக்களைக் கரையச் செய்யலாம். பருக்களால் ஏற்படும் தொற்றுக்களையும் பற்பசை அழிக்கிறது.


தீப்புண்

சிறிய தீக்காயங்கள் மீது பற்பசையைத் தடவினால் உடனடி விமோசனம் கிடைக்கும். அது தற்காலிகமாக அந்த இடத்தைக் கூலாக்கும். பெரிய, திறந்துள்ள காயங்களுக்கு பற்பசையைப் பயன்படுத்தக் கூடாது, கவனம்!