Monday, July 14, 2014

ஆஸ்துமா,சளி,இருமல் குணமாக

ஆஸ்துமா,சளி,இருமல் குணமாக


  • கபம் உடைந்து வெளியே வர: கலவை கீரையை இரண்டு வாரம் உண்டு வரலாம்.

  • எலும்புருக்கி நோய் குணமாக: புறால் இலையை பொடித்து அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட எளிதில் குணமாகிவிடும்

  • கபரோகம் தீர:- சங்கிலை தூதுவளை இலை பசும்பாலில் அரைத்து சாப்பிட்டு வரவும்

  • கிராணி, குன்மம், கபநோய்கள் தீர:- அழிஞ்சல் இலையை அரைத்து 1 கிராம் காலை மாலை கொடுக்கலாம்

சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் காய்கறிகள்,கீரைகள்,பழங்கள்

இன்று உலக மக்கள் தொகையில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. இந்த மக்கள் தொகையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க நோய்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. இவ்வாறு இந்திய மக்களை குறிப்பாக தென்னிந்திய மக்களை அவதியுறவைக்கும் நோய்களில் சர்க்கரை நோயும், இரத்த அழுத்த நோயும் தான் முதலிடம் வகிக்கிறது. இவை இரண்டும் ஒட்டிப் பிறந்த சகோதரர்களாக இந்திய மக்களை ஆட்டிப் படைக்கின்றன.

முக வசீகரம் பெற

குங்குமப்பூ - 10 கிராம்

ரவை - 30 கிராம்


வாதுமை பிசின் - 25 கிராம்

இவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து பசும்பாலில் கரைத்து சிறிய சிறிய வில்லைகளாக அதாவது 2 கிராம் அளவு எடுத்து தட்டி உலரவைத்து தேவையானபோது அந்த வில்லைகளை எடுத்து பால் ஏடு அல்லது தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகம் வசீகரமாகும்

வயிற்றுக் கடுப்பு நீங்க இலவங்கப் பட்டை

சமையல் அறையில் நம் முன்னோர்கள் ஒரு வைத்திய சாலையையே வைத்திருந்தார்கள். அஞ்சறைப் பெட்டி அருமருந்துகளின் பெட்டகமாகவே இருந்துள்ளது.


சீரகம், சோம்பு, வெந்தயம், கடுகு, மிளகு, இலவங்கப்பட்டை, கசகசா என பல மருத்துவப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தவர்கள்தான் நம் முன்னோர்கள்.

கொழுப்பைக் கரைக்கும் கொடம்புளி

உடல் பருமனால் ஆண்களும், பெண்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிறிது தூரம் நடந்தாலோ, மாடிப் படிகளில் ஏறினாலோ மூச்சிரைக்கும். அப்படியே உட்கார்ந்துவிடுவார்கள். இதனால் இவர்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.



சிலர் எடையைக் குறைக்கிறோம் என்ற விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தை இழப்பதுதான் மிச்சம்.