Tuesday, July 15, 2014

முகத்தில் முடிகளை நீக்க

சிறுசிறு முடிகள் முகத்தில் தோன்றி, முகத்தின் அழகை கெடுக்கும். இத்தகைய முடிகளை அகற்ற இக்காலத்தில் பெண்கள் எடுக்கும் முயற்சிகள் அதிகம்.குறிப்பாக முடிகளை நீக்க ப்ளீசீங் முறையைப் பயன்படுத்துகின்றனர். ப்ளீச்சிங் முறையில் முடிகளை அகற்றுவது சிறந்தென்றாலும், இதனால் சருமம் உலர்ந்து வறட்சித் தன்மை ஏற்படும். வறட்சியான தோலில் பருக்கள், வெடிப்புகள் தோன்றும்.ஆனால் இயற்கை முறையிலேயே கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி ப்ளீச்சிங் செய்யலாம். இதனால் முகத்திலுள்ள அழுக்குகள், தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, நல்ல ஆரோக்கியமான அழகையும் பெற முடியும்.

இயற்கையாக ஸ்கரப்கள் தயார் செய்வது எப்படி? 

கண்களில் அதிக கவனம் தேவை

மனித உறுப்புகளில் மிக மென்மையானவை, மிக நுட்பமானவை கண்கள். அதனால் கோடை உஷ்ணம் அதிகமாகும்போது கண்கள் பாதிக்கப்படும். கண்களை சரியாக பாதுகாக்கா விட்டால், உஷ்ணத்தால் கண்களில் சொறி, அலர்ஜி, கண் சிவந்து போகுதல், சீழ்கட்டி ஏற்படுதல், கண்கள் உலர்ந்து போகுதல், கார்ணியல் அல்சர் போன்ற நோய்கள் வரக்கூடும். கோடையில் என்னென்ன மாதிரியான கண்நோய்கள் வரும்? அவைகளை எப்படி தவிர்க்கலாம்? என்று பார்ப்போம்.. 


அல்ட்ரா வயலெட் ஆபத்து:  

கோடையில் வெயில் அதிகமாக இருப்பதால், சூரியனில் இருந்து வரும் அல்ட்ரா வயலெட் கதிர்கள் கண்களை பாதிக்கும். தொடர்ந்து அவை தாக்கும்போது, நடுத்தர வயதை கடந்த பின்பு வரக்கூடிய கண்புரை நோய், அதற்கு முன்பே வந்து விடும். அல்ட்ரா வயலெட் கதிர்கள் பார்வை படலமான ரெட்டினாவையும் தாக்கி பாதிக்கச் செய்யும்.