Tuesday, July 15, 2014

முகத்தில் முடிகளை நீக்க

சிறுசிறு முடிகள் முகத்தில் தோன்றி, முகத்தின் அழகை கெடுக்கும். இத்தகைய முடிகளை அகற்ற இக்காலத்தில் பெண்கள் எடுக்கும் முயற்சிகள் அதிகம்.குறிப்பாக முடிகளை நீக்க ப்ளீசீங் முறையைப் பயன்படுத்துகின்றனர். ப்ளீச்சிங் முறையில் முடிகளை அகற்றுவது சிறந்தென்றாலும், இதனால் சருமம் உலர்ந்து வறட்சித் தன்மை ஏற்படும். வறட்சியான தோலில் பருக்கள், வெடிப்புகள் தோன்றும்.ஆனால் இயற்கை முறையிலேயே கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி ப்ளீச்சிங் செய்யலாம். இதனால் முகத்திலுள்ள அழுக்குகள், தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, நல்ல ஆரோக்கியமான அழகையும் பெற முடியும்.

இயற்கையாக ஸ்கரப்கள் தயார் செய்வது எப்படி? 


கடலை, மஞ்சள்தூள்:

கடலை மாவு மற்றும் மஞ்சள் தூளுடன் கடுகு எண்ணையைச் சேர்த்து பசைபோல ஆக்கி, அதை முகத்தில் பூசவேண்டும். முடிகள் இருக்கும் இடத்தில் இந்த கலவையை நன்றாக தேய்த்து நீரில் கழுவ வேண்டும். இம்முறையை தொடர்ந்து வாரம் இருமுறை செய்துவர முகத்தில் இருக்கும் அழுக்கு, முடிகள் நீங்கும். தேவையில்லாமல் முகத்தில் தோன்றும் முடிகளின் வளர்ச்சி குறைந்து நாளடைவில் அவைகள் நீங்கிவிடும்.

தேன், எலுமிச்சை:

தேனுடன் எலுமிச்சை சாற்றை கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி இருபது நிமிடங்கள் ஊறவிட்டு, பிறகு குளிர்ந்த நீரில் முகம் கழுவ முகம் பட்டுப்போன்ற சருமத்தைப் பெற்று ஜொலிக்கும்.

முட்டை, சர்க்கரை, சோளமாவு:

முட்டையை உடைத்து ஒரு கோப்பையில் ஊற்றி, அதில் சர்க்கரை, சோளமாவை கலந்து நன்றாக கலக்கி, உருவான கலவையை எடுத்து முகத்தில் பூசி நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு ஐந்து நிமிடத்திற்கு பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ முகம் பளிச்… பளிச் ….

கடலை மாவு, தயிர், மஞ்சள்:

இம்மூன்றையும் கலந்து பசைபோல் ஆக்கிக்கொள்ளுங்கள். பிறகு அதை இதமாக முகத்தில் நன்கு தடவி இருபது நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு பசும்பால் கொண்டு முகத்தை கழுவவும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை நன்றாக கழுவி, வெண்மைநிற துணியால் முகத்தை இதமாக துடைக்கவும். இப்பொழுது உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்க.. நீங்களே வியந்துபோவீர்கள்..!!! 

பிரட்

பிரட்டை பாலில் ஊற வைத்து, அதனை முகத்தில் சிறிது நேரம் தேய்க்க வேண்டும். இதனால் முகத்தில் உள்ள முடி நீங்குவதோடு, முகம் பொலிவோடு இருக்கும்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய் கூட தேவையில்லாத முடிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். அதற்கு கடுகு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

மஞ்சள்

அக்காலத்தில் மக்கள் தினமும் மஞ்சள் தேய்த்து குளிப்பதனால் தான், அவர்களது சருமத்தில் முடிகளின்றி, சருமம் பட்டுப்போன்று இருந்தது. எனவே தினமும் இதனை தடவி குளித்து வந்தால், முடிகளின் வளர்ச்சி குறைவதோடு, முடிகளும் நீங்கிவிடும்.


எலுமிச்சை

எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், அது சருமத்தில் வளரும் முடியை நீக்குகிறதோ இல்லையோ, முடியின் நிறத்தை மங்க வைக்கும். ஆனால் இந்த முறையை தொடர்ந்து செய்தால், நாளடைவில் முடி வளராமல் இருக்கும்.

சர்க்கரை

சர்க்கரையை நீரில் கலந்து, அதனைக் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்தால், அது முகத்தில் வளரும் முடிகளை அகற்றும்.

தேன்

கடினமாக இருக்கும் தேனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்தால், முகத்தில் வளரும் முடிகளை தடுக்கலாம். வேண்டுமெனில், தேனுடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து செய்யலாம்.


இம்முறையை வாரம் இருமுறை தொடர்ந்து செய்துவர உங்கள் முகம் பால்போல் வெண்மையாக ஜொலிக்கும்.

No comments:

Post a Comment