Friday, November 6, 2015

இதயப் படபடப்பு நீங்க பேரிக்காய்

இதயப் படபடப்பு நீங்க பேரிக்காய்


பேரிக்காய் மலைப் பகுதிகளில் விளையக்கூடியது . வெளித் தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது சுவைமிகுந்த பழங்களில் ஒன்று. பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். பேரிக்காயை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும். இதில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.

பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம்தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள். வெளித் தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம்தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது.

பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள்.

சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.

உடல்சோர்வு நீக்கும் சுண்டைக்காய்

உடல்சோர்வு நீக்கும் சுண்டைக்காய் 


 நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.

நெஞ்சின் கபம்போம் நிறைகிருமி நோயும்போம்
விஞ்சுவா தத்தின் விளைவும்போம்-வஞ்சியரே
வாயைக் கசப்பிக்கும் மாமலையில் உள்ள சுண்டைக்
காயைச் சுவைப்பவர்க்குக் காண்

என்று சுண்டக்காயின் பெருமை பற்றி அகத்தியர் குணப்பாடத்தில் கூறப்பட்டுள்ளது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

இத்தாவரத்தில் உள்ள வைட்டமின்கள், குளுக்கோசைடுகள், போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டார்வோனின் ஏ, டார்வோனின் பி, பேனிகுனோஜெனின், டார்வோஜெனின் போன்றவை காணப்படுகின்றன.

உடல் சோர்வு நீங்கும்

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.

சுண்டைக்காய்த் துவையல்


சுண்டைக்காய்த் துவையல்



தேவையானவை:-

சுண்டைக்காய் - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 4
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1 ( சிறியது)
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
புளி - 3 சுளை
பெருங்காயம் - 1 மிளகு அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்து - 2 டீஸ்பூன்.

செய்முறை:-

சுண்டைக்காய்களை ஆய்ந்து கழுவி இரண்டாக நறுக்கித் தண்ணீரில் போடவும். பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்களைக் கழுவிப் பொடியாக நறுக்கவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்தவுடன் உளுந்து, பெருங்காயம் போட்டு சிவந்தவுடன் பச்சை மிளகாய், சுண்டைக்காயைப் போட்டு வதக்கவும். இரண்டு நிமிடம் வதங்கியதும் வெங்காயம், தக்காளியைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். உப்பு, புளி, தேங்காய் சேர்த்து இன்னும் நன்கு வதக்கி ஆறவைத்து அரைக்கவும். இட்லிக்குத் தொட்டுக் கொள்ளலாம் அல்லது நெய் சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.