Sunday, January 25, 2015

இடுப்பு எலும்பு தேய்வுகளை தவிர்க்க விபரீதகரணி ஆசனம்

இடுப்பு எலும்பு தேய்வுகளை தவிர்க்க விபரீதகரணி ஆசனம்


நோயறற் வாழ்வே,குறைவற்ற செல்லம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அந்த நோயற்ற வாழ்வைப் பெறுவதற்கு நாம் சற்றேனும் சிந்திப்பதில்லை. வியாதி வந்து குணமடைவதை விட வியாதி வராமலேயே தடுப்பது மிக நல்லது. ஆனால் நமக்கு வியாதி வராமல் தடுப்பதிலும்  வந்தபின் அறவே களைவதிலும் நாம் ஒவ்வொருவரும் செய்வதற்கான யோகாசனம் ஒர் எளிமையான முறையாகும்.


ஆசனம் செய்முறை:-


  • தரையில் மல்லாந்து படுத்து நேராகக் கால்களை வைத்துக்கொள்ள வேண்டும்.
  • பின்பு தொடைகளை மடக்கி நெருங்கியிருக்கும்படி செய்தல் வேண்டும்.
  • முழங்கால்களை மடக்கி,இருகைகளையும் இரு புறமும் இடுப்புக்குக் கீழ் விலாப்புறத்தில் தூக்கி பிடித்து சுவாசத்தை வெளிவிடாது உடல் பளுவை தூக்க புறங்கைகள், கழுத்து பிடரி ஆகியவற்றின் மீது சுமத்த வேண்டும்.
  • இது தரைக்கு செங்குத்தாக இருக்குமாறு நிறுத்தவும்
  • பின்பு சுவாசத்தை மெதுவாக வெளி விடவும்
  • பின்பு உடலை சாய்த்த நிலையில் வைத்துக் கொண்டு முதுகும், கால்களும் மேல் நோக்கி மடக்கி இருக்க வேண்டும்
  • கழுத்து நன்றாக விரிப்பில் இடைவெளியின்றிப் படிந்திருக்க வேண்டும்
  • மெதுவாக இரு கைகளும் விலாப் புறத்திலிருந்து அடி வயிற்று பகுதியிலுள்ள எலும்புகளைத் தொடும்படி கைவிரல்களை நீட்டி இரு கைகளின் கட்டை விரல்களால் லேசாக அழுத்தி பிடிக்கவும்.
  • பின்பு மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பவும்.


ஆசனங்களின் பயன்கள்:-


  •   மூளை மற்றும் அதனை சார்ந்த மண்டலத்தை சீராக இயங்கச் செய்கிறது
  •   உணவு செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கலை தவிர்க்கிறது
  •   இடுப்பு பகுதி தசைகளை வன்மையுடைய செய்து இடுப்பு எலும்பு                   தேய்வுகளை   தவிர்க்கிறது
  •  கூன் விழுந்த முதுகை நேராக்க பயன்படுகிறது
  •  மாதாந்திர மாத விடாய் சீராக செயல்பட வைக்க உதவுகிறது
  •  மாதவிடாயின் போது ஏற்படும் வலியை தவிர்க்கிறது
  •  கல்லீரல்,கணையம்,சிறுநீரகம் போன்ற உறுப்புகளை சீராக்கி  நன்னிலையில் இயங்கச் செய்கிறது
  •  இரு கால்களையும் வலிவுடையதாக்கிறது.



   

No comments:

Post a Comment