Tuesday, July 22, 2014

முகத்தில் இருக்கும் கருப்பானது மறைய

கருப்பாக இருப்பதற்கு முதல் காரணம் உடலில் இருக்கும் நிறமி செல்களான மெலனின் அளவு அதிகமாக இருப்பது. அவ்வாறு அதிக நிறமிசெல்கள் உடலில் இருந்தால் அந்த இடமானது கருப்பாக இருக்கும். 

சிலர் திடீரென்று கருப்பாக மாறுவார்கள், அதற்கு அவர்களது உடலில் உள்ள நிறமிச் செல்கள் அதிக அளவு மெலனினை சுரக்கும். வீட்டில் இருந்தே சில இயற்கையான பொருட்களை பயன்படுத்தி வந்தால், சருமமானது அழகோடு இருப்பதுடன், மெலனின் அளவையும் கட்டுப்படுத்தலாம்.

அழகையும் ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் கொய்யா

மென்மையான தோலும், சதைப்பற்றுமாக மலிவான விலையில் கிடைக்கும் இந்தப் பழத்தில் இருக்கும் அழகு பலன்கள் ஏராளம். நமக்கு வேண்டிய அழகையும் ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் இதன் இலை, பழம், குச்சி போன்றவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம். 


  • என்ன தான் எண்ணெய் வைத்தாலும் வறண்டு போய்க் காட்சியளிக்கிறதா உங்கள் கூந்தல்? அதைப் பளபளப்பாக்கும் டெக்னிக் சிவப்பு கொய்யாவில் இருக்கிறது. கொட்டை இருக்கும் சிவப்பு கொய்யாப் பழத்தை நறுக்கி வெயிலில் உலர்த்தி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்த பவுடர் 2 டீஸ்பூன், கொய்யா இலையை அரைத்து எடுத்த சாறு 3 டீஸ்பூன் இரண்டையும் நன்றாகக் கலந்து தலை முழுவதும் பூசுங்கள். வறண்ட கூந்தல் பளபளவென மின்னுவதுடன் கருமையாகவும் மாறும். 

இதயம் சீராக இயங்க காளேஷ்வர முத்திரை


செய்முறை :

நடுவிரலை நேராக நீட்டி நுனிகளைச் சேர்க்கவும், கட்டை விரல் இதயத்தை நோக்கி இருக்கும்படி வைத்து நுனிகளை சேர்க்கவும். மற்ற மூன்று விரல்களையும் உட்புறம் மடக்கி இடதுகை விரலும், வலது கைவிரலும் ஒட்டியபடி வைக்கவும். தினமும்15 நிமிடம் பயிற்சி செய்யவும்.  பின்னர் படிப்படியாக நேரத்தின் அளவை அதிகரித்துக் கொள்ளவும்.

பயன்கள் :

மன அமைதி, தீய எண்ணங்களில் இருந்து விடுதலை, நிம்மதியான உறக்கம், டென்ஷன் போக்குதல் போன்றவற்றிக்கு இந்த முத்திரை ஏற்றது. இதயம் சீராக இயங்கவும், மூச்சு சீராக உடலில் இருக்கவும் செய்கிறது

அழகு பலன்களை அள்ளித் தரும் ரோஜா

அழகு பலன்களை அள்ளித் தருவதில் ரோஜாவுக்கு இணை வேறு எதுவும் இல்லை. 

  • ரோஜா பன்னீர் தயாரிக்கும் முறை இதற்கு பிங்க் நிற ரோஜாக்கள் தான் பயன்படுத்த வேண்டும். வருடங்கள் கடந்தாலும் வாசனை போகாமல் அப்படியே இருக்கும் இந்த ரோஜா பன்னீரை, தயாரிக்கும் விதம் இதோ... 


  • 50 ரோஜாக்களை இதழ்களாக உதிர்த்துத் தனியாக வைத்துக் கொள்ளவும். 2 லிட்டர் தண்ணீரைக் காய்ச்சி, அதில் ரோஜா இதழ்களைப் போட்டு மிதமான தீயில் கொதிக்க விடுங்கள். தண்ணீர் அரை லிட்டராக சுண்டியதும் ஆற வைத்து, வடிகட்டி பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். இது தான் பன்னீர். தேவைப்படும் போது ஐஸ் டிரேயில் நிரப்பிப் பயன்படுத்தலாம். 

காற்றாழை - கூந்தல் பிரச்சனையை போக்கும்

இன்றைய தலை முறையினரிடம் இன்று மாபெரும் பிரச்சினையாக உருவெடுத்திருப்பது ஆண், பெண் இருபாலருக்கும் முடி உதிர்தல் என்பதாகும். சிலருக்கு இதனால் திருமண வாழக்கையே கூட அமையாமல் தள்ளி போகின்றது. உருவ அழகை அதிகப் படுத்துவதில் கூந்தலுக்கு பெரும் பங்குண்டு. 

அதிக நேரம் கண் விழித்தல், இரவுப் பணி செய்தல், நீண்ட நேரம் கணிணி முன் அல்லது தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்திருத்தல், வெயிலில் அதிக பிரயாணம் செய்தல் போன்ற காரணங்களால் உடல் உஷ்ணம் அதிகரித்து தலையில் வியர்வை உண்டாகிறது.