Monday, July 28, 2014

அடிக்கடி மலச்சிக்கலா? அலட்சியப்படுத்த வேண்டாம்

நாம் சாப்பிடும் உணவு உடலுக்குள் எங்கெங்கு பயணப்படுகிறது, என்னென்ன மாற்றங்களை உடலுக்குள் சந்திக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

- அது ஒரு நீண்ட பயணம்! 

வாய் வழியாக சாப்பிடும் உணவு, உணவுக் குழாய் வழியாக இரைப்பையை அடைகிறது. அங்கிருந்து சிறுகுடலுக்கு செல்கிறது. அங்கு ஜீரண செயல்பாடுகள் நடந்து, தேவையான சத்துக்கள் உறிஞ்சப்படுகிறது. தேவையற்றவை அனைத்தும் மலமாக பெருங்குடலை வந்தடைகிறது.

சுமார் ஒன்றரை மீட்டர் நீளத்தில், அகன்ற கேள்விக்குறிபோல் தோன்றும் பெருங்குடல், மலத்தில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சி அதை இறுகவைத்து, மலக்குடலுக்குள் தள்ளும். அங்கிருக்கும் மெல்லிய தசை நாளங்கள் உடனே, மூளைக்கு ‘மலம் வந்திருக்கிறது‘ என்ற தகவலை உணர்த்தும்.