Friday, May 15, 2015

முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்

     முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்



  முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய கீரையாகும். மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய கீரையாகும்.

  தமிழ்நாட்டு கிராமங்களில், ஏறத்தாழ எல்லோர் வீட்டுக் கொல்லை புறத்திலும் இது படர்ந்து கிடக்கும். கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல் தடுப்பதால் இந்தக் கீரைக்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

உடல் எடையை குறைக்க எளிமையான 8 வழிகள்

    உடல் எடையை குறைக்க எளிமையான 8 வழிகள்


 நம் அன்றாட வேலைகளை செய்யும் உடல் உறுப்புகள் இயங்கவும் நமக்கு சக்தி தேவைப்படுகிறது. இந்த சக்தி நாம் உண்ணும் உணவின் உடல் செலவிடும் சக்தியைக் காட்டிலும் அதிகமாகும் போது உடல் அதை கொழுப்பாக மாற்றி சேமித்து வைக்கிறது.  இவ்வாறு இந்த சேமிப்பு வருடக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போகும்போது உடல் எடை மெல்ல அதிகரித்துக்கொண்டே செல்லும் இதுவே உடல் எடை கூடுவதன் முதன்மை காரணமாகும்.  சிலருக்கு மட்டும் ஆர்மோன் காரணங்களால் உடல் எடையும் பருமனும் அதிகரிக்கின்றன. 

 கீழே தரப்பட்டுள்ளபடி வழிமுறைகளை பின்பற்றி நடந்தால் குறைந்தது மாதம் 4 கிலோ எடை குறைவது மிக உறுதி.