Friday, May 15, 2015

உடல் எடையை குறைக்க எளிமையான 8 வழிகள்

    உடல் எடையை குறைக்க எளிமையான 8 வழிகள்


 நம் அன்றாட வேலைகளை செய்யும் உடல் உறுப்புகள் இயங்கவும் நமக்கு சக்தி தேவைப்படுகிறது. இந்த சக்தி நாம் உண்ணும் உணவின் உடல் செலவிடும் சக்தியைக் காட்டிலும் அதிகமாகும் போது உடல் அதை கொழுப்பாக மாற்றி சேமித்து வைக்கிறது.  இவ்வாறு இந்த சேமிப்பு வருடக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போகும்போது உடல் எடை மெல்ல அதிகரித்துக்கொண்டே செல்லும் இதுவே உடல் எடை கூடுவதன் முதன்மை காரணமாகும்.  சிலருக்கு மட்டும் ஆர்மோன் காரணங்களால் உடல் எடையும் பருமனும் அதிகரிக்கின்றன. 

 கீழே தரப்பட்டுள்ளபடி வழிமுறைகளை பின்பற்றி நடந்தால் குறைந்தது மாதம் 4 கிலோ எடை குறைவது மிக உறுதி.


1. தினசரி காலை எழுந்தவுடன் 1-2 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.

2. குறைந்தது 35 நிமிடம் உடற்பயிற்சி வேகநடை ஸ்பாட் ஜாக்கிங் சைக்கிலிங் போன்றவையோ அல்லது இதர பயிற்சிகளோ செய்யவும்.

3. பின் அப்பொழுதே தயாரித்த வெண்பூசணிச்சாறு அல்லது வாழைத்தண்டு சாறு ஒரு டம்ளர் குடிக்கவும்.

4. காபி, டீ அருந்தும் பழக்கமுடையவர்கள் அதற்கு பதிலாக பால் சேர்க்காமல் காபி அல்லது டீ- யில் எலுமிச்சைசாறு பிழிந்து அருந்தலாம். பால்சேர்த்து அருந்த விரும்புபவர்கள் பாலை 3-4 முறை காய்ச்சி ஆடை நீக்கிய பின் பயன்படுத்துவது நல்லது. முடிந்த வரை சர்க்கரையைத் தவிர்ப்பது நல்லது.

5. காலை சிற்றுண்டி (8-9 மணிக்குள்) சாப்பிட வேண்டும். வெண்ணெய் எடுத்த மோர் 1 டம்ளர் அதனுடன் கொய்யா சிறியது பாலாடை கட்டி அல்லது வெண்ணெய் தடவாத 2 அல்லது 4 துண்டு வெஜிடபிள் ரொட்டி ஸாண்ட்விச் அல்லது இட்லி இரண்டு

6. மதிய உணவு (12-1 மணிக்குள்) சாப்பிட வேண்டும். 2 கரண்டி ஏதேனும் ஒரு வகை கீரையும் 2 கரண்டி நீர்சத்து அதிகமுள்ள காய்கறிகள் வெண்பூசணி புடலங்காய் பருப்பு சேர்த்து தேங்காய் சேர்க்காமல் 1 கரண்டி சாம்பார் 1 கப் சாதம் அல்லது எண்ணெய் எடுத்த தயிர் அல்லது 1 டம்ளர் மோர்.

7. இரவு உணவு (7-8 மணிக்குள்) வேக வைத்த காய்கறிகள் 3 கப் அல்லது சூப் பப்பாளி அல்லது ஆரஞ்சு அல்லது பைன் ஆப்பிள் 6 துண்டு அல்லது கொய்யா 3 துண்டு.

8. பச்சை காய்கறிகள் சாப்பிடலாம். பகலில் உறங்குவதைதவிர்த்தல் நல்லது எண்ணெய் பதார்த்தங்களை மற்றும் நொறுக்குத் தீனிகளை தவிர்க்கவும். உப்புள்ள ஆகாரங்களை ஊறுகாய் சிப்ஸ் உப்பு பிஸ்கட் தவிர்க்கவும். இரவில் உண்ட பின்னர் குறுநடை செய்த பின்னர் உறங்க செல்லவும். இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ள என்ற பழமொழி ஏற்ப காலையில் கொள்ளு கஞ்சி சாப்பிட்டு வரலாம்.

No comments:

Post a Comment