Thursday, May 14, 2015

வெயில் காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகள் உடைய அவுரி

வெயில் காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகள் உடைய அவுரி


 12 ராசிகளில் கன்னி ராசிக்கு உரிய மூலிகை அவுரி. இது அஷ்ட கன்மங்களில் தம்பளத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. நீலி என்றும் அழைக்கப்படும் அவுரியின் மருத்துவக் குணங்கள் பற்றி பார்க்கலாம்.


 சுரம் நீங்க

   அவுரி வேரை நன்கு அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து, அதனுடன் 5 மிளகு கூட்டி சாப்பிட சுரம் நீங்கும்.

   அவுரி இலையுடன் அல்லி இலையை சேர்த்து, அரிசி கழுவிய நீரால் அரைத்து பூசிவர வெயில் காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகள் உடையும்.

  அவுரி இலைச் சாற்றுடன் சம அளவு வெற்றிலைச் சாறு கூட்டி 15 மில்லி அளவு உட்கொள்ள வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியாகும்.

  அவுரிவேர், எட்டிவேர், சங்குப்பூ வேர், பொன்முசுட்டை வேர் சம அளவு பொடி செய்து வெந்நீரில் உட்கொள்ள தேள், நட்டுவக்காலி போன்றவை கொட்டிய விஷம் முறியும்.

  அவுரிவேர், பூலாவேர், தோற்றான் விதை - இவற்றை சிறிதளவு எடுத்து பால்விட்டு அரைத்து, நெய்யில் கலந்து நன்கு காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். இதில் 15 மில்லி உட்கொள்ள கொடுத்து வர குழந்தைகளுக்கு ஏற்படும் கணை குணமாகும்.

மஞ்சள் காமாலை குணமாக

   அவுரி இலையுடன் தும்பை இலையும், மிளகும் சேர்த்து நன்கு அரைத்து சுண்டக்காய் அளவு உட்கொண்டு, உடல் முழுவதும் இதனையே ப+சி குளித்து வர உடல் நினவு, அரிப்பு, காணாக்கடி, விஷம் போன்றவை குணமாகும்.

 அவுரி இலையை நன்கு அரைத்து கொட்டைப்பாக்கு அளவு பாலில் கலந்து காலை, மாலை இருவேளை உட்கொண்டு வர மஞ்சள் காமாலை குணமாகும்.

 அவுரி வேர், சிறுகீரை வேர், சுரைக்கொடி - இவை ஒரு பங்கு மூக்கிரட்டை வேர் 3 பங்கு எடுத்து நீர்விட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி குடித்து வர சிறுநீரும், மலமும் நன்கு கழிந்து பெருவயிறு உடல் ஊதல் பிரச்சனைகள் குணமாகும்.

அவுரி வேருடன் நாய் வேளை இலையை சம அளவு சேர்த்து அரைத்து புளியம் விதை அளவு வெந்நீரில் உட்கொள்ள வெள்ளோக்காளம் (உமிழ்நீர் மட்டும் வெளி வரும் ஒருவித குமட்டல்) தீரும்.

மாலைக்கண் நோய் தீர..

   அவுரி இலையுடன் சீரகம் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து காலையில் மட்டும் உப்பு, புளி நீக்கி பத்தியத்துடன் உட்கொள்ள மாலைக்கண் பிரச்சனை தீரும்.

   அவுரி இலையை நன்கு அரைத்து சுண்டைக்காய் அளவிற்கு 5 உருண்டைகள் உருட்டி சுடுசாதத்தில் புதைத்து வைத்து சாதம் ஆறிய பின் அந்த உருண்டைகளை பாலில் உட்கொள்ளவும். இதனை காலை, மாலை இருவேளையும் தொடர்ந்து 10 நாட்கள் சாப்பிட்டு வர காமாலை குணமாகும்.

   அவுரி இலையுடன் கற்றாழைச் சாறு, சர்க்கரை கலந்து பாக்கு அளவு எடுத்து 3 நாட்கள் உட்கொண்டு வர மூலநோய் கட்டுப்படும்.

  அவுரி இலைச்சாற்றுடன் நெய் கலந்து காய்ச்சி வடிகட்டி உட்கொண்டு வர நீர்ச்சுருக்கு, நீர் எரிச்சல் குணமாகும்.

  அவுரி வேரை நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்து வர வெள்ளைப்படுதல், காணாக்கடி, வயிற்று வலி குணமாகும்.

நஞ்சு முறிய

   அவுரி இலை, வேப்பங்கொழுந்து, தும்பை இலை, வால்விடங்கம், கடகரோகிணி - இவற்றை சம அளவு எடுத்து நன்கு அரைத்து மிளகு அளவு உருண்டைகள் செய்து நிழலில் உலர்த்திக் கொள்ளவும், வயதிற்கு ஏற்ப அதில் 1 முதல் 3 மாத்திரைகளை, இரவு படுக்கும் முன் குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றுப்பூச்சிகளை வெளியேற்றும்.

   அவுரி வேர்பட்டையை வெந்நீர்விட்டு அரைத்து பாக்கு ளெவு உட்கொண்டு வர கலப்பை கிழங்கினால் ஏற்பட்ட நஞ்சு முறியும்.

பின்குறிப்பு

   அவுரி 18 வகை நஞ்சுகளையும் நீக்கும் மிகச்சிறந்த நஞ்சு அகற்றியாகும். எவ்வகையான நஞ்சு என்பது தெரியாத நிலையில் இந்த அவுரியை நஞ்சு முறிப்பாகவும் பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment