Saturday, July 5, 2014

கீரையின் மருத்துவம் - வயிற்றுக் கோளாறுகளுக்கு கை கண்ட மருந்து கறிவேப்பிலை

கறிவேப்பிலை மரத்தின் அத்தனை பாகங்களும் மருத்துவப் பயனும் மணமும் வாய்ந்தவை ஆகும். இதன் பாகங்கள் உணவாகவும், மருந்தாகவும் பயன் தருவதாக அமைந்துள்ளன. இதன் இலை வயிற்றுக் கோளாறுகளுக்கு கை கண்ட மருந்தாகிறது. 


புரோட்டோசோவா என்னும் கிருமிகளை கொள்வதில் (ஆன்டி புரோட்டோசோவல்) முதலிடம் வகிக்கின்றது. இக்கிருமிகள் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும் நுண்கிருமிகள் ஆகும். மேலும் வயிற்றுக்கடுப்பை போக்கக்கூடிய ஒரு மருந்தாக (ஆன்டி ஸ்பேஸ்மோலிடிக்) கறிவேப்பிலை பயன்படுகிறது. 

பழங்களின் மருத்துவம் - கொய்யாப்பழம், மலச்சிக்கலுக்கு ஏற்ற மருந்து.

நம் ஊர் சீதோஷ்ண நிலையில் நன்றாக வளரும் கொய்யாப் பழத்தில் `வைட்டமின் சி' சத்து நிறைந்திருக்கிறது.

கொய்யாப்பழம், மலச்சிக்கலுக்கு ஏற்ற மருந்து. அதற்காக இதை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. வாதம், பித்தம், கபம் போன்றவை அதிகமாகி மயக்கம் வரலாம்.

இயற்கை மருத்துவம் - பல நோய்களுக்கு பூண்டின் மருத்துவ குணங்கள்

நம் அன்றாட உணவில் தவறாமல் இடம் பெறுகின்ற ஒரு பொருள் பூண்டு ஆகும். பூண்டும், இஞ்சியும் சேரும் போது பெரும் மணத்தையும், சுவையையும் உணவுக்கு தருகிறது. மேலும் உணவாகின்ற பூண்டு இன்றைய நவநாகரீக உலகில் மானுடத்தை தாக்குகின்ற பல நோய்களுக்கு மருந்தாகி பயனளிக்கிறது. 

பூண்டு மத்திய ஆசியாவை பிறப்பிடமாக கொண்டது என்பர். அல்லியம் சேட்டிவம் என்பது இதனது தாவர பெயர். ஆங்கிலத்தில் இதை கார்லிக் என்று அழைப்பர். சித்த, ஆயுர் வேத நூல்களில் பூண்டின் மருத்துவ குணங்களை பற்றி சொல்லுகின்ற போது, பூண்டு உடலை வளர்க்க கூடியது. விந்து வளர்ச்சிக்கு ஏற்றது. 

இயற்கை மருத்துவம் - தினம் தோறும் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி

* தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள்; பற்களையும் சுத்தம் செய்யுங்கள். சிறிது நேரம் வாய்க்குள் தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள்.

* தினமும் நன்றாக தூங்குங்கள்.

* உணவில் பச்சை காய்கறிகளையும், பழ வகைகளையும் தேவையான அளவு சேருங்கள்.

* முடிந்த அளவு வாகன பயணங்களை மேற்கொள்ளாதீர்கள்; அதிகமான தூரம் நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள்.

* தினமும் குறைந்தது, 50 முறை உட்கார்ந்து எழுவது நல்லது. அப்படி செய்தால் இடுப்பு அழகுப்படும்; தொந்தியும், வயிறும் குறையும்.

* குளிக்கும் போது எப்போதும் குதிகாலையும், கால் விரல்களையும் தேய்த்து கழுவுங்கள்.

* படுக்கைக்கு அருகிலும், வேலை பார்க்கும் இடத்துக்கு அருகிலும், ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து வைத்து கொள்ளுங்கள். தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் குடியுங்கள்.

* முளைவிட்ட கடலை, சிறுபயறு போன்றவைகளை காலை உணவில் சேர்க்க வேண்டும்.

* கை நகங்களை வெட்டி சுத்தம் செய்வதை, கடமையாக கொள்ளவும்.

* உறங்கும் போது காட்டன் துணிகளை அணியுங்கள்.

* அதிக சூடு, அதிக குளிர் உணவுகள் பற்களுக்கு கேடு பயக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

* இரவு இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டால், மறக்காமல் பற்களை சுத்தப்படுத்தி விடுங்கள்.

* இரவில் அதிக நேரம் விழித்திருப்பதும், பகலில் தூக்கம் போடுவதும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.

* கொழுப்பு நிறைந்த எண்ணெயை உணவில் சேர்க்காதீர்கள்; அது, உடல் அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் கேடு பயக்கும்.

* தினமும் காலையில் டீயோ, காபியோ குடிப்பதற்கு முன், ஒரு பழம் சாப்பிடுவது நல்லது.

* தினமும் காலையில், 10 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.