Saturday, October 12, 2013

காது பாதுகாக்க 10 வழிகள்


1. காதில் சேரும் பிசின் போன்ற குரும்பியின் (வேக்ஸ்) வேலையே காதைப் பாதுகாப்பதுதான். நமது தாடை அசைவின்போது தானாகவே அழுக்குகளை வெளியேற்றும் திறன் காதுகளுக்க உண்டு. கண்ட பொருட்களையும் காதில்விட்டுக் குடைந்து அழுக்கை நீக்க முயற்சிக்கக் கூடாது. ஏனெனில் காதில் உள்ள செவிப்பறையில் (நயச னரசஅ) ஒடடை விழுந்து கேட்கும் திறனை இழக்கும் அபாயம் உண்டு. காதில் எண்ணெய் விடுவதும் தவறு. தேவைப்பட்டால் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் மூலம் காதுகளைச் சுத்தம் செய்து கொள்ளலாம்.

தானியத்தின் மகத்துவம் - மூளையை பலப்படுத்தும் பாதாம் பருப்பு

பருப்பு வகைகளில் அரசன் என்று போற்றப்படுவது பாதாம் பருப்பைத் தான். நமது உடலுக்குத் தேவையானஅத்தனை சத்துக்களையும் தன்னகத்தே கொண்டுள்ள பாதாம், உடலையும் மனதையும் பலப்படுத்துகிறது.
பாதாம் பருப்பின் தாயாகம் மோராக்கோ ரோமானியர்கள் இதனை கிரேக்க பருப்பு என்று கூறுவார்கள் மோராக்கோ, இத்தாலி, பிரான்ஸ், போர்ச்சுகல, கலிபோர்னியா, ஆஸ்திரேலியா, வட ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய கண்டத்தின் பல பகுதிகளில் இது விளைகிறது. இந்தியாவை பொருத்தமட்டில் காஷ்மீர் மற்றும் இமாசலப் பிரதேசத்தில் அதிகமாக விளைகிறது.

கொட்டை பருப்பு வகைகளில் முதன்மை இடம் பிடிப்பது பாதாம் பருப்பு தான். இதனுடைய மருத்துவ குணங்கள் அனைத்தும் இதில் உள்ள செம்புச் சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் பி1 இவற்றைப் பொறுத்து அமைகின்றன. அதிக சக்தியை கொடுப்பதால் இது இரத்த சிவப்பணு உற்பத்திக்கு மிகவும் உதவுகிறது. உடலில் உள்ள மற்ற அணுக்களின் உற்பத்திக்கு புதுப்பித்தலுக்கு இது உதவுகிறது இருதயம், கல்லீரல்,   மூளை மற்றும் நரம்பு செயல்பாடுகளுக்கு மிகவும் உதவி புரிகிறது.

கேன்சர், ஹார்ட் அட்டாக்கை தவிர்க்க பூண்டு சாப்பிடுங்க:

அவசியம் தினமும் பூண்டு சாப்பிடுங்கள்

இன்று மேற்கத்திய நாகரீகம் இங்கே தலைவிரித்தாடும் நிலையில் நாம் அவர்கள் உணவு வகைகளை தேடித்தேடி சாப்பிட்டு வருகிறோம். துரித உணவு, அவியல் உணவு, ரெடிமேடு உணவுகழள சாப்பிடுவது என்பது பெரும்பாலோருக்கு பழக்கமாகிவிட்டது. இத்தகைய உணவை சாப்பிடுவதால் எதிர்காலத்தில் கேன்சர், மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.