Saturday, October 12, 2013

கேன்சர், ஹார்ட் அட்டாக்கை தவிர்க்க பூண்டு சாப்பிடுங்க:

அவசியம் தினமும் பூண்டு சாப்பிடுங்கள்

இன்று மேற்கத்திய நாகரீகம் இங்கே தலைவிரித்தாடும் நிலையில் நாம் அவர்கள் உணவு வகைகளை தேடித்தேடி சாப்பிட்டு வருகிறோம். துரித உணவு, அவியல் உணவு, ரெடிமேடு உணவுகழள சாப்பிடுவது என்பது பெரும்பாலோருக்கு பழக்கமாகிவிட்டது. இத்தகைய உணவை சாப்பிடுவதால் எதிர்காலத்தில் கேன்சர், மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.



ஆதலால், தினமும் சமையலில் பூண்மை சேர்தது உங்கள் குடும்பத்தை காத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தைக் காட்டிலும் கொஞ்சம் காரத்தன்மை அதிகம் கொண்டது பூண்டு. தமிழ் நாட்டில் பூண்டுக்கு பெயர் பெற்ற இடம்நீலகிரி


  • ஆங்கிலத்தில் -   கார்லிக என்றும்
  • சமஸ்கிருதத்தில் - லெசுனா
  • ஹிந்தியில்         - லஷன்
  • தமிழில்         - உள்ளி, பூண்டு, வெள்ளைப்பூண்டு, வெள்ள                                                           வெங்காயம், காயம் 

என இதற்கு பல பெயர்கள் உண்டு.

ஆரம்ப காலத்தில் பூண்டு மத்திய ஆசியாவில் பயிரிட்ப்பட்டது. இன்று உலகெங்கும் பயிரிடப்படுகிறது இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் சமையலுக்கும், மருத்துவத்திற்கும் பூண்டு உபயோகப்பட்டு வருகிறது.
பூண்டு கிழங்கு இனத்தைச் சேர்ந்த தாவர வகை. இது பல பருவ குறுஞ்செடியாகும். இதன் தரைக்கீழ் தண்டு சிமிழ் ஒரு மீட்டர் நீளம் வளரக்கூடியது. இந்த பசுமையானத் தண்டு உருளை வடிவில் இருக்கும். மலர்கள் வெள்ளையாக குடைபோல் இருக்கும். தரையடித் தண்டான சிமிழும், பூவும் மருத்துவப் பண்புகள் கொண்டிருக்கின்றன.


  • பூண்டின் உலர்ந்த வேர்ப்பகுதியில் (100 கிராம்) - 360 கலோரி
  • புரோட்டீன்                         - 13.5  
  • கொழுப்பு                         -  0.7
  • கார்போஹைட்ரேட்                - 82 கிராம் 
  • பைபர்                        -  3 கிராம்
  • தாது உப்புக்கள்(கால்சியம்)        -  65 மி.கி
  • பாஸ்பரஸ்                        -  400 மி.கி
  • அயன்                        -  4.3 மி.கி
  • மெக்னிஷியம்                          -  0 மி.கி
  • சோடியம்                        -  53 மி.கி
  • பொட்டாசியம்                -  1250 மி.கி
  • உயிர்சத்துக்கள் (விட்டமினகள்) தையாமின (பி1)-  0.7 மி.கி
  • ரிபோபிளைவின் (பி2)           -  0.2 கி
  • நியாசின்                           -  1.25 மி.கி
  • விட்டமின் சி                    - 35 மி.கி

உள்ளன. மேலும் பூண்டில் கந்தக சத்து, விட்டமின் 6, மங்கனீசு, செலினியம் ஆகிய சத்துகள் அதிக அளவு இருக்கிறது.

பூண்டின் மருத்துவ செயல்

1. அகட்டுவாயகற்றி:

அதாவது அகடு என்றழைக்கப்படும் வயிற்றில் உள்ள வாயுவை அகற்றிஇ வயிற்று உப்பிசம் வாயுகோளாறுகள் நீங்கும்.

2. கோழையகற்றி:

நுறையீரலில் உள்ள சளியை வெளிப்படுத்தும். ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கும்.புற்றுநோயை எதிர்க்கும் பண்பும் உண்டு புழுக்கொல்லி நோய் நுண்ணுயிர்களை அழிக்கும் ஆற்றல் உண்டு.

3. மருத்துவ பயன்கள்:

பூண்டில் உள்ள கந்தக சத்து பூண்டிற்கு மணத்தைக் கொடுக்கிறது. இந்த சத்துதான் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது ஆதலால் தான் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தயாரிக்க பூண்டு பயன்படுகிறது டைபாய்டு , டி.பி நோய் ஆகியவற்றை குணப்படுத்தவும். முதல் உரகப் போர்க்காலத்தில் காயங்களுக்கு கட்டுப்போடவும் பயன்பட்து.

4. இதய நோய்:

பூண்டை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் வருவதில்லை. ரத்தத்தில் அதிக அளவில் கொழுப்பு சேருவதில்லை. தொடர்ந்து பூண்டை சாப்பிட்டு வர, நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியைத் தூண்டுவதால் ரத்தக்குழாய்கள் சுருங்குவதில்லை. அதன்காரணமாக ரத்தக்குழாய் அடைப்பு தவிர்க்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் இதயநோய், பக்கவாதம் தவிர்க்கப்படுகிறது பூண்டில் உள்ள கந்தக்கூட்டுப் பொருளுடன் வருவதற்கு முதல் காரணம் ரத்தத்தில் கொழுப்பு சத்து அதிகமாகி ரத்தக்குழாயில் படிவதால் ரத்தக்குழாய் சுவர் தடிமனாகி விடுவதுதான். அதை பூண்டு சரிசெய்கிறது.

5. சர்க்கரை நோயாளிக்கு நண்பன் பூண்டு:

பூண்டு சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் இவர்கள் பூண்டை அதிகம் சேர்த்துக்கொண்டால் ரத்த சர்க்கரை அளவு குறைவதுடன் ஹார்ட் அட்டாக்கிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம். பூண்டு ரத்த ஒட்டத்தை அதிகரிக்கச் செய்து சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல் மரத்து போதல் போன்ற உபாதைகளை குணமாக்குகிறது.

6. பயன்படுத்தும் முறைகள்:


  • ரத்தத்தில் உள்ள அதிக கொழு;பபுச்த்து குறைய ரத்தக்குழாய் அடைப்பு குறைய தினமும் 20மி. பாலில் 30மி.நீர் 10 பூண்டு பற்கள் சேர்த்து வேகவைத்து தினமும் வெறும் வயிற்றில் குடித்துவரலாம்.


  • பூண்டுசாற்றை தொடர்ந்து 3 மாதம் வாரம் இரு முறை வீதம் குழந்தை முதல் பெரியோர் வரை உண்ண வைரஸ் போன்ற கிருமிகளால் ஏற்படும் நுரையீரல் நோய்களான ஆஸ்துமா, காசநோய்க்கு அது சிறந்த தடுப்பு மருந்தாக அமையும். 
  • வயிற்று வலி, அல்சர் நோய்களுக்கு பூண்டு ரசம், பூண்டு சட்னி, பூண்டு குழம்பை தினமும் ஒன்று வீதம் சாப்பிடலாம்.


  • மூட்டுகளில் ஏற்படும் வலி, நரம்பு வலி, முகவாதம், பக்கவாதம், குழந்தைகளுக்கு ஏற்கடும் வலிப்பு, தலைவலி முதலிய உபாதைகளுக்கு பூண்டு சிறந்த மருந்து. மூட்டு வலிக்கு காரணமான என்சைம்களை அழிக்கிறது. எனவே வாத நோய்காரர்கள் பூண்டை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் வலிகளுக்கு பூண்டு அரைத்து அந்த இடங்களில் பற்றாக போடலாம்.
  • பூண்டுசாற்றை 20-30துளி வீதம் தினம் இருமுறை உண்ண இருமல், இரைப்பு குணமாகும்
  • கடுகு அல்லது தேங்காய் எண்ணையுடன் பூண்டு சேர்த்து காய்ச்சி பூசினால் குடைச்சல், உடல்வலி, நரம்பு வலி, வாத நோய்கள் தீரும்.
  • பூண்டு அரைத்து உப்புடன் சேர்த்து தடவ சுளுக்கு குணமாகும்.
  • பூண்டுடன் மிளகு, சீரகம் சேர்த்து துவையலாக அரைத்து காலை உணவிற்கு குழந்தைகளுக்கு கொடுத்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் ஒழியும்.
  • பூண்டை அரைத்து அதனுடன் பனைவெல்லாம் சேர்தது காலை உணவில் சேர்த்துக்கொள்ள உடலில் ரத்த அணுக்கள் பெருகி ரத்த சோகை குணமாகும்.
  • நாள்பட்ட புண் குணமாக பூண்டுடன் மஞ்சள், வேப்பிலை அரைத்து போட்டு வந்தால் ஒருவாரத்தில் புண் ஆறும்.
  • உணவில் பூண்டை எந்த வழியிலாவது தினமும் 25 திராம் சாப்பிட வேண்டும். அவ்வாறு ஒராண்டு காலம் உண்டால் புற்றுநோய், மாரடைப்பு நோயிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment