Tuesday, October 7, 2014

அன்றாட சமையலுக்கு பயன்படுத்து மசாலா பொருட்களின் மருத்துவ குணங்கள்

நாம் அன்றாட சமையலுக்கு பொதுவாக பயன்படுத்தக்கூடிய ஆயுர்வேத மசாலாக்கள் உணவில் சுவை கூட்டுவதாகவும், போஷாக்கு நிறைந்த  உணவாகவும் கருதப்படுகிறது. 

கொத்தமல்லி


உண்மையாகவே சமையலுக்கு சிறந்த நண்பனாக உதவி புரிவது கொத்தமல்லி விதைகள். இதை சமையலில் தனியாக பயன்படுத்தாமல் மசாலா  பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்துகின்றனர். கொத்தமல்லி விதைகள் ஆயுர்வேதத்தில் உடல் மற்றும் மனதை சமநிலைப் படுத்துவதற்காக  பயன்படுத்துகின்றனர்.. ஆரோக்கியமான உடலுக்கு நன்மை சேர்க்கும் கொத்தமல்லி விதைகள் செரிமான பிரச்சனையை தவிர்த்து சுவாச  பிரச்சனைகள், சிறுநீர் கோளாறுகள், பித்தம் அதிகமாகுவதால் ஏற்படக்கூடிய தோல் வியாதி ஆகியவற்றை சரிசெய்கிறது.. பித்தம் அதிகமாகி பித்த  வாந்தி ஏற்பட்டால் கொத்தமல்லி விதைகளை இடித்து போட்டு காபி குடித்தால் பித்தம் தெளியும்.

ஹீமோகுளோபின் உற்பத்திக்கு பிஸ்தா

பிஸ்தாவில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளது. இது, இரத்ததில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. அதோடு மட்டுமில்லாது செல்களுக்கு ஆக்ஸிஜனை கொடுக்கிறது. 


பிஸ்தா பருப்பில் டெரிபின்தினேட், இனிப்புச் சுவையுடைய நறுமண எண்ணெய், காலோடானிக் அமிலம் ஆகியன காணப்படுகின்றன. இவை நரம்பு மணடலத்தை தூண்டி, ஹார்மோன்களின் சுரப்பை அதிகப்படுத்தி, புத்துணர்ச்சியை உண்டாக்குகின்றன. 

கருமையை போக்கும் எலுமிச்சை ஃபேஸ் பேக்

எப்போதும் டூ-வீலரில் பறக்கும் அவசரப் பறவையா நீங்கள் இந்த வெயில், உங்களின் மென்மையான முகம், கை, பாதம் போன்ற பகுதிகளை பதம் பார்த்துவிடுமே... என்ன செய்யப் போகிறீர்கள்? இதோ, உங்கள் சருமப் பாதுகாப்புக்கு ஒரு விசேஷ குளியல் பவுடர். 


எலுமிச்சை தோல்-50 கிராம், 
கஸ்தூரி மஞ்சள்-100 கிராம், 
கசகசா- 50 கிராம், 
பயத்தம் பருப்பு- கால் கிலோ... 

லவங்கம் மருத்துவ பயன்

* இலவங்கத்தை நீர்விட்டு மைய அரைத்து நெற்றி மீதும் மூக்குத் தண்டு மீதும் பற்றாகப் போட்டு வைக்க தலை பாரம், தலையில் நீரேற்றம், மூக்கடைப்பு ஆகியன குணமாகும். 


* இலவங்கத்தை லேசாக வதக்கி வாயிலிட்டுச் சுவைப்பதால் தொண்டைப் புண் ஆறும். ஈறுகள் கெட்டிப்பட்டு பற்கள் உறுதி பெறும்.