Friday, August 28, 2015

நல்லெண்ணெயை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்

நல்லெண்ணெயை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்



எண்ணெய்களில் பல உள்ளன. அந்த எண்ணெகளை எதில் இருந்து வருகிறதோ அதன் பெயர்களை வைத்துதான் சொல்லுவார்கள். உதாரணத்திற்கு தேங்காயில் இருந்து தான் தேங்காய் எண்ணெய் என்று சொல்லுவார்கள். ஆனால் நல்லெண்ணெய் எள்ளில் இருந்து வருகிறது ஏன் நாம் எள் எண்ணெய் என்று கூறாமல் நல்லெண்ணெய் என்று கூறுகிறோம். உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தருவதால் தான் என்னவோ, நம் முன்னோர்கள் இதனை நல்லெண்ணெய் என்று அழைக்கின்றனர் போலும். இந்த நல்லெண்ணெயை சமையலிலும் சேர்க்கலாம் அல்லது காலையில் வெறும் வயிற்றில் 1 டீஸ்பூன் குடித்தும் வரலாம்.இப்போது நல்லெண்ணெயை எடுத்துக் கொள்வதன் மூலம் பெறும் நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உணவில் நல்லெண்ணெயை சேர்க்க தவறாதீர்கள்.

மலச்சிக்கல் :

நல்லெண்ணெயை காலையில் வெறும் வயிற்றில் சிறிது குடித்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

கெட்ட கொழுப்பைக் கரைக்கும்:

 நல்லெண்ணெயில் லெசித்தின் என்னும் பொருளும், லினோலிக் என்னும் அமிலமும் இருப்பதால், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பைக் கரைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

இயற்கையான எளிய மருத்துவ குறிப்புக்கள்

இயற்கையான  எளிய மருத்துவ குறிப்புக்கள் 

தலை சுற்றல்,இருமல்,வறட்டு இருமல் ,ஆஸ்துமா, மூச்சுத்திணறல்,சளிகட்டு ,தலைபாரம் ,மார்புச்சளி,மூக்கடைப்பு,ஜலதோஷம்,வாந்தி,குமட்டல் இவற்றை போக்க எளிய மருத்துவ குறிப்புக்கள்

தலை சுற்றல் குணமாக:

சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவைகளை 5 கிராம் வீதம் பவுடராக்கி தினசரி காலை, மாலை அரை கரண்டி சாப்பிட தலை சுற்றல் குணமாகும்.

இருமல் குணமாக:

ஜலதோஷம், காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.

தேனீன் பயன்கள்

தேனீன் பயன்கள்





பித்தத்திலிருந்து விடுதலை பெற எளிய இயற்கை மருத்துவ முறைகள்

பித்தத்திலிருந்து விடுதலை பெற எளிய இயற்கை மருத்துவ முறைகள்


விருப்பமான உணவுகள், மசாலா உணவுகள் பேன்றவற்றைப் பார்த்தால் சாப்பிடலாமா, வேண்டாமா என்ற அச்சம். அதிகம் சாப்பிடலமா சாப்பிட்டால் ஜீரணமாகுமா நெஞ்சு கறிக்குமா எதுக்கிக்கெண்டே இருக்குமா இதுபேன்ற கேள்விகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குவது பித்தம். இந்த பித்தம் தெடர்பான பிரச்சினைகளையும், அதனை பேக்கும் எளிய இயற்கை மருத்துவ முறைகளையும் இப்போது பார்ப்பேம்...

* இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.

* இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.

* பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

பழங்களின் மருத்துவ குணங்கள்

பழங்களின் மருத்துவ குணங்கள் 


* கற்பூர வாழை கண்ணிற்கு குளிர்ச்சி தரும்.
* செவ்வாழை கல்லீரல் வீக்கம், சிறுநீர் வியாதிகளை குணமாக்கும்.
* பச்சை வாழைப்பழம் குளிர்ச்சியைக் கொடுக்கும்.
* ரஸ்தாளி வாழை கண்ணிற்கும், உடல் வலுவிற்கும் நல்லது. பேயன் வாழைப்பழம் வெப்பத்தைக் குறைக்கும்.
* நேந்திரம் பழம் இரும்புச் சத்தினை கொடுக்கும்.
* பப்பாளிப் பழம் மூல வியாதிக்காரர்களுக்கு நல்லது.
* மாம்பழம் ரத்த அழுத்தத்தை சீராக்கும்.