Sunday, January 5, 2014

இயற்கை மருத்துவம் - ஆரோக்கியமான சருமத்தை பெறுவதற்கான சில இயற்கை வைத்தியங்கள்!!!

 ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் சருமத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்று அனைத்து பெண்களுக்கும் ஆசை உண்டு. மிக முக்கியமாக கல்லூரிக்கு செல்லும் பெண்கள் இதை மிக அவசியமாக கருதுகின்றனர். ஏனெனில் அவர்கள் மற்றவர்களை விட அழகாகவும் தனித்துவமாகவும் தெரிய வேண்டுமென்று விரும்புகின்றனர். இயற்கையான சரும பராமரிப்பு என்பது பெண்களிடையே பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இவற்றை இயற்கையான முறையில் பெற விரும்பும் பெண்கள், இயற்கை மூலிகைகளை பயன்படுத்துவதில் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர்.


மேலும் இதையே முதன்மையாக தேர்ந்தெடுத்து, தங்களை அழகுபடுத்திக் கொண்டு மற்றவர்கள் முன்னே ஒரு நல்ல படைப்பாக இருக்க விரும்புகின்றனர். உங்களுக்கு பல சந்தேகங்கள் இருக்கலாம். அதாவது இலையைக் கொண்டு சருமத்தை எப்படி அழகுபடுத்த முடியும் என்ற எண்ணமும் ஏற்படலாம். அது முடியுமா என்றால் முடியும் என்பதே பதிலாகும். மற்றும் பல அருமையான மூலிகைகளை கொண்டு அற்புதமான பளபளப்பையும் அழகையும் எந்தவிதமான பக்க விளைவுகளுமின்றி பெற முடியும். சில மிகுந்த பலன் தரக்கூடிய இயற்கை மூலிகைகள்