Friday, September 19, 2014

இரத்த புற்று நோயை தடுக்கும் வாழைப்பழம்

வாழையில் உடல் நலத்தைப் பேணி பாதுகாக்க கூடிய பல்வேறு மருத்துவப் பொருள்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக `செரடோனின்' `நார் எபிநெப்ரின்' `டோபமைன்' என்னும் மருத்துவ சத்துக்கள் மலிந்துள்ளன. இதில் செரடோனின் என்பது ஒருவகை ``ஹார்மோன் ''மட்டுமின்றி உணர்வு கடத்தி ஆகும். 

இச்சத்து உடலிலுள்ள பல திசுக்களிலும், ரத்த வைட்டமின்களிலும் குடற்பகுதியின் உட்புறம் உள்ள சளிப்பகுதியிலும் பினியல் கிளாண்ட் என்னும் சுரப்பியிலும் மத்திய நரம்புப் பகுதியிலும் காணப்படுகிறது செர்டோனின் எனும் மருந்து சத்து குடலில் சீரணத்துக்கான திரவத்தைச் சுரக்கச் செய்து, மென் திசுக்களைச் தூண்டி செயல்பட வைப்பது, ரத்த நாளங்கள் சுருங்கி விரிவடையத் துணை நிற்கிறது. 

உடலில் தங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற உதவும் உணவு

உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (metabolism) ஊக்குவிக்க சிறந்த வழி என்றால், கொழுப்பை குறைக்கும் உணவுகளை வழக்கமான ஆகாரத்தில் சேர்த்து கொள்வதாகும். சரி இப்போது உடலில் தங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற உதவும் உணவுகளை பார்க்கலாம். 


பால் பொருட்கள் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண்ணுதல், கொழுப்பின் அடர்த்தியை குறைக்கவும், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே உடலில் உள்ள கொழுப்பை குறைக்க முயற்சிக்கும் போது கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். 

ஒவ்வொரு நோய்க்கும் செய்ய வேண்டிய முதல் உதவி


எதைச்செய்தாலும் உரிய நேரத்தில், முதலில் செய்ய வேண்டும் என்பார்கள். உதவியும் அப்படித்தான். முதலில் செய்தால்தான் அது பயன் உள்ளதாக இருக்கும். எனவே தான் முதல்- உதவி முக்கியத்துவம் பெற்றுள்ளது. வாய்கிழிய பேசுபவர்களிடம்,வயிற்று வலிக்கு என்ன முதல் உதவி செய்வது என்று கேட்டால், பதில் சொல்ல திணறி போவார்கள். 

அப்படி இருக்கக்கூடாது. என்ன நோய்க்கு, என்ன முதல் உதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமை உலக முதல்-உதவி தினமாகக் கொண்டாடப்படுகிறது அந்த வகையில் இன்று (சனிக்கிழமை) உலக முதல் உதவி தினமாகும். 

இதை முன்னிட்டு நீங்கள் தெரிந்து கொள்ள சில முதல் உதவி தகவல்கள்...