Thursday, January 5, 2017

இறால் முட்டை தொக்கு

இறால் முட்டை தொக்கு




தேவையான பொருட்கள்:

  • இறால் 250 கிராம்
  • முட்டை - 1
  • எண்ணெய் 
  • ப. மிளகாய்  - 2
  • வெங்காயம் - 1
  • கறிவேப்பிலை
  • இஞ்சி பூண்டு விழுது
  • தக்காளி - 1
  • உப்பு
  • மிளகாய் தூள் 
  • மஞ்சள் தூள்
  • தனியா தூள்
  • பெருங்காயம்


செய்முறை:

முதலில் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் இவற்றை சிறுசாக வெட்டிக்கொள்ளவும். பின்பு வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். அதன் பின்பு கறிவேப்பிலை போட்டு வதக்கவும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும் அதன் பின்பு தக்காளியை சேர்த்து வதக்கவும் அதனுடன் தூள் வகைகளை சேர்த்து கிளறவும் கொஞ்சமாக தண்ணீர் விட்டு தூள் வாசம் போகும் வரை கிளறவும். பின்பு இறால் போட்டு கிளறவும் இறால் வெந்தவுடன். முட்டையை வேறு ஒரு பேனில் ஊற்றி அதற்கு தேவையான உப்பு பெருங்காயம் சேர்த்து கிளறவும். முட்டை கலவையை இறால் உடன் சேர்த்துக் கலக்கவும். சுவையான இறால் முட்டை தொக்கு ரெடி.

குறிப்பு: முட்டையை இறாலில் ஊற்றினால் முட்டை வாசத்தால் இறால் தொக்கு நன்றாக இருக்காது.