Monday, November 17, 2014

நீரிழிவு நோய் வராமல் தடுக்கவும், வந்த பின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் சில வழிமுறைகள்


இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருக்கலாம் என்ற நிலை உருவாகி வருகிறது. முதுமை அடைந்தால்தான் வரும் என்ற நிலைமை மாறி, இளம் வயதிலேயே இந்தத் தொற்றாத நோய் பெருக ஆரம்பித்துவிட்டது.


உடல் இயக்கம் இல்லாமை, கொழுப்பு-சர்க்கரை கொண்ட உணவை அதிகம் உட்கொள்ளுதல், மன அழுத்தம் அதிகரிப்பு போன்றவற்றால் இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படுவதும், உடல் ஊதுவதும்தான் இதற்குக் காரணங்கள்.


நீரிழிவு நோயின் அடிப்படைகளை முழுமையாக அறிந்துகொண்டு, விழிப்புணர்வுடன் செயல்பட்டால் இந்நோய் வராமல் தடுக்கவும், வந்த பின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் முடியும்.

தியானம் செய்ய கடைப்பிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்

தினமும் சுமார் 20 நிமிடங்கள் தியானம் செய்து வந்தால் நம் உடலும் மனமும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். நீண்ட நாட்கள் சந்தோஷத்துடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பதற்கும் அது உதவும். பல்வேறு அறிவியல் ஆய்வுகளும் கூட இதை நிரூபித்துள்ளன.


நம்முடைய சில உடல் குறைபாடுகளுக்கு தியானம் தான் மிகச் சிறந்த தீர்வாக அமைகிறது. நாம் எந்த வயதில் வேண்டுமானாலும் தியானம் செய்யலாம் என்பது எல்லோருக்கும் ஒரு பெரிய ப்ளஸ்! தியானம் செய்யும் போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில அடிப்படை விஷயங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.