Wednesday, November 12, 2014

எளிய மருத்துவக் குறிப்புகள்


1. கண்ணைச் சுற்றிக் கருவளையம்:

பாலை நன்றாகக் காய்ச்சி ஆற விட்டு வடிகட்டி வைக்கவும். ஒரு கரண்டியில் அந்தப் பாலை எடுத்துக்கொண்டு, சுத்தமான வெள்ளைத் துணி அல்லது பஞ்சை எடுத்து அந்தப் பாலில் தோய்த்து, கண்களின் மீது வைத்துக்கொண்டு 15 நிமிடம் படுத்துக்கொள்ளவும். இப்படிச் செய்துவந்தால் கண் சோர்வு நீங்குவதுடன் கருவளையமும் மறைந்துவிடும். கண்கள் பொலிவுடன் இருக்கும். வெயில் காலத்தில் இது கண்களுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும்.

2. இளநரை, கண் எரிச்சல், பித்தம்:

அகத்திக்கீரையை 15 நாளுக்கு ஒரு முறை சமைத்துச் சாப்பிட்டுவரவும். அகத்திக்கீரை பொடியாகவே நாட்டுமருந்துக் கடைகளில் இப்போது கிடைக்கிறது. அதை வாங்கி ஒரு டம்ளர் மோரில் ஒரு ஸ்பூன் கலந்து வெறும் வயிற்றில் வாரத்துக்கு 3 முறை சாப்பிடவும். இம் மூன்றுக்கும் அது நல்ல மருந்து.

உடலில் இருக்கும் கெட்ட வாயுக்களை வெளியேற்றுவதற்கு உதவும் பவனமுக்தாசனம்

உடலில் இருக்கும் கெட்ட வாயுக்களை வெளியேற்றுவதற்கு உதவும் ஆசனம் இது. (பவன – வாயு, முக்தி – விடுதலை).


செய்முறை

# மல்லாந்து படுத்துக் கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும்.

# உடலை ஆசுவாசமாக வைத்திருங்கள். ஆழமாக மூச்சை இழுத்து விடலாம்.

# கால்களை 90 டிகிரி மேலே தூக்குங்கள். இதைச் செய்ய இயலாதவர்கள் சற்றே மடித்த நிலையிலும் தூக்கலாம்.

உடல் பருமனைக் குறைக்கும் பயறு

உடலுக்குச் சக்தியும் வலுவும் தரும் உணவுப் பொருட்களில் தானியங்களுக்குத் தனியிடம் உண்டு. ஒவ்வொரு தானியத்துக்குக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. அவற்றைத் தெரிந்துகொண்டு சாப்பிட்டு உடலை வலுப்படுத்தலாம்.


சோளம்: உடலுக்கு உறுதியை அளிக்கும். உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண், வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.

கோதுமை: நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த உணவு. மலச்சிக்கல் உண்டாகாது. உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும். உடல் வறட்சியைப் போக்கும். குடல் புண்ணை ஆற்றும்.

இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பு குறைக்கும் வீரபத்ராசனம்

வீரபத்ராசனத்தில் மூன்று விதமான நிலைகள் உள்ளன. அவற்றில் முதல் நிலையைப் பார்ப்போம்.

முதல் நிலை:

# தாடாசனத்தில் நில்லுங்கள். மூச்சை உள்ளிழுத்தபடி கால்களை விரிக்க வேண்டும். சற்றே குதித்தும் கால்களை விரிக்கலாம். மூன்றரை முதல் நான்கு அடி தூரம் வரை விரிக்கலாம்.

# இடது கால் பாதத்தை 45 முதல் 60 டிகிரிவரை வலது புறம் திருப்புங்கள். வலது கால் பாதத்தை 90 டிகிரிவரை வலது புறம் திருப்புங்கள்.

மரீச்யாசனம்


செய்முறை

# தண்டாசனத்தில் அமருங்கள். நீட்டியிருக்கும் கால்களின் குதிகால் பகுதிகள் வெளிப்புறம் இழுக்கப்பட்டிருக்க, நுனிக் கால்கள் உடலை நோக்கியபடி இருக்க வேண்டும். முழங்கால்கள், தொடைகள் இறுக்கமாக இருக்கட்டும்.

# இடது கால் நேராக அப்படியே இருக்க, வலது காலை மடித்துப் பாதத்தைத் தொடைக்கு அடியில் கொண்டுவாருங்கள்.

# இப்படிக் கொண்டுவரும்போது மூச்சை உள்ளே இழுத்துக்கொள்ளுங்கள்.

# வலது கால் பாதம் முழுவதும் கீழே பதிந்திருக்க வேண்டும்.

தலைவலிக்கு சிறந்த கை மருந்துகள்

ஒற்றைத் தலைவலியால் (Migraine headache) அவதிப்படுகிறவர்கள் மிக அதிகம். ரத்தநாளங்களை அழுத்தமாகத் துடிக்கச் செய்கிற, தலையின் ஒருபகுதியில் மட்டும் வலியை உண்டாக்குகிற, வாந்தி அல்லது வாந்தி எடுக்கும் உணர்வுடன் கூடிய, சூரிய ஒளியைக் கண்டால் அதிகரிக்கிற தலைவலியை ஒற்றைத் தலைவலி என்கிறார்கள்.


இந்தத் தலைவலி சில மணி நேரமோ, சில நாட்களுக்கோ காணப்படும். இருட்டில் போய் அமர வேண்டும் என்று தோன்றும். கண்களில் ஒளிவட்டங்கள் தெரியும். கை மரத்துப் போகலாம். சாதாரண வலி மாத்திரைகளுக்குக் கட்டுப்படாமல் போகலாம். மலச்சிக்கல், மனச்சோர்வு, உணவில் அதிக நாட்டம், கழுத்து வலி, கொட்டாவி விடுதல் போன்றவை இதில் காணப்படும்.