Friday, July 11, 2014

சீரகத்தின் மருத்துவ குணங்கள்

சீரகம் நற்சீரகம், காட்டு சீரகம், கருஞ்சீரகம், பெருஞ்சீரகம் அல்லது சோம்பு என பல வகைப்படும். நற்சீரகமும் பெருஞ்சீரகமும் உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும். மற்றவை மருந்தாக மட்டுமே பயன்படும். சீரகத்தை மருந்தாகப் பயன்படுத்தும்முன் அதை நச்சு நீக்கிச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். 

பொதுவாக சீரகத்தை சுண்ணாம்பு நீரில் ஒரு இரவு முழுவதும் ஊறவைத்து எடுத்து உலர்த்தி புடைத்து சுத்தப்படுத்தி வைத்துக்கொண்டு மருந்துக்கு உபயோகப்படுத்துவது சிறந்த முறையாகும். சீரகத்தின் மருத்துவ குணங்கள்:- 

நிறைய சத்துகளையும் கொண்ட பீட்ரூட்


'செக்கச் செவேல்' சிவப்பு நிறத்துடன் நிறைய சத்துகளையும் கொண்ட காய், பீட்ரூட். இது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட பெருமை பெற்றுத் திகழ்கிறது. பீட்ரூட்டின் சில மருத்துவப் பயன்களை இங்கே பார்க்கலாம்... 

  • பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும். 

கைகளை கழுவுவதால் நோய் தீருமா


நம் உடலை நோய் அணுகாமல் தடுக்கும் சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம். அதற்கான வழிமுறைகளில் மிக முக்கியமானது நம் கைகளை சுத்தப்படுத்துவது. அதாவது கை கழுவுவது. கைகளை கழுவுவதால் நோய் தீருமா என்ற எண்ணம் சிலருக்குத் தோன்றலாம். 

பல்வேறு நோயிகளுக்கு மருந்தாகும் மிளகு

மிளகை மருந்தாகப் பயன்படுத்தும் போது 500 மி.கி. முதல் 1000 மி.கி. வரை ஒரு வேளைக்குப் போதுமானதாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேனில் குழைத்தோ அல்லது வெந்நீரில் கலந்தோ உள்ளுக்குக் குடிக்கலாம். மனிதர்க்கு வாதத்தால் வந்த நோய்கள் அத்தனையையும் போக்க வல்லது. 


மேலும் சீழ் வடியும் நிலையில் உள்ள மூல நோயினர்க்கு நன்மை தரக் கூடிய மருந்தாக மிளகு அமைவதாகத் தெரிகிறது. தீப்போலத் திரிந்து நன்மை தரக் கூடியதாக இருக்கும் மிளகை எவ்வகையிலேனும் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் வாத, பித்த, சிலேத்தும நோய்கள் அத்தனையும் மறைந்து போகும். 

அஜினோமோட்டோ ஆபத்தை உருவாக்கும் குணம் கொண்டது

கடந்த சில ஆண்டுகளாக பிரபலமாகி வரும் அஜினோமோட்டோ என்ற உப்பும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். இந்த அஜினோமோட்டோவின் விஷத்தன்மை பற்றி இருவேறு கருத்துகள் இருந்தபோதிலும் பல மருத்துவ ஆராய்ச்சிகள் மனிதர்களுக்கு அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு இது பலவித ஆபத்துகளை உருவாக்கும் என்று நிரூபித்துள்ளன. 

கருவுற்ற எலிகளுக்கு அஜினோமோட்டோ கலந்த உணவைத் தொடர்ந்து கொடுத்து வந்தால் அவற்றின் குட்டிகளுக்கு மூளைப் பகுதியில் உள்ள செல்கள், அளவில் சுருங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தினமும் ஒரு கேரட் சாப்பிடலாம்

கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் அதிகம் நிறைந்தது கேரட். வைட்டமின் ஏ சத்து கல்லீரலுக்கு மிகவும் நல்லது. 

* வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், மூல உபத்திரம், வயிற்றுவலி இருப்பவர்கள், கேரட்டை திப்பியில்லாமல் அரைத்து ஜுஸாகக் குடிக்கலாம். விரைவில் குணமடையும்.