Saturday, January 7, 2017

பீன்ஸ் குருமா (அ) பீன்ஸ் கறி

பீன்ஸ் குருமா (அ) பீன்ஸ் கறி



அரைக்க தேவையான பொருட்கள்:


  • தேங்காய் - அரை முடி
  • இஞ்சி – 1 துண்டு
  • வெங்காயம் - 2 சிறியதாக 
  • பூண்டு – 10 பல்
  • பச்சை மிளகாய் - 2
  • கிராம்பு - 4
  • பட்டை – 2
  • ஏலக்காய் - 3


தேவையான பொருட்கள்:-

  • பச்சை பீன்ஸ் - 100 கிராம்
  • வெங்காயம் - 1 பெரியதாக
  • உப்பு – தேவையான அளவு
  • கரமசாலா – 2 ஸ்பூன்
  • சோம்பு – 1 ஸ்பூன்
  • மஞ்சள் - 1 ஸ்பூன்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி


செய்முறை :-

முதலில் வாணலில் எண்ணெய் விட்டு அரைக்க வேண்டிய பொருட்களில் (தேங்காயை தவிர) மற்றவையை வதக்கி அரைத்துக்கொள்ளவும். பின்பு குக்கரில் பீன்ஸ் உப்பு மஞ்சள் இவற்றை சேர்த்து 3 விசில் விட்டு எடுத்துக்கொள்ளவும். பின்பு வாணலி;ல் எண்ணெய் விட்டு சோம்பு பொறிந்தவுடன் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் அதனுடன் அரைத்த கலவையை சேர்க்கவும். பின்பு கரமாசாலாவை சேர்க்கவும். பின்பு வேகவைத்த பீன்ஸ் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும். நன்றாக கொதித்தவுடன் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். சுவையான பீன்ஸ் குருமாவை சப்பாத்தி மற்றும் சோறுவுடன் சேர்த்து சாப்பிடலாம்

பஞ்சரத்தினா மலாய் கறி (பச்சை பட்டாணி மலாய் கறி)

பஞ்சரத்தினா மலாய் கறி 



அரைப்பதற்கு:-

  • ப.மிளகாய் - 3
  • கொத்தமல்லி
  • முந்திரி பருப்பு – 20 அரை மணிநேரம் ஊறவைத்தவை


தேவையான பொருட்கள்

  • பன்னீர் - 4 துண்டு 
  • நெய் - 4 ஸ்பூன்
  • ஏலக்காய் - 4
  • சீரகம்
  • பச்சை மிளகாய் - 1
  • மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள்
  • கராமசாலா தூள்
  • உப்பு
  • சர்க்கரை
  • 15 பாதாம்
  • 2 ஸ்பூன் பிஸ்தா
  • பச்சை பட்டாணி
  • மக்காச்சோளம்
  • 75ஆட கிரீம்


செய்முறை:

அரைக்க கொடுத்துள்ளவையை நன்றாக மைய தண்ணீர் கொஞ்சம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும. பின்பு அடுப்பில் வாணலை வைத்து சூடான உடன் நெய் 4 ஸ்பூன் ஊற்றவும். நெய் சூடான உடன் ஏலக்காய் சீரகம் பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து வதக்கவும். தூள் வகைகளை சேர்த்து சிறிது நேரம்  வதக்கியவுடன் அதில் அரைத்த கலவையை சேர்த்து கலக்கவும். கறுகமால் இருக்க சிறிது அளவு  தண்ணீரை மற்றும்  பின்பு உப்பு தேவையான அளவு சேர்க்கவும் அதனுடன் 1 சிட்டிகை சர்க்கரையும்  
சேர்க்கவும் அவற்றுடன் பாதாம் பிஸ்தா பச்சை பட்டாணி மக்காச்சோளம் சேர்த்து நன்கு கிளறவும்.  அதனுடன் குசநளா  கீரிம் சேர்த்து நன்றாக கிளறவும் . சுவையான பஞ்சரத்தினா மலாய் கறி ரெடி

டிங்ளிக் பாத் (கோவைக்காய் பாத்)

டிங்ளிக் பாத் (கோவைக்காய் பாத்)



அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:-


  • சீரகம் - அரை ஸ்பூன்
  • தனியா – 1டேபில் ஸ்பூன்
  • லவங்கம் - 4
  • பட்டை - 2
  • வெ.எள் - 1 ஸ்பூன்
  • கொப்பரை தேங்காய் - 4 பல்
  • பெருங்காயத்தூள்


தேவையான பொருட்கள்:-


  • நெய்  - 6 ஸ்பூன்
  • பச்சை மிளகாய்
  • கோவைக்காய் - 100
  • கடுகு
  • சீரகம்
  • லவங்கம்
  • பட்டை
  • கறிவேப்பிலை
  • பிரியாணி அரிசி -1 கப்
  • துருவிய தேங்காய்
  • உப்பு
  • கொத்தமல்லி


செய்முறை:-

முதலில் அரைப்பதற்கு தேவையான பொருட்களை வாணலில் போட்டு வறுத்து அரைத்துக்கொள்ளவும். பின்பு அடுப்பில் குக்கரை வைத்து நெய்யை 4 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் கடுகு சீரகம் லவங்கம் பட்டை இவற்றை போட்டு பொறிந்தவுடன் பச்சை மிளகாயை மற்றும் கோவைக்காயை சேர்க்கவும் அதனுடன் ஊறவைத்த 1கப் பிரியாணி அரிசி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து கிளறவும். அதனுடன் துருவிய தேங்காயை சேர்த்து கிளறவும் தேவையான உப்பு மற்றும் அரைத்த கலவையை சேர்த்து கிளறவும். பின்பு 1கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் சேர்த்து கிளறியவுடன் குக்கரில் 3 விசில் போடவும். சுவையான டிங்ளிக் பாத் ரெடி

பன்னீர் கட்லெட்

பன்னீர் கட்லெட்



தேவையான பொருட்கள்:-


  • எண்ணெய்
  • குடமிளகாய் - 3 கலர்
  • சீரகம்
  • ப.மிளகாய்
  • கறிவேப்பிலை
  • மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள்
  • கரமசாலா தூள்
  • பன்னீர்
  • சாதம்
  • கொத்தமல்லி
  • மைதா
  • பிராட் தூள்


செய்முறை:-

வாணலில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் சிறுசாக கட்பண்ண மூன்று வகையான குடைமிளகாயை சேர்த்து வதக்கவும். பின்பு பச்சைமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்பு தூள் வகைகளை தேவையான அளவு சேர்த்து வதக்கவும். அதனுடன் துருவிய பன்னீரை சேர்த்து சிறிது நேரம் கலக்கவும். (கெட்டியாக வரும் வரை கலக்கக்கூடாது) பின்பு சாதம் நன்றாக மசித்து சேர்த்து கலக்கி வேறு ஒரு பவுலில் எடுத்துக்கொள்ளவும் அதனுடன் கொத்தமல்லியை சேர்த்து மசித்து கொள்ளவும். பின்பு மைதாவை கரைத்துக்கொள்ளவும் தண்ணீராக வைத்துக்கொள்ளவும். பின்பு பிராட் தூளை எடுத்துக்கொள்ளவும். மசித்த கலவையை உருண்டையாக உருட்டவும். பின்பு கட்லெட் போல் செய்துக்கொள்ளவும். மைதா கலவையில் போட்டு பின்பு பிராட் தூளில் போட்டு கட்லெட்டை சூடான எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும். சுவையான பன்னீர் கட்லெட் ரெடி

குஜராத் கறி

குஜராத் கறி




தேவையா பொருட்கள்


  • நெய் - 3 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • பெருங்காயதூள்
  • சீரகம்
  • கடுகு
  • கடலை மாவு – 3 ஸ்பூன்
  • தயிர் - 6 ஸ்பூன்
  • ப. மிளகாய் - 1 
  • தக்காளி – 1
  • கொ.மல்லி

செய்முறை:

முதலில் கடலைமாவு 3 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போல் கலக்கிக்கொள்ளவும். பின்பு வணலில் நெய் ஊற்றி நெய் சூடானதும் கடுகு சீரகம் போட்டு பொறிந்தவுடன் பச்சைமிளகாயை சிறிதாக கட் செய்து அதில் போட்டு கிளறவும் பின்பு பேஸ்ட்டை சேர்த்து தேவையான 
அளவு உப்பு பெருங்காயத்தூள் மற்றும் கொத்தமல்லி சேர்த்து கொதிக்கவிடவும். அதன் பின்பு  தக்காளியை நான்காக வெட்டி அதில் போட்டு கிளறவும். அந்த சூட்டில் தக்காளி வெந்தவுடன் இறக்கி சப்பாத்தி மற்றும் நாண் இவற்றுடன் குஜராத் கடியை சேர்த்துக்கொள்ளலாம்