Wednesday, February 11, 2015

குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?

குலதெய்வங்கள் என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன...? குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?

என்பவைகளை பற்றி. சற்று விரிவாக ஆராயலாம்..வாருங்கள் !!!!!
நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி  தாத்தா பாட்டி வணங்கி வந்த தெய்வம் தான் நம் குலதெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார்வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்துகவனித்தால் உணரலாம். அதுதான்‘ கோத்திரம்’ என்னும்ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.
பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்தவழி பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கை துணையாக கை பிடித்திருப்பார்கள்.
எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண்சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால்,ரிஷி பரம்பரையானது சங்கிலி கண்ணி போல அறுடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்தவிஷயமாகும்.
இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.அந்த கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம் போகாமலும் இருக்கலாம்.அதற்கு உத்தரவாதமில்லை.
ஆனால், குலதெய்வகோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால்அங்கு கொண்டு செல்லப்பட்டு,முடி காணிக்கை என்ற முதல் மொட்டை மற்றும் காது குத்து என்று தொடர்ந்து வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம்பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.