Monday, November 11, 2013

சத்துப் பட்டியல்:தேங்காய்

தேங்காய் சேர்க்காத குழம்பு வகைகள் தமிழகத்தில் குறைவு. அதில் இருந்தே தேங்காயின் பெருமையை புரிந்து கொள்ளலாம். தென்னை மரத்தின் கனிதான் தேங்காய் என்றாலும்


அது பருப்பு வகையோடு பிரித்து அறியப்படுகிறது. இதில் அடங்கிய சத்துக்களின் விவரத்தை அறியலாம்...

வீட்டு மருத்துவம்



  • நெல்லி வற்றல்- சந்தனத்தூள்- கொத்தமல்லி மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்தபின் வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலை சுற்றல், கிறுகிறுப்பு முதலியன குறையும். 
  • வெல்லத்தை கெட்டியாகப் பாகு வைத்து அதில் மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு உருட்டி வைத்தால் இருமல் வரும்போது வாயில் அடக்கிக் கொள்ள இருமல் நிற்கும். 
  •  மண் சட்டியில் உப்பை வறுத்துத் துணியில் கட்டி உப்பு ஒத்தடம் இரண்டு மூன்று வேளை கொடுத்தால் கழுத்து வலி நீங்கிவிடும்.

மூலிகை மருந்து:அரிவாள்மனை பூண்டு மருத்துவக் குணம்

அரிவாள்மனைப் பூண்டின் இலையை கசக்கி வெட்டுக் காயத்தில் பிழிய ரத்தப்பெருக்கு உடனே நின்றுவிடும். அரிவாள்மனைப் பூண்டின் இலை, அதேயளவு குப்பை மேனி இலை கைப்பிடியளவு, பூண்டுப் பல் 2, மிளகு, 3 சேர்த்து அரைத்த புன்னக்காய் அளவு உள்ளுக்குக் கொடுத்து, காயத்திலும் வைத்துக் கட்ட நஞ்சு முறியும் (உப்பு, புளி நீக்கவும்)

கல்லீரலில் உள்ள கொழுப்பை மருந்து பூண்டு

பூண்டின் பிறப்பிடம் ஆசியா கண்டம்தான். தற்போது சீனாவில் தான் அதிக அளவில் பூண்டு உற்பத்தியாகிறது. அதற்கு அடுத்தபடியாக இந்தியாவிலும், ஆப்பிரிக்கா, ஐரோப்பாஆகிய நாடுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூண்டுவை மனிதர்கள் உணவில் சேர்க்கத் தொடங்கிவிட்டார்கள். 

பூண்டில் வைட்டமின்கள் 'ஏ', பி1, பி2, பி6 ஆகியவைகளும், பொட்டாசியம், புரதச்சத்து, தாமிரசத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட சத்துக்களும் நிரம்பி உள்ளன. பூண்டுவை குழம்பில் சேர்த்தாலோ வேறு பதார்த்தங்களில் சேர்த்து சாப்பிட்டாலோ வாயுத்தொல்லையில் இருந்து விடுபடலாம். ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.