Wednesday, February 25, 2015

ராஜ்மா சீஸ் சப்பாத்தி

ராஜ்மா சீஸ் சப்பாத்தி



தேவையான பொருள்:-


  • கோதுமை மாவு - 1 கப்
  • மூன்று வண்ணங்களைக் கொண்ட குடமிளகாய் - 3
  • ராஜ்மா - 1 கப்
  • பச்சைமிளகாய் பேஸ்ட் - 1 ஸ்பூன்
  • வெண்ணெய் - 1 ஸ்பூன்
  • பாலாடைக்கட்டி - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு
  • பூண்டு - 8 பல்
  • கொத்தமல்லி - சிறிது

Thursday, February 19, 2015

புற்றுநோயின் ஆரம்ப நிலையில் உள்ள தாக்கம் குறைய வெண் பூசணிக்காய்

புற்றுநோயின் ஆரம்ப நிலையில் உள்ள தாக்கம் குறைய வெண் பூசணிக்காய் 


கிராமப்புறங்களில் மார்கழி மாதம் முழுவதும் அனைவரின் வீட்டு கோலங்களின் மீது தவறாமல் இடம் பெறுவது இந்த பூசணிப் பூ. நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளில் முக்கியமானதும் நமது உடலுக்கு பல வகைகளில் பயன்படக் கூடியதுமான பூசணிக்காய் பற்றி பார்ப்போம்.

Tuesday, February 17, 2015

இளமையை காக்கும் துளசி

இளமையை காக்கும் துளசி 


நந்தவனத்தில் எத்தனைச் செடிகள் இருந்தாலும், அது நந்தவனமாகாது. அதே நேரத்தில் ஒரு துளசி செடி மட்டுமே இருந்தாலும் அது நந்தவனம் ஆகிவிடும் என்கிறது வேதம். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தை. 300க்கும் மேற்பட்ட துளசி வகைகள் இருந்தாலும் வெண்துளசியைத்தான் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம்.

Thursday, February 12, 2015

உடல் பருமனைக் குறைக்கும் சுக்கு சூப்

உடல் பருமனைக் குறைக்கும் சுக்கு சூப்


அதிக கொழுப்பு மற்றும் கலோரி நிறைந்த உணவை சாப்பிடும்போது, தேவைக்கு அதிகமான கலோரிகள் பயன்படுத்தப்படாமல் உடம்பில் அதிகக் கொழுப்பு சேர்ந்து ஒபிஸிட்டியை ஏற்படுத்தும்.

காலையில் காபி, டீ இவற்றுக்குப் பதிலாக சுக்கு சூப்பை சாப்பிடுவது ஒபிஸிட்டிக்கு நல்லது. மலச்சிக்கலும் ஏற்படாது. சுக்கு சூப் செய்வது சுலபம்தான்.

கரும்புள்ளிகள் எளிதில் நீங்க

முள்ளங்கி :

முள்ளங்கியை சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து, உலர வைத்து கழுவினாலும், கரும்புள்ளிகள் மறையும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது நூறு சதவீத உண்மை. அந்த அகத்தை மாசற்ற வகையில் பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமானது.

அழுக்கு படிந்த முகத்தை நாம் கண்ணாடியில் பார்க்கும்போதே தன்னம்பிக்கை என்பது பறிபோய்விடும். அதனை நம்பிக்கையாக மாற்ற மேற் கூறிய மாஸ்க் வகைகளை (குறைந்த செலவு மட்டுமே) பயன்படுத்தி அகத்தை மேலும் அழகுற செய்வோம்.

சிறுநீரகக் கல் கரைய இஞ்சி- நெல்லிக்காய் ஜூஸ்

சிறுநீரகக் கல் கரைய இஞ்சி- நெல்லிக்காய் ஜூஸ் 



இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும்.இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும்.

இளநரை போக்க மூலிகை எண்ணெய்

இளநரை போக்க மூலிகை எண்ணெய்


உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே. இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது.

Wednesday, February 11, 2015

குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?

குலதெய்வங்கள் என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன...? குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?

என்பவைகளை பற்றி. சற்று விரிவாக ஆராயலாம்..வாருங்கள் !!!!!
நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி  தாத்தா பாட்டி வணங்கி வந்த தெய்வம் தான் நம் குலதெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார்வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்துகவனித்தால் உணரலாம். அதுதான்‘ கோத்திரம்’ என்னும்ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.
பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்தவழி பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கை துணையாக கை பிடித்திருப்பார்கள்.
எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண்சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால்,ரிஷி பரம்பரையானது சங்கிலி கண்ணி போல அறுடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்தவிஷயமாகும்.
இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.அந்த கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம் போகாமலும் இருக்கலாம்.அதற்கு உத்தரவாதமில்லை.
ஆனால், குலதெய்வகோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால்அங்கு கொண்டு செல்லப்பட்டு,முடி காணிக்கை என்ற முதல் மொட்டை மற்றும் காது குத்து என்று தொடர்ந்து வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம்பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.

Wednesday, February 4, 2015

நெற்றியில் பொடுகால் ஏற்படும் சொரசொரப்பை போக்கும் சிகிச்சை

நெற்றியில் பொடுகால் ஏற்படும் சொரசொரப்பை போக்கும் சிகிச்சை


தலை வாரும்போது நெற்றியில் சீப்பு படுதல் தலையைத் துவட்டும்போது ஏற்படும் அழுத்தம், பொடுகு, முகத்தில் அதிக முடி இருப்பது... இந்தக் காரணங்களால் நெற்றியில் முள் போன்று பொரிப்பொரியாகத் தோன்றும். இதற்கு நிரந்தரமான தீர்வு உண்டு. 

ரோஜா இதழ்களை சந்தன மனையில் வைத்து இழையுங்கள். அதே அளவு சந்தனம் சேர்த்துக் குழையங்கள். பொரி இருக்கும் இடங்களில் இதைப் போட்டு, பத்து நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்துவந்தால், பொரிகள் மறையத் தொடங்கும். இதோடு, கீழே உள்ள சிகிச்சையையும் தொடர்ந்து செய்யுங்கள்.