Wednesday, February 25, 2015

ராஜ்மா சீஸ் சப்பாத்தி

ராஜ்மா சீஸ் சப்பாத்தி



தேவையான பொருள்:-


  • கோதுமை மாவு - 1 கப்
  • மூன்று வண்ணங்களைக் கொண்ட குடமிளகாய் - 3
  • ராஜ்மா - 1 கப்
  • பச்சைமிளகாய் பேஸ்ட் - 1 ஸ்பூன்
  • வெண்ணெய் - 1 ஸ்பூன்
  • பாலாடைக்கட்டி - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு
  • பூண்டு - 8 பல்
  • கொத்தமல்லி - சிறிது


செய்முறை:-

முதலில் ராஜ்மாவை இரவே ஊறவைக்க வேண்டும். பின்பு அவற்றை 7 விசில் வைத்து வேகவைத்துக்கொள்ளவும். 

பின்பு கோதுமை உப்பு போட்டு பிசைந்து வைத்துக்கொள்ளவும். பிசைந்த மாவில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பிசைந்துக்கொள்ளவும். இவற்றை 1 மணி நேரம் ஊறவிடவும் அப்போதுதான் சாப்டாக வரும்.

அதன் பின்பு குடமிளகாயை சிறிதுசிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
பூண்டை சிறிதுசிறிதாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லி நறுக்கிக்கொள்ளவும்.

அதன்பின்பு வாணலில் அடுப்பில்வைத்து வெண்ணெயை போடவும். வெண்ணெய் இல்லை என்றால் எண்ணெயை சேர்த்துக்கொள்ளலாம். வெண்ணை சூடானதும் நறுக்கி வைத்த பூண்டை போட்டு 2 நிமிடம் வதக்கவும். பின்பு குடமிளகாயை போட்டு 2 நிமிடம் வதக்கவும். உங்களுக்கு விருப்பம் இருந்தால் வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம். வேகவைத்துள்ள ராஜ்மாவை போட்டு நன்கு மசித்துக்கொள்ளவும். அதன் பின்பு பச்சைமிளகாய் பேஸ்ட் சேர்க்கவும். இவற்றை வதக்கிய பிறகு உப்பு சேர்த்துக்கொள்ளவும். வேகவைத்துள்ள ராஜ்மாவில் உப்பு சேர்த்திருந்தால் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். நன்கு கிளறிய பிறகு. கொத்தமல்லியை தூவி இறக்கி வைக்கவும்.

ஊறிய சப்பாத்திமாவை நன்கு பிசைந்து ஒரே அளவாக எலுமிச்சை அளவு உருண்டிக்கொள்ளவும். உருட்டிய மாவை நன்கு திரட்டி வைத்துக்கொள்ளவும். பின்பு தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு எடுக்கவும். பின்பு இன்னொரு சப்பாத்தியைப் போட்டு (அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளவும்)  அதன் மேல் சீஸ் தடவி செய்துவைத்துள்ள தொக்கை வைத்து சப்பாத்தி முழுமையாக பரப்பவும். இதன் மேல் சீஸ்யை தடவவும். பின்பு செய்து வைத்துள்ள சப்பாத்தியை அதன் மேல் போட்டு இரண்டு சப்பாத்தியையும் தோசைக்கல்லில் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும். ராஜ்மா சீஸ் சப்பாத்தி ரெடி. குழந்தைகளுக்கு பீட்சா போல் விரும்பி  சாப்பிடுவாங்க   

No comments:

Post a Comment