Wednesday, March 4, 2015

பொரித்த சிக்கன்

பொரித்த சிக்கன்



தேவையான பொருட்கள்

  • சிக்கன்                         - அரை கிலோ
  • பிரட் தூள்                 - 1 கப்
  • இஞ்சி, பூண்டு (பேஸ்ட்)          - தேவையான அளவு
  • முட்டை                         - 2
  • ஆரிகேனோ                            - 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள்                            - 1 ஸ்பூன்
  • மிளகுதூள்                 - 2 ஸ்பூன்
  • உப்பு                            - தேவையான அளவு
  • எண்ணெய்                   - தேவையான அளவு


செய்முறை:
சிக்கனை துண்டுகளாக எடுத்துக்கொள்ளவும். பின்பு அவற்றில் மேல் மஞ்சள்தூள், உப்பு, மிளகு தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் இவைகளை சிக்கன் தூண்டுகளில் போட்டு அரை மணி நேரம் ஊறவிடவும். (அல்லது குளிர்சாதனப்பெட்டியில் வைத்து எடுத்துக்கொள்ளலாம்). அதன் பின்பு முட்டை உடைத்து வெள்ளை கருவை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஊறிய சிக்கன் தூண்டுகளை வெள்ளை கருவில் முக்கி எடுத்து பிரண்ட் தூளில் பிரட்டி எடுத்துக்கொள்ளவும். பின்பு வாணிலில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் சிக்கன் துண்டுகளை போட்டு எடுக்க வேண்டும். பொரித்த சிக்கன் தயார்.

குறிப்பு: குளிச்சாதனப்பெட்டியில் வைத்து சிக்கன் துண்டுகளை உடனே செய்தால் எண்ணெய் இழுத்துக்கொள்ளும். 

No comments:

Post a Comment