Wednesday, March 4, 2015

பப்பாளி காய் காரகரி

பப்பாளி காய் காரகரி



தேவையான பொருட்கள்:-

  • பப்பாளி காய்         - 2
  • காய்ந்த மிளகாய் - தேவையான அளவு
  • மஞ்சள் தூள்        - கால் ஸ்பூன்
  • தனியா தூள்        - கால் ஸ்பூன்
  • தக்காளி        - 1
  • நெய்        - தேவையான அளவு
  • உப்பு        - தேவையான அளவு
  • வெங்காயம்        - 1
  • மிளகு       - சிறிதளவு
  • சீரகம்       - தேவையான அளவு
  • தேங்காய்       - 2 கால் முடி
  • கரமாசால தூள்       - 1 ஸ்பூன்


வறுத்து பொடிக்க:-

  • மிளகாய்           - 2
  • கசாகசா         - சிறிதளவு
  • சோம்பு         - சிறிதளவு
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • முந்திரி         - எண்ணிக்கையில் 7
  • பூண்டு         - 5 பல்


செய்முறை:-
முதலில் கடாயில் வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து பொடித்துக்கொள்ளவும்.
அதனுடன் தேங்காய் போட்டு தண்ணீர் விட்டு நன்கு மைய அரைத்துக்கொள்ளவும். பின்பு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும் அதனுடன் வெங்காயம், பப்பாளிக்காய் போட்டு வதக்கவும். பின்பு தக்காளியைப்போட்டு வதக்கவும். மஞ்சள் தூள், தனியா தூள், கரமாசால தூள் போட்டு வதக்கியவுடன் அரைத்த கலவையை சேர்த்து கொதிக்கவிடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சைவாசம் போகும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும். தயார் பப்பாளி காய் காரகரி. 

குறிப்பு: இவற்றை நாண், சப்பாத்தி, தோசை. இட்லி இவைகளுடன் தொட்டு சாப்பிடலாம். 




No comments:

Post a Comment