Wednesday, March 4, 2015

கோழி கொழுக்கட்டை

கோழி கொழுக்கட்டை




தேவையான பொருட்கள்:-

  • கோழி கறி        - ¼ கிலோ
  • பச்சரிசி மாவு - 1 கப்
  • வெங்காயம்         - 1
  • இஞ்சி, பூண்டு விழுது - தேவையான அளவு
  • கர மசாலா         - சிறிதளவு
  • மிளகாய் தூள் - தேவையான அளவு
  • உப்பு         - தேவையான அளவு
  • கொத்தமல்லி - தேவையான அளவு
  • எண்ணெய்         - சிறிதளவு


செய்முறை:-

முதலில் பச்சரிசியை 1 மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து நன்கு அரைத்து சளித்துக்கொள்ளவும். அவற்றை ஆவியில் வைத்து வேகவைத்துக்கொள்ளவும். அதற்க்குள் கோழியில் மிளகாய் தூள் சேர்த்து பிசைந்து அரை மணிநேரம் ஊறவிடவும். பின்பு ஊறிய கோழியை எண்ணெயில் போட்டு எடுக்கவும். அவற்றை சூடு தணிந்தவுடன் மிக்ஸியில் போட்டு தேங்காய் துருவல் போல் எடுத்துக்கொள்ளவும். பின்பு வாணிலில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது தேங்காய் துருவல் போன்ற கோழிக்கறியையும் சேர்த்து வதக்கவும். பின்பு கரமசாலா தூள், உப்பு மற்றும் கொத்தமல்லி தூவி வசம் போகும் வரை வதக்கி எடுத்துக்கொள்ளவும். வேகவைத்த பச்சரிசி மாவில் உப்பு மற்றும் சுடு தண்ணீர் ஊற்றி மாவையை மிருதுவாக பிசைந்துக்கொள்ளவும். அவற்றில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி பிசையவும். அவற்றை எலுமிச்சை அளவு எடுத்து உருட்டி வைத்துக்கொள்ளவும். இதில் பூரணம் வைப்பது போல் கோழிக்கறி கலவையை வைத்து உருண்டையாக பிடித்துக்கொள்ளவும். பின்பு இட்லி தட்டில் எண்ணெய் தடவி இந்த உருண்டைகளை வைத்து வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். சூப்பரான கோழி கொழுக்கட்டை தயார்.

No comments:

Post a Comment