Wednesday, March 4, 2015

மணத்தக்காளி சூப்

மணத்தக்காளி சூப்


தேவையான அளவு:-

  • மணத்தக்காளி - அரை கட்டு
  • வெங்காயம்         - 1
  • தக்காளி                  - 1
  • உப்பு          - தேவையான அளவு
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • காய்ந்த மிளகாய்         - 2
  • மிளகு தூள்         - சிறிது
  • அரிசி ஊற வைத்த தண்ணீர் - 2 டம்பளர்
  • எலுமிச்சை                 - அரை மூடி
  • நல்லெண்ணெய்                 - தேவையான அளவு
  • பெருங்காயம்         - தேவையான அளவு
  • உளுந்து                 - தேவையான அளவு


செய்முறை

முதலில் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும். உளுந்து, மிளகாய், வெங்காயம், பெருங்காய தூள், கறிவேப்பிலை, தக்காளி இவைகளை ஒவ்வொன்றாக போட்டு 2 நிமிடம் வதக்கவும். பின்பு மணத்தக்காளி கீரையை போட்டு வதக்கவும். நன்கு வதங்கியவுடன் இவற்றை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும். பின்பு அரிசியை கழுவினா 3 வது தண்ணீரை எடுத்துக்கொள்ளவும். அந்த தண்ணீரை கொதிக்கவிட்டு அதில் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்கவிடவும். அதனுடன் உப்பு, மிளகு தூள் இவற்றை சேர்த்து கலக்கி இறக்கவும். இறக்கியவுடன் எலுமிச்சை சாறு 5 சொட்டு விட்டு கலக்கியவுடன் மணத்தக்காளி சூப் தயார்.

No comments:

Post a Comment