Sunday, October 27, 2013

மூலிகை மருத்துவம் - அருள் தரும் அரசமரம் மருத்துவப் பயன்கள்


வேம்பிற்கு அடுத்தபடியாக நம் வழிபாடுகளில் முக்கிய இடம் பெறுவது அரச மரம். இந்த மரம் இருக்கும் இடங்களில் எல்லாம் விநாயகப் பெருமாள் குடி கொண்டிருப்பதைக் காணலாம். 

செய்கை -விதை -மலம் இளக்கி,
 இலை கொழுந்து -உடல் வன்மை பெருக்கும்,சூலகத்தை உண்டாக்கும் ,கருப்பை கொலரை போக்கி -சூல் கொள்ள செய்யும் 

மூலிகை மருத்துவம் - வசம்பின் மருத்துவ குணம்

நமது தமிழ்நாட்டில் மருந்துப் பொருளான வசம்பை அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள் குழந்தைகள் நோய்க்கு சஞ்சீவியாகத் துணை நிற்பது இதுவே. அதனை பிள்ளை வளர்ப்பான் என்றே செல்லப் பெயரிட்டு அழைப்பர் மக்கள்.

முனிவர்கள் சித்தர்களும் பெயரைச் சொல்லாமல் இம்மருந்தை வழங்குவார்கள் பாட்டி வைத்தியத்தில் இதன் பெயரே பேர் சொல்லாதது ஆகும். இது பிறந்த குழந்மைக்கு உரை மருந்து என்பதால் திருஷ்டி காரணமாகவும், பெயர் சொன்னால் மருந்து வேலை செய்யாது என்ற மரபு உள்ளதாலும் இதைப் பெயர் சொல்லி வழங்கக்கூடாது.

பழங்களின் மருத்துவம் - எலுமிச்சைப் பழத்தினால் விலகும் நோய்கள்

எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் இறைவன் என்பin; போல எலுமிச்சைப்பழம் உலகெங்கும் நிறைந்திருப்பதோடு மக்களுக்கு அன்றாடம் உணவுப் பொருளாhகப் பயன்படுகிறது. குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிரம்பி மனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களை குணமாக்கும் சர்வரோக நிவாரணியாக உதவுகிறது.

தெய்வ வழ்ப்பாட்டில் அம்மனுக்கு எலுமிச்சைப்பழ மாலை சாத்தி வழிபடுவது வழக்கத்தில் உள்ளது.