Sunday, October 27, 2013

மூலிகை மருத்துவம் - அருள் தரும் அரசமரம் மருத்துவப் பயன்கள்


வேம்பிற்கு அடுத்தபடியாக நம் வழிபாடுகளில் முக்கிய இடம் பெறுவது அரச மரம். இந்த மரம் இருக்கும் இடங்களில் எல்லாம் விநாயகப் பெருமாள் குடி கொண்டிருப்பதைக் காணலாம். 

செய்கை -விதை -மலம் இளக்கி,
 இலை கொழுந்து -உடல் வன்மை பெருக்கும்,சூலகத்தை உண்டாக்கும் ,கருப்பை கொலரை போக்கி -சூல் கொள்ள செய்யும் 


அரசவேர் மேல் விரணம் ஆற்றுமுவ் வித்து
வெருவவரும் சுக்கில நோய் வீட்டும் -குரல் வறள்வி
தாகமொழிக் குங்கொழுந்து தாது தரும் வெப்பகற்றும்
வேக முத்தோ டம்போக்கும் மெய்      (அகத்தியர் குண பாடம் )

அரச மரத்தைச் சுற்றிவிட்டு அடி வயிற்றைத் தொட்டுப் பார்த்தாள் என்று ஒரு பழமொழி உண்டு. இந்த மரம் சூலகத்து (கரு) நோய்களைப் போக்கும் தன்மை கொண்டது. அதனால் தான் இந்தப் பழமொழி தோன்றியது போலும்.

தெய்வீகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள பல்வேறு மருத்துவப் பயன்களையும் கொண்டு காணப்படுகிறது.

நன்கு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

மேலும் இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் கலந்து காலை நேரங்களில் இம்மரத்தை சுற்றி வரும்போது நாளமில்லா சுரப்பிகளில் செயல் பாடுகளைத் தூண்டுகின்றன என்றும் கூறுகின்றனர்.இதன் இலை, வித்து, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.

பயன்கள்:


  • அரசமரத்தின் இலைக் கொழுந்தை அரைத்து மோருடன் கரந்து குடித்தால் வயிற்றுக்கடுப்பு குணமாகும்.
  • அரச இலைச் கொழுந்தைப் பசும் பாலில் இட்டுக் காய்ச்சி சர்க்கரை சேர்த்துக் குடிக்க சுரம் குணமாகும்.
  • அரச இலை, மாவிலை, நாவல் இலை, அத்தி இலை இவற்றைச் சம பங்கு எடுத்து நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்துவர பெண்களுக்க மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்.
  • அரச மரத்தின் பழுப்பு இலைகளை எரி;த்துத் தூளாக்கி, தேங்காய் எண்ணெயில் கலந்து தடவிவலி, தீப்புண், அதனால் ஏற்பட்ட தழும்புகள் குணமாகும்.
  • அரசம்பட்டையை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிவாய் கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும்.
  • இதன் பட்டையை வறுத்துத் தீய்ந்த பின்னர் தூளாக்கி தேங்காய்எண்ணெயில் குழைத்துப் பூசிவர ஆறாத புண், சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.
  • இதன் பட்மையை இடித்துப் பொடியாக்கி 200 மில்லி லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் தூளைப் போட்டு காய்ச்சி வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்துக் குடித்துவர இருமல் தணியும்.
  • அரசம்பட்டைத் தூளில் 10-15 கிராம் எடுத்துக் கொண்டு, அதைத் தண்ணீரில் கலந்து காய்ச்சிக் குடித்துவர சொறி, சிரங்குகள் குணமாகும்.
  • அரசமரக் குச்சியைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி நீரில் விட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதில் தேன் சேர்த்துக் குடிக்க பித்தம் தணியும்.
  • அரச விதையைப் பாலில் கலந்து குடித்து வர ஆண்மை அதிகரிக்கும்.
  • அரசமரக் கொழுந்து, ஆலங்கொழுந்து அத்திக்கொழுந்து இவற்றைச் சம அளவில் எடுத்து அரைத்து உட்கொண்டு வந்தால் மூலத்தில் ரத்தம் வடிதல் நிற்கும்.
  • அரச விதை, ஆலம் விதை நம அளவு எடுத்து அரைத்து. அதைப் பாலில் கலந்து உண்ண ரத்த வாந்தி நிற்கும்.
  • அத்தி, இத்தி, ஆல், அரசு - இந்த நான்கு மரப்பட்டைகளையும் சேர்த்து நால்மரப்பட்டை என்று சொல்வார்கள். இவைகளைக் கொண்டு செய்யப்பட்ட நால்பமராதி தைலம் தோல் நோய்களுக்கு வெளிப்புற உபயோகமாகப் பயன்படுகிறது.
  • கலப்பட குங்குமம் இடுவதால் நெற்றியில் தோல் நீல நிறமாக மாறுவதுடன் அந்த இடத்தில் அரிப்பும் ஏற்படும். இதற்கு அரச மரத்தின் பட்டையை நீரில் கரைத்து. பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் பற்றிட்டு வந்தால், பாதிப்பினால் ஏற்பட்ட நீல நிறம் மாறி, பழைய ஒரிஜனல் நிறம் கிடைக்கும்.
  • அரச மரத்தைக் குத்துவதால் வடியும் பாலைக் காலில் உள்ள பித்த வெடிப்புகள் மீது தொடர்ந்து தடவி வந்தால் அது விரைவில் குணமாகும்.
  • இதன் பொருள் அரச மரம் குலம் தழைக்கச் செய்யும் பிள்ளைப்பேறை உண்டாக்கும். சூலகத்தை சீராக்கும். சூலகத்தில் உண்டான நோய்களை போக்கும் என்பதே.
  • அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.
  • அரச இலை கொழுந்துகளை எடுத்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வன்மை கொடுப்பதுடன் சுரக்காய்ச்சல் குறையும். முக்குற்றத்தையும் அதாவது வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சீராக்கி உடலை சீராகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
  • அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.
  • அரச விதைகளைக் காயவைத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் பாலில் கலந்து உண்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மலத்துடன் இரத்தம் வெளியேறுதல் குணமாகும்.
  • அரசமரப் பட்டையை சிதைத்து நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் சொறி, சிரங்கு குணமாகும். உடல் வெட்கை குறையும். வியர்வை நாற்றம் நீங்கும். சருமம் பளபளப்பதுடன், சரும நோய்கள் அண்டாது. சருமத்தில் சுருக்கம் ஏற்படாது.
  • அரசமரப் பட்டையை சிதைத்து பொடியாக்கி நாள்பட்ட புண்களின் மீது தடவினால் புண்கள் விரைவில் குணமாகும்.
  • அரச மரப் பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் அந்த நீரால் வாய் கொப்பளித்து வந்தால் வாயில் உள்ள புண்கள் விரைவில் குணமாகும்.
  • வெள்ளைப்படுதல் நோய் கொண்ட பெண்கள் இந்த நீரால் பிறப்புறுப்பை கழுவி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். அதனால் ஏற்படும் மற்ற பாதிப்புகள் குறையும்.

பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். இந்துக்களின் வழிபாட்டில் வேம்பு, ஆல், அரசு என பல மரங்களுக்கு முக்கிய இடமுண்டு. அனைத்து மரங்களையும் விட அரசமரத்திற்கு தன் சிறப்பு அதிகம்.

ராஜவிருட்சம்

அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் ஈசனும் அருள்புரிவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன அதனாலேயே அரசமரம் ராஜ விருட்சம் என்று அழைக்கப்படுகிறது. 'மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்" என்று கீதையில் கண்ணன் கூறியிருக்கிறான். புராதான காலம் தொட்டே அரச மரம் இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இதன் பூர்வீகத்தை இந்தியா, இலங்கை, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடையது என்கின்றனர். ஆனால் இதன் பூர்வீகம் இந்தியாதான் என்பதற்கு சான்றுகள் உள்ளன.

போதிமரம்

அரசமரம் இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் புனித மரமாகும். புத்தபிரான் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக நாம் அறிவோம். அந்த போதிமரம் என்பது அரச மரம்தான். அரசுநீழலிருந்தோன் என சூடாமணி நிகண்டு கடவுட் பெயர் தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்டு நெடிய மரம், அழகான இலைகள் என்று பரந்து விரிந்து காணப்படும் 

விஞ்ஞான உண்மை

அரசமரத்தை சுற்றினால் குழந்தை பேறுகிடைக்கும் என்பது என்பது ஒரு நம்பிக்கை. இதன் காரணமாகவே “அரசினை நம்பி புருசனை கைவிட்டாள்" என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளளது. அரசமரம் வெளியிடும் காற்றில் பெண்களின் மாதச்சுழற்சி மற்றும் அது சம்பந்தமான சுரப்பிகள் சீரடைகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது

'அரச மரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள் "என்ற பழமொழி உண்டு. இதன் பொருள் அரச மரம் குலம் தழைக்கச் செய்யும் பிள்ளைப் பேற்றை உண்டாக்கும். சூலகத்தை சீராக்கும். சூலகத்தில் உண்டான நோய்களை போக்கும் என்பதே. அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.

கருப்பை கோளாறு

அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் ( 1 மண்டலம் ) அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

அரச மரத்தின் இலையை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு மாதவிலக்குக் காலங்களில் கஷாயம் செய்து அருந்தி வந்தால் மாதவிலக்கில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

பிராணவாயு

நன்கு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் கலந்து காலை நேரங்களில் இம்மரத்தை சுற்றி வரும்போது நாளமில்லா சுரப்பிகளில் செயல் பாடுகளைத் தூண்டுகின்றன என்றும் கூறுகின்றனர். இதன் இலை, வித்து, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. அதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களுள் ஒன்றான அரச மரத்தை நட்டு அதன் பயனை நாமும், நம் சந்ததியினரும் பெற வழி செய்வோம்

அதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களுள் அரச மரமும் ஒன்று. எனவே அரச மரத்தை நட்டு அதன் பயனை நாமும், நம் சந்ததியினரும் பெற வழி செய்வோம்.

No comments:

Post a Comment