Sunday, October 27, 2013

பழங்களின் மருத்துவம் - எலுமிச்சைப் பழத்தினால் விலகும் நோய்கள்

எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் இறைவன் என்பin; போல எலுமிச்சைப்பழம் உலகெங்கும் நிறைந்திருப்பதோடு மக்களுக்கு அன்றாடம் உணவுப் பொருளாhகப் பயன்படுகிறது. குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிரம்பி மனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களை குணமாக்கும் சர்வரோக நிவாரணியாக உதவுகிறது.

தெய்வ வழ்ப்பாட்டில் அம்மனுக்கு எலுமிச்சைப்பழ மாலை சாத்தி வழிபடுவது வழக்கத்தில் உள்ளது.


மேல்நாட்டில் இப்பழத்தையும் அதன் விதைகளையும், தோலையும் மருந்தாக்கிப் பயன்படுத்துகின்றனர். இதிலிருந்து வாசனை பொருள்களும் தயாரிக்கின்றனர்.

கண்களை பறிக்கும் மஞ்சள் நிறத்தில் மங்களகரமாய் காட்சி தரும் இப்பழத்தில் மனித உடல் ஆரோக்கியத்திற்கு மிக அவசியமான வைட்டமின சி சத்து சுண்ணாம்பு சத்து நிறைய இருக்கினறன.

எலுமிச்சைப்பழத்தின் தனிச்சிறப்பு இதன் ரசத்தில் தான் இருக்கிறது. இந்த ரசத்தில் பாஸ்பரஸ், சிட்ரிக் ஆசிட், பொட்டாசியம் போன்ற மூலப்பொருட்கள் இருப்பதால் இது நம் உடலுக்கு சகல விதத்திலும் உதவுகிறது.

நாம் பிழிந்து தூக்கி எறியும் தோலில்கூட கார்போஹைட்ரேட் (மாவுப்பொருள்) புரதம், எடலுக்கு தேவையான (நன்மை செய்யும்) கொழுப்பு பொருள்கள் இருப்பதாக கண்டறிந்ததால்ஈ தோலையும் மேல் நாட்டினர் உணவுப் பொருளோடு தினம் பயன்படுத்தி, உடல் ஆரோக்கிறம் காண்கின்றனர்.

இப்பழத்தின் தோல் எக்ஸ்ரேயினால் (கதிரியக்கத்தினால்) ஏற்படும் தாக்கத்திலிருந்து நம்மை காக்கிறது என்பதிலிருந்து இப்பழத்தின் மிக உயர்ந்த தன்மையை புரிந்துகொள்ளலாம்.

இப்பழத்தில் 60 க்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் நம்மிடையே இரண்டு, மூன்று வகைகள் தான் பயன்பட்டு வருகின்றன.
தினமும் காலையில் எலுமிச்சை பழச்சாற்றைப் பருகி வந்தாலே போதும். நோய்கள் நம்மை அண்டாது காரணம் இதிலுள்ள சத்தானது நோய்க் கிருமிகளை எதிர்த்துத் தாக்கி நம்மைப் பாதுகாக்கும் சக்தி கொண்டது.

இப்பழத்திலுள்ள சத்துக்களின் மதிப்பீடு:


  • நீர் (ஈரப்பதம்) - 50.0 கிராம்
  • கொழுப்பு         - 1.0 கிராம்
  • புரதம்         - 1.4 கிராம்
  • தாதுப்பொருள் - 0.8 கிராம்
  • மாவுப்பொருள் - 11.0 கிராம்
  • நார்         - 1.2 கிராம்
  • சுண்ணாம்பு சத்து - 0.80 மி.கி
  • பாஸ்பரஸ்         - 0.20 மி.கி
  • இரும்புச்சத்து - 0.4 மி.கி                 
  • தையாமின்         - 0.2 மி.கி
  • கரோட்டின்         - 12.0 யு. ஜி
  • ரைபோஃபிளேவின்- 0.2 மி.கி
  • நியாசின்         - 0.1 மி.கி
  • வைட்டமின் ஏ - 1.8 மி.கி
  • வைட்டமின் பி1       - 1.5 மி.கி
  • வைட்டமின் சி - 1.5 மி.கி
  • வெப்ப அளவு - 17.0 கலோரி

எலுமிச்சைப் பழத்தினால் விலகும் நோய்கள்:

இரத்த அழுத்தம் கட்டுப்பட:

இன்றைய நவநாகரீக மக்களிடம் அதிகமாகக் காணப்படும் நோய்களில் ஒன்று இரத்த அழுத்தம் இதனைக் கட்டுப்படுத்த எளிய வழிகளில் ஒன்று, தினசரி ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சை பழரசத்தைக் கலந்து காலை, மாலை பருகிவந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

தாகம் தணிய:

ஒரு எலுமிச்சைப்பழத்தை பிழிந்து சாறு எடுத்து இரு டம்ளர் தண்ணீரை இத்துடன் கலந்து சர்க்கரை சிறிது சேர்த்து பருகி வந்தால் தாகம் தணியும், களைப்பு நீக்கும். கோடைக்கு ஏற்ற எளிய பானம். (நீரழிவு நோயாளிகள் கோடைக் காலத்தில் காலையில் வெறும் வயிற்றில் தினமும் இச்சாற்றில் சிறிதளவு உப்ப கலந்து பருகுங்கள்) அதிக தாகம் எடுக்காது.

பேதியை நிறுத்த:

ஒரு பழத்தின் சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து குடித்து வர பேதி நிற்கும்.

வயிற்று பொருமலுக்கு, வாயு சேருதலுக்கு:

சிலர் கொஞ்சம் சாப்பிட்டால்கூட வயிற பெரிதாக பலூன்போல காணப்படும். வாயுவும் சேர்ந்து தொல்லை கொடுக்கும்.

இவர்கள் எருமிச்சைப்பழத்தை பிழிந்து வெந்நீரில் கலந்து அடிக்கடி பருகி வந்தால் மேற்கண்ட குறைபாடுகள் தீரும்.

கல்லீரல் சீர்கேடுகள் நீங்க:

எலுமிச்சைப்பழத்தை பிழிந்து அதில் தக்காளி சாறையும், தேனையும் கலந்து பருகி வந்தால் கல்லீரல் சீர்கேடுக்ள அகலும்.

சுகமான பிரசவம் ஆக:

காலையும், மாலையும் எலுமிச்சை ரசத்தை தண்ணீரில் கலந்து,அதில் ஒரு தேக்கரண்டி தேனையும் விட்டு நன்றாக கலந்து அருந்தி வரவேண்டும். இச்சாற்றை நான்காவது மாதத்திலிருந்தே பருகிவர சுகப்பிரசவம் ஆகும்.

உஷ்ண வயிற்றுவலி தீர:

ஒரு டம்ளர் நீரில் அரைமூடி எலுமிச்சைப்பழத்தைப் பிழிந்து அதில் சிறிது ஆப்பசோடாவை கலந்து பருக, உஷ்ண வயிற்றுவலி நீங்கும்.

அஜீரண கோளாறு நீங்க:

உணவு உண்ணுவதற்க ஒரு மணி நேரத்திற்கு முன்பாக எலுமிச்சைப்பழத்தின் சாறை பருக கோளாறுகள் நீங்கும்.

தலைவலி நிற்க:

ஒரு டம்ளர் சூடான ஸ்ட்ராங் காபியில் ஒரு எலுமிச்சைப் பழத்தின் பாதி அளவு சாற்றைப் பிழிந்து, உடனே குடித்துவி;ட்டால் தலைவலி நிற்கும். மூன்று நாட்கள் இவ்விதம் காலை-மாலை பருகிவர வேண்டும்.

வெட்டை சூடு நீங்க:

அம்மான் பச்சரிச் செடியின் இலைகளை மட்டும் பறித்தெடுத்து சுத்தம் செய்து அதை மைபோல அரைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு டம்ளரில் எலுமிச்சைப்பழச் சாற்றையும், நீராகாரத்தையும் கலந்துகொண்டு, அரைத்து வைத்திருக்கம் இலைக் கலவையை ஒரு கொட்டை பாக்களவு எடுத்துக் கலந்து காலை மட்டும் ஒரு வாரத்திற்கு பருகிவர வெட்டை நோய் தணியும்.

மலச்சிக்கல் தீர:

இன்றைய அவசர யுகத்தில் நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது பேர்கள் மலச்சிக்கலால் அவதிப்படுகிறார்கள். காரணம், நேரத்திற்கு உண்பதில்லை. அளவுக்க மீறிய நொறுக்குத் தீனிகள், உடற்பயிற்சியின்மை. நார்ச்சத்தில்லாத மாவுச்சத்து அதிகமுள்ள உணவுகளை உண்பது. அவசர அவசரமாக உண்பது, வயிற்றை நிரப்பினால் போதும் என்று கண்டதை உண்பது போன்றவற்றால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. மலச்சிக்கல் நாளடைவில் மனச்சிக்கலாகி பல நோய்களுக்க நாம் ஆளாசி நிரந்தர நோயாளியாகி விடுகிறோம்.

மலச்சிக்கலுக்கு விலையுயர்ந்த மாத்திரை மருந்துகள் வேண்டாம். மிகவும் எளிய மருந்து உள்ளது. காலையில் ஒரு நல்ல எலுமிச்சம் பழத்தை எடுத்து அதை சாறு பிழியுங்கள். அந்தச் சாற்றில் சோற்று உப்பைப் போட்டுக் கலக்கி மூன்று அல்லது நான்கு நாட்கள் விடாமல் பருகி வாருங்கள். மலச்சிக்கல் போய்விடும். பிறகு ஒழுங்கான உணவு, நேரத்திற்கு உண்பது. எளிய உடற்பயிற்சி செய்து வாருங்கள். வாழ்நாள் முழுவதும் சிக்கலே இருக்காது.

இருமல் நீங்க:

ஒர் எலுமிச்சம் பழச்சாற்றுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து காலை, மாலை இரு வேளை பருகிவர இருமல் தணியும்.

இரத்தக்கட்டுக்கு:

உடம்பில் எங்காவது அடிபட்டாலோ. வீங்கினாலோ ரத்தம் கட்டி நிற்கும். இதை தொட்டால் சிலருக்கு வலியெடுக்கும். இரத்தக்கட்டு நீங்க இதோ ஒரு வைத்தியம்

சுத்தமான இரும்புக் கரணடியால் ஒரு எலுமிச்சைப்பழத்தை பிழிந்து அதில் சிறிதளவு கரிய போளத்தைப் போட்டு (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்) காய்ச்ச, குழம்பு போல வரும்.

அதனை லேசான, பொறுக்கும் அளவுக்கான சூட்டுடன் இரத்தக்கட்டு உள்ள இடத்தில் பற்று போட வேண்டும்

இவ்வாறு காலை, மாலை இரு வேளையும், சுத்தம் செய்து பற்று பொட்டு வர குணமாகும்.

பித்தம் நீங்க:

எலுமிச்சைப்பழத்தை பிழிந்த சாற்றில் ஒரு தேக்கரண் டி அளவு சீரகத்தையும் அதே அளவு மிளகையும் கொஞ்சம் இந்துப்பையும் கலந்து அதை வெய்யிலில் காய விட வேண்டும். காய்நத பின் எடுத்து அரைத்து பொடியாக்கி சிறு பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். இவற்றை காலை,மாலை இரு வேளையும், அந்தத் தூளினை எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடிக்க வேணடும்.இவ்விதமான ஏழு நாட்கள் சாப்பிட்டு வர பித்தம் புணமாகும். அதோடு நல்ல பசியையும் தூண்டிவிடும்.

நீர்க்கடுப்பு நீங்க:

பலர் நீர்க்கடுப்பில் அவதியுறுகிறார்க்ள. அதற்கான எவ்வளவோ செலவு செய்கிறார்கள். அதற்கு மிகமிக எளிய செலவில் மருத்துவம் காணலாம்.
ஒரு வாரத்திற்கு காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு உப்பு கலந்து எலுமிச்சை சாறை பருகி வந்தால் நோய் ஓடிவிடும்.

எல்லா காலத்திற்கும் ஏற்ற, மிகக் குறைந்த விலையில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சுறுசுறுப்பையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும் எலுமிச்சையை நாள்தோறும் பயன்படுத்தி நலமோடு வாழுங்கள்.


No comments:

Post a Comment