Monday, October 6, 2014

நீண்ட ஆயுளைத் தரும் மூக்கிரட்டை கீரை

மூக்கிரட்டை கீரை மண்ணில் புல் வெளிகளிலும், நிலங்களிலும் படர்ந்து வளரும் கொடி இனத்தை சார்ந்தது. இதில் இரண்டு வகைகள் உண்டு. பொதுவாக மூக்கிரட்டையானது அது சிறிய சற்று வட்டமான இலைகளையும் சிவந்த பூக்களையும் கொண்டு தரையில் படரும் பூண்டு வகை ஆகும். 

இதைப் போலவே உருவம் கொண்டு சற்று பெரிய இலைகளையும் தடுமனான, வட்டமான வடிவத்தையும் வெண்மையான பூக்களையும் கொண்டு, காம்புகள் சற்று பருமனாகவும் கொண்டு விளங்குவது. ஆயுர்வேத நூல்களின்படி மூக்கிரட்டை என்பது உஷ்ணத்தை தருகிற ஒரு மூலிகை ஆகும். 


சிறிது கசப்பும் வறட்டுத் தன்மையும் வாய்ந்தது. இது கபத்தை அழிக்க கூடியது. இரண்டு திசுக்களின் இடையே உள்ள தடையை அல்லது அடைப்பை போக்க வல்லது. இத்தன்மையால் மூட்டுக்களில் ஏற்படும் வீக்கம், வலி ஆகியவற்றுடன் ரத்தசோகை, இருமல், ஆஸ்துமா போன்ற நோய்களையும் குணப்படுத்த கூடியது. 

மேலும் உடல் வலியையும் போக்கக்கூடியது மூக்கிரட்டை ஆகும். மூக்கிரட்டையின் வேரும் மருத்துவ குணம் வாய்ந்தது ஆகும். வேரைச் சேகரித்து சுத்தப்படுத்தி பொடித்து பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம். மூக்கிரட்டை நீண்ட ஆயுளைத் தருகிற கற்ப மூலிகையாகவும் மதிக்கப்படுகிறது. 

இது கண்களின் பார்க்கும் திறனை அதிகப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் தேங்கும் "பொட்டாசியம்'' என்னும் உப்பின் அளவைக் குறைக்கவல்லது. தொழுநோய், பெருநோய் என்று சொல்லப்படுகிற குட்ட நோயையும் போக்கக் கூடியது. 

மூக்கிரட்டைக் கீரையில் பல வகையான ரசாயன வேதிப்பொருள்கள் உள்ளன இவை இனப்பெருக்க உறுப்புகள், சீரண உறுப்புகள் , சுவாச உறுப்புகள், சிறுநீரகம் , ஈரல் மற்றும் அது தொடர்பான மஞ்சள் காமாலை, இதயம் மற்றும் இதய நாளங்கள் மற்றும் புற்றுநோய் ஆகியவற்றுக்கு மருந்தாகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

மேலும் மூக்கிரட்டைக் கீரையில் சத்து பொருள்களான 15 விதமான அமினோ ஆஸிட்கள், வேரில் 14 அமினோ ஆசிட்கள், ஐஸோ பால்மிட்டேட் அஸிடேட், பெகனிக் ஆஸிட், அராசிடிக் ஆஸிட், நீர்மைப்பட்ட கொழுப்பு அமிலங்கள் விட்டமின் `சி' விட்டமின் பி3, மற்றும் விட்டமின் பி2 கால்சியம் சத்து அடங்கியுள்ளன. 

மூக்கிரட்டைக் கீரை ஒரு ரசாயனத் தன்மை மிக்கது என்கிறது ஆயுர்வேதம். ரசாயனம் என்பது நீண்ட ஆயுளை அளிக்கவல்லது மட்டுமல்லாது இளமையை நீட்டிக்க வல்லது, மூளைக்கு புத்துணர்வையும் சுறு சுறுப்பையும் அளிக்க வல்லது. ஈரலை பலப்படுத்தவல்லது. 

நோயைத் தடுக்க கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. இவை மட்டுமின்றி கீழ்வரும் நீண்ட பட்டியலை ஒரு முறைக்கு இருமுறை படித்து மனதில் பதித்துக் கொள்ளுங்கள். 

இவை அவசியமானவையும் அதிசயமானவையும் கூட. மூக்கிரட்டைக் கீரை காய்ச்சலை போக்கக் கூடியது, முதுமையை தவிக்கக் கூடியது, வலிப்பை போக்கக் கூடியது, எவ்வித வீக்கத்தையும் கரைக்க கூடியது , ஒட்டுண்ணிகளுக்கு எதிரானது, தொற்று நோய்க் கிருமிகளுக்கு எதிரானது, ஆஸ்த்துமாவை போக்கக் கூடியது , வயிற்றுப் போக்கை தணிக்க வல்லது, கற்களை கரைக்க கூடியது , 

கடுப்பை குறைக்க வல்லது, குடற் புழுக்களை விரட்ட வல்லது, நுண்கிருமிகளுக்கு எதிரானது, உயர் ரத்த அழுத்தத்தைத் தணிக்க வல்லது, புண்களை ஆற்றக் கூடியது, ரத்தத்தைச் சுத்திகரிப்பது, குடல் வாயுவை போக்கக் கூடியது, சிறுநீரைப் பெருக்க வல்லது, 

கல்லீரலை பாதுகாப்பது,  இன உணர்வைத் தூண்டக் கூடியது, சுவாச நாளங்களைச் சுகப்படுத்தக் கூடியது, உடல் நச்சுக்களை முறிக்கவல்லது, சளி மற்றும் கோழையைக் கரைத்து வெளியேற்ற வல்லது, மலமிளக்க வல்லது, தேவையற்ற சுரப்பிகளை வற்றச் செய்வது, 

இதயத்துக்கு பலம் அளிப்பது, செரிமானத்தை சீர்படுத்துவது, பாலைச் சுரக்க வைப்பது, புற்றுநோய் செல்களைத் தடுக்கக் கூடியது என ஒரு நீண்ட மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளது. 

மூக்கிரட்டைக்கீரை மாலைக் கண் என்னும் இரவில் கண் தெரியாமையை குணப்படுத்தக் கூடியது. மேலும் கண்களின் உயர் ரத்த அழுத்தத்தை தணிக்க வல்லது. கண்களின் பார்க்கும் திறனை பலப்படுத்துவது அது மட்டுமின்றி பாம்புக்கடி விஷத்தை முறிக்கவும் வல்லது. 

No comments:

Post a Comment