Thursday, July 3, 2014

யோகாசனம் - இடையின் அளவை குறைக்கும் எளிய உடற்பயிற்சி


முதலில் விரிப்பில் குப்புற படுக்கவும்.பின்னர் காலின் முன் பாதத்தை தரையில் ஊன்றவும் கைகளை முட்டி வரை மடக்கி (படத்தில் உள்ளபடி) தரையில் வைக்கவும். இப்போது உங்கள் உடல் எடை கால் முன்பாதம் தாங்கியிருக்க வேண்டும்.

மூலிகையின் மருத்துவ குணம் - ஆரோக்கியம் தரும் அபூர்வ மூலிகை


ஆரோக்கியம் தரும் அபூர்வ மூலிகைகள் நம்மை சுற்றிலும் உள்ளன. ஆவைகளை எளிதாக வீட்டிலே வளர்த்து முழுபலனையும் பெறலாம்.

துளசி:-

இதனை சாப்பிட்டால் குடல், வயிறு மற்றும் வாய் தொடர்பான பிரச்சினைகள் தீரும் அது சிறந்த கிருமிநாசினி. துளசி இலையை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து பிறகு அந்த நீரை பருகினால் சர்க்கரை நோய் கட்டுப்படும் துளசி இலை ஊறிய நீரில் குளித்தால் வியர்வை நாற்றம் விலகும். 


ஞபாக சக்தி இன்மை, நரம்புத் தளர்ச்சி, ஆஸ்துமா, இருமல் மற்றும் தொண்டை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை சாப்பிட்டு வரலாம்.