Thursday, July 3, 2014

மூலிகையின் மருத்துவ குணம் - ஆரோக்கியம் தரும் அபூர்வ மூலிகை


ஆரோக்கியம் தரும் அபூர்வ மூலிகைகள் நம்மை சுற்றிலும் உள்ளன. ஆவைகளை எளிதாக வீட்டிலே வளர்த்து முழுபலனையும் பெறலாம்.

துளசி:-

இதனை சாப்பிட்டால் குடல், வயிறு மற்றும் வாய் தொடர்பான பிரச்சினைகள் தீரும் அது சிறந்த கிருமிநாசினி. துளசி இலையை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து பிறகு அந்த நீரை பருகினால் சர்க்கரை நோய் கட்டுப்படும் துளசி இலை ஊறிய நீரில் குளித்தால் வியர்வை நாற்றம் விலகும். 


ஞபாக சக்தி இன்மை, நரம்புத் தளர்ச்சி, ஆஸ்துமா, இருமல் மற்றும் தொண்டை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை சாப்பிட்டு வரலாம்.


மஞ்சள் கரிசலாங்கண்ணி:-

இது மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்து வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த கீரையில் சட்னி அல்லது துவையல் செய்;து சாப்பிட்டு வந்தால் ஞாகப சக்தி அதிகரிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படும். கல்லீரலைப் பலப்படுத்தும். குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சுத்திணறல், சளி, ஆஸ்துமா போன்றவைகளையும் சீர் செய்யும்.


மஞ்சள் கரிசலாங்கண்ணியை கழுவி, நிழலில் உலரவைத்து இடித்து பொடி செய்து சாப்பிட்டால் உடல் பொன்னிறமாக மாறும். இதனை எண்ணெய்யில் காய்ச்சி தலையில் தேய்த்தால் இளநரை நீங்கும்.

வல்லாரை:-


இந்த கீரையில் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் நிறைய உள்ளன. மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்தத்தைச் சுத்திகரிக்கும். ஆற்றல் இதற்கு உண்டு. ஞாபக சக்திக்கு இது சிறந்த மருந்து. உடலில் ஏற்படும் புண்களைக குணமாக்குவதுடன், மூளைச் சோர்வையும் போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கவும். இதயத்தை பலப்படுத்தவும், தாது விருத்திக்கும் சிறந்த மருந்தாகவும் அமைகிறது. வல்லாரைக் கீரையை பச்சையாக சாப்பிட்டால் குடல் புண், குடல் நோய், வாய்ப்புண், வாய்நாற்றம் போன்றவை நீங்கும்.

நிலவேம்பு:


இது சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது. நிலவேம்பை கசாயம் செய்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த சோகை உள்ளவர்கள் இதனை வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டால் ரத்த சோகையை குறைத்துவிடலாம். புசியைத் தூண்டும், சாதாரண காய்ச்சல் உள்பட அனைத்துவகையான காய்ச்சலையும் குணமாக்கும் சக்தி நில வேம்புக்கு உண்டு. இதன் தளிர்களை பறித்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஜுஸ் செய்து குடித்தால் நோய் எதுவும் எளிதில் தாக்காது.

பிரண்டை:-

இதன் தண்டை துவையல் செய்து சாப்பிடலாம். கால்சியம் அதிகம் இருப்பதால் வாரத்தில் இரண்டு நாட்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் எலும்புகளும், பற்களும் வலுப்பெறும். மூட்டுவலிக்கு மிகவும் பயனளிக்கக்கூடியது, வயிற்றுப்புண், வயிற்று வலி, அஜீரணம் போன்றவற்றைக் குணப்படுத்தும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, உடல் வலியை நீக்கும்.



திப்பிலி:-



திப்பிலிக்கொடி எல்லா இடங்களிலும் வளரும் திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் எடுத்து தேனுடன் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் இருமல், தொண்டையில் ஏற்படும் அசவுகரியங்கள், பசியின்மை, தாது இழப்பு ஆகியவை குணமாகும். கல்லீரல், இரைப்பையை வலுப்பெறச் செய்யும். தேமல் நோயை மறையச் செய்யும். திப்பிலிப் பொடி, கடுக்காய் கொடிணை சரி சமமாக கலந்து இலந்தைப்பழ அளவுக்கு இரண்டு வேளையாக மூன்னு மாதங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் மிகுந்த பலம்பெறும்.

கற்பூரவள்ளி:-


இதனை ஓமவல்லி என்றும் அழைப்பார்கள். இது வளருவதற்கு எட்டு மாதங்கள் ஆகும். இலை கசப்பு சுவையும், காரத்தன்மையும் கொண்டவை. இருமல், சளி, ஜலதோஷத்துக்கு அதன் இலை மற்றும் தண்டுப்பகுதி சிறந்த மருந்தாகும். இலையைச் சாறு எடுத்து சிறிது தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் இருமல் குணப்படும். சாறை நெற்றியில் வைத்து பற்று போட்டால் தலைவலியை போக்கும். குழந்தைகளின் அஜீரண வாந்தியை குணப்படுத்தும். கண் அழற்சிக்கும் உகந்தது. இலையை பஜ்ஜி செய்தும் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment