Wednesday, January 4, 2017

கிராமத்து மீன் குழம்பு

கிராமத்து மீன் குழம்பு




தேவையான பொருட்கள்


  • மீன் - அரை கிலோ
  • கடுகு - தேவையான அளவு
  • சீரகம் - தேவையான அளவு
  • வடகம் - தேவையான அளவு
  • உளுந்து – தேவையான அளவு
  • சின்ன வெங்காயம் - 10
  • மிளகு - 10
  • கறிவேப்பிலை - தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் (தாளிக்க) 
  • புளி – நெல்லிக்காய் அளவு


அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:-


  • கடலை பருப்பு - 1 ஸ்பூன்
  • வெந்தயம் - 1 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - காரத்திற்கு ஏற்ப
  • இஞ்சி - 1 துண்டு
  • பூண்டு - 7 பல்
  • தனியா - 1 ஸ்பூன்
  • சோம்பு - 1 ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் - 10
  • பச்சரிசி - 1 ஸ்பூன்
  • தக்காளி – 2


செய்முறை:-


முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள அனைத்துப்பொருட்களையும் ஒன்றான் பின் ஒன்றாக சேர்த்து வறுக்கவும். அதனுடன் தக்காளியை வதக்க வேண்டாம். வதக்கிய அரைத்தவுடன் அதனுடன் தக்காளியை போட்டு அரைக்கவும். பின்பு சட்டியில் எண்ணெய்யை ஊற்றி கடுகு, சீரகம், மிளகு, வடகம் ,வெங்காயம், கறிவேப்பிலை இவற்றை தாளித்து அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறவும். அதனுடன் புளி கரைசலை சேர்த்துஅதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும் பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும். பின்பு கழுவி வைத்துள்ள மீனையை சேர்த்து கொதிக்க விடவும்.மீன் வெந்தவுடன் இறக்கவும். மீன் போட்டவுடன் கிளறவும். அதன் பின்பு கரண்டியை போடக் கூடாது மீன் உடைந்து விடும்.

சளியை விரட்ட கிராமத்து மிளகு குழம்பு


(குறிப்பு: மீன் குழம்புடன் அரிசி சேர்த்தால் தீக்காக வரும். மீன் குழம்பை இரண்டு மணி நேரம் கழித்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.)